என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய ரேஷன் கடையை தச்சை சுப்பிரமணியன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்த காட்சி.
நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு சேந்திமங்கலத்தில் புதிய ரேஷன் கடை- தச்சை சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
- மாநகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது.
- அப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை தச்சை சுப்பிரமணியன் வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு சேந்திமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் மாநகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளரும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர பிரதிநிதி சிவா, விவசாய அணி செயலாளர் தமிழரசன், வட்ட செயலாளர் சிந்து முருகன், ஜடாமுனி, மணிகண்டன், வார்டு பிரதிநிதி காந்தி, சேந்தி பாண்டி, சேந்தி மகேஷ், மந்திரமூர்த்தி, குட்டி, இலக்கிய அணி வில்சன், வினோத், ஆட்டோ மணி, முருகன், சிவா, தங்கவேல், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






