என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
    X

    கூடங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

    • தனது நண்பனை பார்ப்பதற்காக நெல்சன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
    • நெல்சன் மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவாரந்தலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நெல்சன்(வயது 27). ஓட்டல் தொழிலாளி.

    நேற்று பணகுடியை அடுத்த வடக்கன்குளம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது நண்பனை பார்ப்பதற்காக நெல்சன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவில் கூடங்குளம் வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கூடங்குளம்-கூத்தன்குழி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக நெல்சன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து கூடங்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    விபத்தில் இறந்த நெல்சன் உடலை மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார் டிரைவரிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    Next Story
    ×