என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்- திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களக்காடு சுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் முத்து வளவன், எம்.சி. சேகர், அருள் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் காளிதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






