என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் கொடுத்தனர்.
    • நாங்குநேரியில் தொழில் நுட்பபூங்கா அமைக்க நாங்குநேரி ஜீயர் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினார்.

    களக்காடு:

    தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    களக்காட்டில் நடைபயணம்

    நேற்று மாலை அவர் அண்ணாமலை களக்காட்டில் நடைபயணம் சென்றார். களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசலில் நடை பயணத்தை தொடங்கிய அவர் கோவில்பத்து, ஆற்றாங்கரை தெரு, திருக்கல்யாணத் தெரு, பெரிய தெரு, கோட்டை, புதிய பஸ்நிலையம் வழியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார். அவருக்கு வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் கொடுத்தனர்.

    பொதுமக்களிடம் அண்ணாமலை பா.ஜ.கவிற்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின் அவர், களக்காடு அண்ணாசிலை அருகே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வினர் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. நாங்குநேரியில் விஜயநாராயணம் குளத்தை சீரமைப்போம் என்று எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இங்கு வந்து பிரசாரம் செய்த போது கூறினார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

    500 பின்தங்கிய பகுதிகள்

    தி.மு.க. ஆட்சியில் பள்ளியில் ஜாதி மோதல்கள் நடக்கின்றன. நாங்குநேரியில் 12-ம் வகுப்பு மாணவர் வெட்டப்பட்டுள்ளார். இந்தியாவின் தூண்கள் மாணவர்கள். அவர்கள் மத்தியிலும் ஜாதி மோதல்கள் உருவாகுகின்றன. நாங்குநேரியில் தொழில் நுட்பபூங்கா அமைக்க நாங்குநேரி ஜீயர் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினார். ஆனால் அந்த திட்டமும் முழுமை பெறவில்லை.

    தற்போது இந்தியா முழுவதும் 500 பின்தங்கிய பகுதிகளை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். அதில் தமிழகத்தில் நாங்குநேரி உள்பட 14 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பார்வை நாங்கு நேரியில் விழுந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்குநேரி பகுதி முன்னேற்றம் அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவருடன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தொழில் பிரிவு தலைவர் பி. சங்கரநாராயணன், மாவட்ட செயலாளர் இ. சேர்மன்துரை, நகர தலைவர் ஏ. கணபதிராமன், ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன் உள்பட பலர் சென்றனர்.

    • சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களக்காடு சுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் முத்து வளவன், எம்.சி. சேகர், அருள் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் காளிதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் எங்கள் பகுதி வறட்சி பகுதியாக அறிவிக்கப்படவில்லை.
    • வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் வன்னிகோனேந்தல் வருவாய் குறுவட்ட விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சுமார் 9 ஊராட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வரை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது இந்த ஊராட்சிகள் மேலநீலிதநல்லூர் யூனியனுக்கு உட்பட்டு இருந்தது. இந்த பகுதி எப்போதுமே வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது.

    அந்த நேரத்தில் எங்களுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால் 2019-க்கு பிறகு மானூர் யூனியனுடன் எங்கள் பகுதி இணைக்கப்பட்டதால் கடுமையான வறட்சியான காலங்களிலும், மகசூல் விளைச்சல் இல்லாத காலங்களிலும் வறட்சி பகுதியாக எங்கள் பகுதி அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வறட்சி நிவாரணமோ, பயிர் காப்பீடு தொகையோ வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளோம்.

    தற்போது தமிழக அரசால் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீடும் வழங்க கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 9 கிராமங்களிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்குவார்கள். ஆனால் இன்று மிக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    • தனது நண்பனை பார்ப்பதற்காக நெல்சன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
    • நெல்சன் மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவாரந்தலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நெல்சன்(வயது 27). ஓட்டல் தொழிலாளி.

