என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தையின் தொட்டில் கயிறு இறுக்கி வாலிபர் சாவு
- ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த வாலிபர் குழந்தையின் தொட்டில் கயிறு இறுக்கி உயிரிழந்தார்
- குடிபோதையில் தனது குழந்தையின் தொட்டிலில் அருகாமையில் உட்கார்ந்து விளையாடியபோது விபரீதம்
திருச்சி,
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் பீர்முகமது (வயது 24). இவர் சமீபத்தில் திருச்சி விமான நிலையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று பீர்முகமது குடிபோதையில் தனது குழந்தையின் தொட்டிலில் அருகாமையில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் கயிறு இவரது கழுத்தை இறுக்கியது. உடனே மயங்கிய நிலையில் இருந்த பீர் முகமதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து பீர் முகமதுவின் சகோதரி பாத்திமா பீபி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






