search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
    X

    பிட்டாபுராத்தி அம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டதையும், அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதை படத்தில் காணலாம்.

    நெல்லை டவுன் ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

    • திருவிழாவை முன்னிட்டு கும்ப பூஜைகள் நடைபெற்றது.
    • மஞ்சள், பால் கொண்டு கொடி மரத்திற்கு சிறப்புஅபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.

    பிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா

    மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நெல்லையப்பா் கோவிலின் வடதிசையில் அமைந்துள்ள ஊர்க்காவல் தெய்வமான ஸ்ரீபிட்டாபுரத்தி அம்மன் கோவில் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், மித்ரசங்கீரணம், ரக்சாபந்தனதம் நடைபெற்றது. இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து புண்யாகவாசனம், கும்ப பூஜைகள் நடைபெற்றது. பின்னா் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், பால் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ம் நாள் திருநாளன்று சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருகிற 26-ந்தேதியும், 9-ம் திருநாளான 29-ந்தேதி தேரோட்டமும், 10-ம் திருநாளன்று நெல்லையப்பா் கோவில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நெல்லையப்பா் கோவில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

    Next Story
    ×