என் மலர்
திருநெல்வேலி
- குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையின் ஓரம் இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. குழந்தையின் சடலத்தில் இருந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசியது யார்? குழந்தை கள்ளக்காதலால் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா? அல்லது குழந்தை இறந்ததால் வீசி சென்றார்களா? குறை பிரசவத்தில் இறந்த குழந்தையை சாலையோரம் வீசினார்களா? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது.
- கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து மனு கொடுத்தனர்.
விவசாயிகள் சங்கம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளைநிலங்கள், ஏரி, குளம், நீர்நிலைகளின் நீர்வழிப்பாதை ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களின் விரும்பத்திற்கு ஏற்ப அபகரிக்க வழி உள்ளது.
இதனால் விவசாயிகளின் உரிமை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அதிகாரம் பறிபோகும் நிலை உள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி உதவி
மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் முகம்மது யூசுப் சுல்தான் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் கரீம்நகரில் கடந்த 14-ந் தேதி சிறுவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான். அவனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. எனவே முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் முத்துமணி தலைமையில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் லூர்துசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உரிமையாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கட்டாய கல்வி சட்டம்
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு இடமளிக்கப்படுகிறது. இவர்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் 2021-22 கல்வி ஆண்டு ஒதுக்கிய தொகையை மாநில அரசு இன்னும் விடுவிக்காமல் உள்ளது. இதனால் ரூ. 36 கோடி நிலுவையில் இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 118 நர்சரி பள்ளிகள், 20 மெட்ரிக் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
எனவே மாநில அரசு இந்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது.
- அப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை தச்சை சுப்பிரமணியன் வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு சேந்திமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் மாநகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளரும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர பிரதிநிதி சிவா, விவசாய அணி செயலாளர் தமிழரசன், வட்ட செயலாளர் சிந்து முருகன், ஜடாமுனி, மணிகண்டன், வார்டு பிரதிநிதி காந்தி, சேந்தி பாண்டி, சேந்தி மகேஷ், மந்திரமூர்த்தி, குட்டி, இலக்கிய அணி வில்சன், வினோத், ஆட்டோ மணி, முருகன், சிவா, தங்கவேல், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தே.மு.தி.க. சார்பில் வருகிற 28-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக சுமார் 30 வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
நெல்லை:
தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவை விட பலமடங்கு மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கூறி அதனை தடுக்க வலியுறுத்தியும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 28-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் ஆணையின்படி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வருகிற 28-ந் தேதி ஆலங்குளத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் கட்சி பொருளாளர் பிரேமலதாவுக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் வைத்து சிறப்பாக வரவேற்பு அளிப்பது எனவும், ஆலங்குளத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக சுமார் 30 வாகனங்களில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாளை பகுதி செயலாளர் அந்தோணி, தச்சைப்பகுதி செயலாளர் ராஜ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் குதுப்புதீன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, சங்கர்நகர் பேரூர் செயலாளர் சின்னபாண்டி மற்றும் நிர்வாகிகள் கணேசன், மாசானம், ரெயின்போ சிவா, சுப்ரமணியன், தினகரன் ,சங்கர், லயன் முருகன், குப்புசாமி, இருதயராஜ், மலுங்குபக்கீர்பாவா, முரளி, முத்து, மாரியப்பன், சேக் மைதீன், சிந்தா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி கையெழுத்து வாங்கினர்.
- மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செவல் முத்துராஜ், துரை, அனந்தராமன், சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வந்து மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
- சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
- நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதிகாரியாக கலந்து கொள்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பாளை-சேரன்மாதேவி
பாளை தாலுகாவில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 25-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேலப்பாட்டம் குறுவட்டத்து க்கான ஜமாபந்தி நடைபெறுகிறது. 26-ந்தேதி, 30-ந்தேதி முன்னீர்பள்ளம் குறுவட்டத்துக்கும், சிவந்தி ப்பட்டிக்கு 31-ந்தேதியும், பாளை குறுவட்டத்துக்கு 1-ந்தேதி, 2-ந்தேதி மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அலுவலராக கலெக்டர் கார்த்திகேயன் (நான்) கலந்து கொள்கிறார்.
இதேபோல் சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளிலும், முக்கூடல் குறுவட்டத்துக்கு 30-ந்தேதி, 31-ந்தேதி, பாப்பாக்குடி குறுவட்டத்துக்கு 31-ந்தேதி, சேரன்மாதேவி குறுவட்டத்து க்கு 1, 2-ந்தேதி ஆகிய நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதி காரியாக கலந்து கொள்கிறார்.
திசையன்விளை-நாங்குநேரி
திசையன்விளை தாலுகாவில் விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு 24, 25-ந்தேதி, திசையன்விளை குறு வட்டத்துக்கு 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அதிகாரியாக சேரன்மாதேவி சப்- கலெக்டர் முகமது சமீர் ஆலம் பங்கேற்கிறார்.
நாங்குநேரி தாலுகாவில் 24, 25-ந்தேதி களக்காடு குறுவட்டம், 26, 30, 31-ந்தேதி ஏர்வாடி, 31, 1-ந்தேதி பூலம், 1, 2-ந்தேதி மூலைக்கரைப்பட்டி, 2, 6, 7-ந்தேதி நாங்குநேரி குறுவட்டத்துக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் விம ல்ராஜ் கலந்துகொள்கிறார்.
