என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் மாணவர் பலி
- திருச்சி ராம்ஜி நகர் அருகே வாகன விபத்தில் மாணவர் பலியானார்
- சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது மோதி விபத்து
ராம்ஜிநகர்,
திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது18). இவர் தி தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். சம்பவத்தன்று இவர் திவாகர் (18), சரத்குமார் (20) ஆகிய நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் திருச்சி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற லாரியின் மீது இவர்கள் மோதினர். இதில் காயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