    நேற்று பணகுடியை அடுத்த வடக்கன்குளம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது நண்பனை பார்ப்பதற்காக நெல்சன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவில் கூடங்குளம் வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கூடங்குளம்-கூத்தன்குழி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக நெல்சன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து கூடங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் இறந்த நெல்சன் உடலை மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார் டிரைவரிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் தியாகராஜ நகரில் இன்று நடைபெற்றது.
    • மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்மந்தமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் தியாகராஜ நகரில் இன்று காலை நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    சீரான மின்விநியோகம்

    கூட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் அனைத்து மின் நுகர்வோரிடம் அந்தந்த பகுதி பிரிவு அலுவலர் தொலைபேசி எண்ணும், பணியாளர்கள் தொலைபேசி எண்களையும் வழங்குவதற்கும் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், அனைத்து கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு நெறி முறைகளுடன் பணிபுரிய பாதுகாப்பு வகுப்புகள் தொடர்ச்சியாக அனைத்து பிரிவு அலுவலகத்திலும் நடத்தி பணியாளர்களிடம் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க ஆலோசனை வழங்கினார்.நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கவும், வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பணி ஆணைகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மின்பாதுகாப்பு வகுப்பு

    மின் நுகர்வோர்களுக்கு மின் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் , மற்றும் அந்தந்த பகுதிகளில் மின்பாதுகாப்பு வகுப்பு நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இணையவழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும் மின் நுகர்வோர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், மின் நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் மின்சாரம் சம்மந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மைய தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்மந்தமான தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றார்.

    கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம், கோட்ட செயற்பொறியாளர்கள் வளனரசு(வள்ளியூர்), சுடலையாடும்பெருமாள்(கல்லிடைக்குறிச்சி ), கற்பகவிநாய கசுந்தரம்(தென்காசி), ஆதிலட்சுமி(கடையநல்லூர்), பாலசுப்ரமணியன் (சங்கரன்கோவில்) மற்றும் மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையப்படுத்துதல் செயற்பொறியாள திருநாவுக்கரசு, துணை நிதி கட்டுப்பட்டு அலுவலர் வீரலட்சுமணன், உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, சலோமிவாசுகி, சசிரேகா, சண்முகராஜ், சுரேஷ்குமார் மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியிருப்பு பகுதியில் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதியினர் வாலிபர்களை சத்தம் போட்டுள்ளனர்.
    • மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள நாகம்மாள்பு ரத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சமீபத்தில் அங்குள்ள வேடவர் காலனியில் குறுகலான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முன்விரோதம்

    அப்போது அவர்கள் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதி குடியிருப்புவாசிகள் சத்தம் போட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வேடவர் காலனி பகுதியில் நேற்று நடந்த சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகம்மாள்புரத்தில் இருந்து சிலர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்களில் ராஜசெல்வம் என்பவரும் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்குள்ள கோவில் அருகே நின்ற சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த தரப்பினர் ராஜசெல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

    வாலிபருக்கு வெட்டு

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசெல்வம், நாகம்மாள்புரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்களுடன் கம்புகள், கட்டைகளை எடுத்துக் கொண்டு வேடவர் காலனியில் புகுந்துள்ளார். பின்னர் அந்த கும்பால் கார், வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் சின்னத்துரை என்ப வருக்கு வெட்டு விழுந்தது.

    தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போதும் 2 தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் வாசிவம் மீது கல் வீசப்பட்டதில் காயம் அடைந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். லேசான தடியடி நடத்தி அங்கு கூடியிருந்தவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடவர் காலனியை சேர்ந்த 9 பேர் மற்றும் நாகம்மாள்புரத்தை சேர்ந்த 11 பேர் என இரு தரப்பையும் சேர்ந்த 20 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லையில் உள்ள 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
    • குப்பை கிடங்கில் பற்றிய தீயை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களை உள்ளடக்கியது. இந்த 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் 100 டன்னுக்கும் மேலாக மட்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

    தீ விபத்து

    இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு சங்கரன்கோவில் சாலை யில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அதனை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வாளர் சஸ்பெண்டு

    இந்நிலையில் தீ விபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன்(வயது 52) சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார். பணி யில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
    • 2-வது கட்ட நடைபயணம் தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் நடை பயணத்தை நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் தொடங்கிய அவர், நேற்று 2-வது நாளாக வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் சென்றார். இன்று அவர் நடைபயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை மாலை நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேட்டை பாறையடி காலனி பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார். இந்த நடைபயணமானது வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக நயினார் குளம் சாலையில் சென்று டவுன் ஆர்ச்சில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்கிறது. அங்கிருந்து பாரதியார் தெரு வழியாக சென்று வாகையடி முனையில் நடைபயணம் முடிவடைகிறது.

