search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் வீடு, கார் உடைப்பு விவகாரத்தில் 20 பேரை பிடித்து விசாரணை
    X

    மேலப்பாளையத்தில் வீடு, கார் உடைப்பு விவகாரத்தில் 20 பேரை பிடித்து விசாரணை

    • குடியிருப்பு பகுதியில் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதியினர் வாலிபர்களை சத்தம் போட்டுள்ளனர்.
    • மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள நாகம்மாள்பு ரத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சமீபத்தில் அங்குள்ள வேடவர் காலனியில் குறுகலான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முன்விரோதம்

    அப்போது அவர்கள் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதி குடியிருப்புவாசிகள் சத்தம் போட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வேடவர் காலனி பகுதியில் நேற்று நடந்த சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகம்மாள்புரத்தில் இருந்து சிலர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்களில் ராஜசெல்வம் என்பவரும் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்குள்ள கோவில் அருகே நின்ற சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த தரப்பினர் ராஜசெல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

    வாலிபருக்கு வெட்டு

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசெல்வம், நாகம்மாள்புரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்களுடன் கம்புகள், கட்டைகளை எடுத்துக் கொண்டு வேடவர் காலனியில் புகுந்துள்ளார். பின்னர் அந்த கும்பால் கார், வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் சின்னத்துரை என்ப வருக்கு வெட்டு விழுந்தது.

    தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போதும் 2 தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் வாசிவம் மீது கல் வீசப்பட்டதில் காயம் அடைந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். லேசான தடியடி நடத்தி அங்கு கூடியிருந்தவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடவர் காலனியை சேர்ந்த 9 பேர் மற்றும் நாகம்மாள்புரத்தை சேர்ந்த 11 பேர் என இரு தரப்பையும் சேர்ந்த 20 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×