ராதாபுரம்-மானூர்
ராதாபுரம் தாலுகாவில் 24-ந்தேதி லெவிஞ்சிபுரம், 24, 25-ந்தேதி சமூகரெங்கபுரம், 25, 26-ந்தேதி பழவூர், 26, 30-ந்தேதி பணகுடி, 30-ந்தேதி வள்ளியூர், 31-ந்தேதி ராதாபுரம் குறுவட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை ஆணை யர் சுகன்யா பங்கேற்கிறார். இந்த ஜமாபந்திகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோ லையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் தேயிலை பொருட்கள் விற்பனை மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தேயிலை பொருட்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று காக்காச்சி அருகே வந்தபோது திடீ ரென பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அரசு பஸ்கள் நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வேலைக்கு செல்லும் சில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டும் அவர்களது அலுவலக வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.
ஆனால் மற்ற பயன்பாட்டிற்கு பேருந்து வசதி இல்லாததால் நாலு முக்கு, ஊத்து பகுதி மக்கள் அங்கேயே முடங்கினர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் லாரியில் தேயிலை பொருட்கள் ஏற்றி விட்ட தோட்ட மேலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த தேயிலை தோட்ட நிர்வாகம் சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
- நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழக்காலனி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் அங்கு பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே ஜெ.ஜெ.நகரை சேர்ந்த முருகன் (37) ஹாலோபிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (39), பறையன்குளம் மேலத்தெருவை சேர்ந்த முகேஷ் (22) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் பிரகாஷையும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், பிரகாஷ் களக்காடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, இதுதொடர்பாக மாரியப்பன், முகேஷை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.
- திருவிழாவை முன்னிட்டு கும்ப பூஜைகள் நடைபெற்றது.
- மஞ்சள், பால் கொண்டு கொடி மரத்திற்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.
பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா
மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நெல்லையப்பா் கோவிலின் வடதிசையில் அமைந்துள்ள ஊர்க்காவல் தெய்வமான ஸ்ரீபிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், மித்ரசங்கீரணம், ரக்சாபந்தனதம் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து புண்யாகவாசனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், பால் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ம் நாள் திருநாளன்று சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிற 26-ந்தேதியும், 9-ம் திருநாளான 29-ந்தேதி தேரோட்டமும், 10-ம் திருநாளன்று நெல்லையப்பா் கோவில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நெல்லையப்பா் கோவில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
- அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், உதயகுமார், பரணி இசக்கி, வக்கீல் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங்பாண்டியன், மண்டல தலைவர்கள் பிவிடி. ராஜேந்திரன், அய்யப்பன், மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ். மணிவண்ணை, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முழு ஆற்றலோடு செயல்படுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு ள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் ரூ. 2.83 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த 3-ந் தேதி நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த முதியவர் வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்கு வதற்காக சென்ற போது ஈரடுக்கு மேம்பா லத்தின் சுவர் விழுந்து படுகாய மடைந்தார்.
தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 18-ந் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஓரு மனு கொடுத்தனர். அதில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு ள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே அ.தி.மு.க. 15-வது வட்டச் செயலாளர் பாறையடி மணி பெயரில் மாநகர பகுதியில் பல இடங்களில் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மேம்பால சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்தி னருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இதற்கு காரண மானவர் அதிகாரிகள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும், இல்லை யென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
- மேலப்பாளையத்தில் 2 இடங்களில் மறுசுழற்சி, மறுபயன்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
- மறுசுழற்சிக்கு தேவைப்படும் பொருட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு அனுப்பப்படும்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், மக்காத குப்பைகளை பொது மக்கள் வாறுகால், கால்வாய்களில் வீசிவதை தடுக்கும் விதமாகவும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாநகர நல அலுவலர் சரோஜா அறிவுரையின் பேரில், மாநகர பகுதி முழுவதும் உள்ள சுகாதாரத்துறை வார்டு அலுவலகங்களில் என் வாழ்க்கை என் சுத்தமான நகரம் என்ற தலைப்பில் குப்பையை குறைப்பதற்காக மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 17 வார்டு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் நெல்லை மண்டலத்தில் 3 இடங்கள், தச்சநல்லூர் மண்டலத்தில் 2 இடங்கள், பாளை மகாராஜாநகர் மற்றும் மேலப்பாளையத்தில் 2 இடங்களிலும் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
டவுன் தொண்டர் சன்னதி வார்டு அலுவலகத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இந்த மையம் திறக்கப்பட்டு துணிகள், புத்தகங்கள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்பட்டது.
அவற்றில் மறுபயன்பாடு, மறுசுழற்சிக்கு தேவைப்படும் பொருட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு அனுப்பப்படும். தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட இந்த மையம் குறித்து தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பழைய பொருட்களை வழங்கி சென்றனர்.
செல்விநகர்
தச்சநல்லூர் மண்டலம் 12-வது வார்டுக்கு உட்பட்ட செல்விநகர் சுகாதார அலு வலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையத்தில் பொதுமக்கள் தேவையற்ற பழைய பொருட்களை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியை தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வி. சுரேஷ், சுகாதார அலுவலர் சாகுல் அமீது, ராஜா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வஹாப், மகாலட்சுமி, கணேசன் இசக்கிமுத்து, சந்துரு, வேல்முருகன் ஆகியோர் செய்தனர்.