    அங்கு வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து முதல் கட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு அவர் சென்னை புறப்படுகிறார்.

    இதனையொட்டி பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து 2-வது கட்ட நடைபயணம் தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.

    • நெல்லை கிழக்கு,மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை சித்தா கல்லூரி எதிரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை, ஆக.20-

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவப் பிரிவு ஆகியவை இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை இடங்களில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடை பெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை சித்தா கல்லூரி எதிரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சி பாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தமயந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருள்ராஜ் டார்வின், மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் குமார், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கார்த்திக், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, வீரபாண்டியன், வக்கீல் அணி செல்வ சூடாமணி, ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர். ரஹ்மான், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், நித்திய பாலையா, சுந்தர் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகராஜா மற்றும்

    தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி

    வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதிய ழகன், ராமஜெயம் தலைமை தாங்கினர். போராட்டத்தை வடக்கு மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலா ளரும், அமைச்சரு மான அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

    இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பால்துரை, பாலமுருகன்,குமார் பாண்டியன், சுதாகர், ஸ்டாலின், மகேந்திரன் பாரதி, ஜோசப்,அமல்ராஜ், முகமது, ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார், சீனிவாசன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தர ராஜன், மாநகர இளைஞ ரணி அமைப்பாளர் அருண் குமார், துணை அமைப்பா ளர்கள் சங்கரநாராயணன், செல்வின், ரவி,முகமது, வழக்கறிஞர் டி.டி.சி.ஆர்.பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர்கள் அருண்குமார், சீனிவாசன், உட்பட நூற்றுக் கணக்கான கலந்து கொண்ட னர். இன்று மாலையில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி

    எம்.பி. கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வால் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து வருவதாகவும், தொடர்ந்து நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வுக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என். ரவி பேசி வருவதாக கூறி அதனை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    தென்காசி

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க., தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலை யம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்த போராட்டங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளை சேர்ந்தவர்கள் மற்றும் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்லத்துரை நேற்று மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
    • இன்று காலை மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்தவர்களிடம் செல்லத்துரை தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை சமாதானபுரம் எம்.கே.பி.நகர் திருமலை தெருவை சேர்ந்தவர் சுடலை மணி. இவரது மகன் செல்லத்துரை (வயது24). பெயிண்டிங் தொழிலாளி.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு அவரது தாய் மற்றும் சகோதரிகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    மது போதை தகராறு

    இந்நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை அவரது தாய் மற்றும் சகோதரிகள் தட்டிக் கேட்கவே அவர்களை அடித்து உதைத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை கண்டித்து அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் இன்று காலை மீண்டும் செல்லத்துரை மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செல்லத் துரை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாளை போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதனால் அங்கு விரைந்து வந்த போலீசார் செல்லத்துரை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே செல்லத்துரையின் தாய் மற்றும் சகோதரிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அடித்து கொலை?

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லத்துரை அடித்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என போலீ சார் சந்தேகிக்கிறார்கள்.

    எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

    • நாளை மறுநாள் பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குன்னத்தூர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அன்று மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை,டவுன் கீழரதவீதி போஸ் மார்கெட், ஏபி மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு,மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரிநகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நெல்லை மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரே மணிமண்டபத்தில் அமைக் கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மாலை அணிவித்து மரியாதை

    இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாணவர் அணி செயலாளர் சிவபாலன், பகுதி செயலாளர்கள் ஜெனி, சண்முககுமார், முன்னாள் பகுதி செயலாளர் தச்சைமாதவன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,

    மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், டால் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    எழுச்சி மாநாடு

    தொடர்ந்து அவர்கள் மதுரை வலையங்குளத்தில் இன்று நடைபெறும் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.

    ×