search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

    • பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி கையெழுத்து வாங்கினர்.
    • மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செவல் முத்துராஜ், துரை, அனந்தராமன், சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வந்து மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×