தொட்டியம் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு

தொட்டியத்தில் கடன் தர மறுத்ததால் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது ஏற்கனவே கடன் வாங்கிய நிலையில் மேலும் கடன் தர மறுத்ததால் வெறிச்செயல்
தொட்டியம் கறிகடைகாரருக்கு அரிவாள் வெட்டு
Published on

தொட்டியம், 

திருச்சி மாவட்டம் தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த சுப்ரமணிய மகன் முத்தையா (வயது 45). இவர் காட்டுப்புத்தூர் பிரிவு ரோட்டில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேலத்தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் ராஜா (44) என்பவர் முத்தையனிடம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பித் தரவில்லை. இந்த கடனை பலமுறை முத்தையா ராஜாவிடம் கேட்டு பணத்தை திருப்பி தரவில்லை. இந்நிலையில ராஜா, முத்தையாவிடம் மேலும் பணம் கேட்டு உள்ளார். ஆனால் முத்தையா பணம் தர மறுக்கவே, வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா அருவாளால் முத்தையாவை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தினர் முத்தையா தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியும் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரசுராமன் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com