search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் தொடங்குகிறது: 8 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி-நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நாளை மறுநாள் தொடங்குகிறது: 8 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி-நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

    • சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.
    • நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதிகாரியாக கலந்து கொள்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    பாளை-சேரன்மாதேவி

    பாளை தாலுகாவில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 25-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேலப்பாட்டம் குறுவட்டத்து க்கான ஜமாபந்தி நடைபெறுகிறது. 26-ந்தேதி, 30-ந்தேதி முன்னீர்பள்ளம் குறுவட்டத்துக்கும், சிவந்தி ப்பட்டிக்கு 31-ந்தேதியும், பாளை குறுவட்டத்துக்கு 1-ந்தேதி, 2-ந்தேதி மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அலுவலராக கலெக்டர் கார்த்திகேயன் (நான்) கலந்து கொள்கிறார்.

    இதேபோல் சேரன்மாதேவி தாலுகாவில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26-ந்தேதிகளிலும், முக்கூடல் குறுவட்டத்துக்கு 30-ந்தேதி, 31-ந்தேதி, பாப்பாக்குடி குறுவட்டத்துக்கு 31-ந்தேதி, சேரன்மாதேவி குறுவட்டத்து க்கு 1, 2-ந்தேதி ஆகிய நாட்கள் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை டி.ஆர்.ஓ. செந்தில்குமார் தீர்வாய அதி காரியாக கலந்து கொள்கிறார்.

    திசையன்விளை-நாங்குநேரி

    திசையன்விளை தாலுகாவில் விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு 24, 25-ந்தேதி, திசையன்விளை குறு வட்டத்துக்கு 25, 26-ந்தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் வருவாய் தீர்வாய அதிகாரியாக சேரன்மாதேவி சப்- கலெக்டர் முகமது சமீர் ஆலம் பங்கேற்கிறார்.

    நாங்குநேரி தாலுகாவில் 24, 25-ந்தேதி களக்காடு குறுவட்டம், 26, 30, 31-ந்தேதி ஏர்வாடி, 31, 1-ந்தேதி பூலம், 1, 2-ந்தேதி மூலைக்கரைப்பட்டி, 2, 6, 7-ந்தேதி நாங்குநேரி குறுவட்டத்துக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் விம ல்ராஜ் கலந்துகொள்கிறார்.

    ராதாபுரம்-மானூர்

    ராதாபுரம் தாலுகாவில் 24-ந்தேதி லெவிஞ்சிபுரம், 24, 25-ந்தேதி சமூகரெங்கபுரம், 25, 26-ந்தேதி பழவூர், 26, 30-ந்தேதி பணகுடி, 30-ந்தேதி வள்ளியூர், 31-ந்தேதி ராதாபுரம் குறுவட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் நெல்லை மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை ஆணை யர் சுகன்யா பங்கேற்கிறார். இந்த ஜமாபந்திகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×