என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி:

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.

    நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.

    இந்த ரெயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.

    அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே கோட்டை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும், இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.

    பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ரெயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டவர்.

    பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ரெயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருச்சி காட்டூரில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சார்பில் மனித சங்கிலி பேராட்டம் நடைபெற்றது
    • நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    திருவெறும்பூர்,

    திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும், நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும்மாவட்ட தலைவர் சூரியா, மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோரது தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது,இதனை தொடர்ந்து கையில் பதாகைகள் ஏந்தி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவன் அவரது தந்தை ஆகியோருக்கு நீதி கேட்டு கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கழுத்தில் அரிவாள் தவறுதலாக பட்டதால் விவசாயி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
    • கால்நடைக்கு புல் அறுத்த போது பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி குழுமணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 34 ). இவர் கால்நடைகள் வளர்த்து வந்தார். இதை யடுத்து அந்தப் பகுதியில் வழக்கம் போல் கதிர் அறுக்கும் அரிவாள் மூலம் புற்களை வெட்டினார்.அப்போது தவறுதலாக அரிவாள் கழுத்தில் பட்டு பலத்த காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது பெரியம்மா செல்லம்மாள் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி ராம்ஜி நகர் அருகே வாகன விபத்தில் மாணவர் பலியானார்
    • சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதி விபத்து

    ராம்ஜிநகர்,

    திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது18). இவர் தி தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். சம்பவத்தன்று இவர் திவாகர் (18), சரத்குமார் (20) ஆகிய நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் திருச்சி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இவர்கள் மோதினர். இதில் காயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் குவிந்தனர்
    • திருச்சியில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    திருச்சி, 

    இந்துக்கள் தை அமா வாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்தனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட  புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில்    அமர்ந்து இருந்தனர்.இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    • திருச்சி சமயபுரம் அருகே இன்று அதிகாலை கார் பாலத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
    • முந்தி சென்ற அரசு பஸ் உரசியதால் விபரீதம்

    திருச்சி,

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தகவல் அறிந்த அறிந்து விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.

    இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    திருச்சி:

    இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

    அந்த வகையில் 2-வது ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக நீர் நிலைகளில் திரண்டனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.

    இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் காவிரிகரை மணல் பரப்பில் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர்.

    பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர். அதன் பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை வழங்கினர்.

    இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கரையோரங்கள் மற்றும் நீர்நிலைகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • திருச்சியில் 4 ேக தொழில்நுட்பத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நவீன கோளரங்கம் திறக்கப்பட்டது
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்த வைத்தார்

    திருச்சி,

    திருச்சி விமானம் அருகே அண்ணா அறிவியல் மைய் (கோளரங்கம்) இயங்கி வருகிது. இங்கு வானியல் குறித்த நேரடி காட்சிகளை காணலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அண்ணா அறிவியல் மையம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு இந்த கோளரங்கத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. இதன்படி அறிவியல் மையத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் முழு கோள எண்ணிலக்க கோளரங்கம் மேம்படுத்தும் பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நவீன எண்ணிலக்க கோளரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சிமூலம் திறந்து வைத்தார். தையொட்டி கோளரங்கத்தில் நடந்த விழாவில் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன், துணை இயக்குனர் வள்ளி உள்ளிட்ட அறிவிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல் விடுத்தார்
    • தப்பி சென்ற காதலனுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). கல்லூரி மாணவியான இவரும், திருச்சி தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த மாணவி காதலை துண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தனஸ்ரீ உறையூரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த காதலன் பாலமுருகன் என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.தனஸ்ரீ உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த வாலிபர் குழந்தையின் தொட்டில் கயிறு இறுக்கி உயிரிழந்தார்
    • குடிபோதையில் தனது குழந்தையின் தொட்டிலில் அருகாமையில் உட்கார்ந்து விளையாடியபோது விபரீதம்

    திருச்சி, 

    திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் பீர்முகமது (வயது 24). இவர் சமீபத்தில் திருச்சி விமான நிலையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று பீர்முகமது குடிபோதையில் தனது குழந்தையின் தொட்டிலில் அருகாமையில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் கயிறு இவரது கழுத்தை இறுக்கியது. உடனே மயங்கிய நிலையில் இருந்த பீர் முகமதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து பீர் முகமதுவின் சகோதரி பாத்திமா பீபி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொட்டியத்தில் கடன் தர மறுத்ததால் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • ஏற்கனவே கடன் வாங்கிய நிலையில் மேலும் கடன் தர மறுத்ததால் வெறிச்செயல்

    தொட்டியம், 

    திருச்சி மாவட்டம் தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணிய மகன் முத்தையா (வயது 45). இவர் காட்டுப்புத்தூர் பிரிவு ரோட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேலத்தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் ராஜா (44) என்பவர் முத்தையனிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பித் தரவில்லை. இந்த கடனை பலமுறை முத்தையா ராஜாவிடம் கேட்டு பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில ராஜா, முத்தையாவிடம் மேலும் பணம் கேட்டு உள்ளார். ஆனால் முத்தையா பணம் தர மறுக்கவே, வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா அருவாளால் முத்தையாவை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் முத்தையா தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியும் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரசுராமன் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×