என் மலர்
திருச்சிராப்பள்ளி
- விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.
- விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் துபாயிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
இந்த விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.
பின்னர் அந்த பொருட்களை திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள வந்த போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார்.
அதிர்ச்சியடைந்த சுங்கத்திரை அதிகாரிகள் அவரை 2 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்து மீண்டும் விசாரணைக்காக அழைத்து வந்தனர் .
விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 55 லட்சத்து 22 ஆயிரம் என தெரிய வருகிறது.
- மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
- பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார்.
அப்போது 3 மர்ம நபர்கள் அருகாமையில் வந்து மயக்க மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த நொடி கன்னியப்பன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.
உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் இதுகுறித்து கன்னியப்பன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உறையூர் சீனிவாச நகரில் இலங்கையைச் சேர்ந்தவர் திடீர் மரணம்
- உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தன
திருச்சி
இலங்கை கொழும்பு கிராண்ட் பாத் வீதியைச் சேர்ந்தவர் ராஜா ரத்தினம் (வயது 54 ).இவர் நோய்வாய்ப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருச்சி உறையூர் சீனிவாச நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் உடல்நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார். உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி காந்தி மார்க்கெட்டில் பணம் திருடிய நபர் கைது
- புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
திருச்சி மதுரை ரோடு கல்யாண சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் கீர்த்தி வாசன். இவர் வெல்லமண்டியில் ஒரு கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதில் ஒரு பேக் வைத்திருந்தார். அந்த பேக்கில் 5000 ரூபாய் பணம் ,ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவை இருந்தது. அதை ஒருவர் திருடிவிட்டார். இது குறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் கீர்த்தி வாசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் வழக்கு பதிந்து, இந்த திருட்டு தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவரை கைது செய்தார் .
இதே போல் திருச்சி குமரன் நகர் பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டு கட்டுமான பணியில் இருந்த மோட்டாரை திருடியதாக மேல வண்ணார்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபரை புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.
- திருச்சி மேல சிந்தாமணியில் ஜவுளிக்கடை ஊழியர் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
- மனைவி வீட்டை பூட்டி விட்டு டைப்ரைட்டிங் மையத்துக்கு சென்று விட்டார்
திருச்சி
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 38 ).இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு டைப்ரைட்டிங் மையத்துக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்றே முக்கால் சவரன் தங்க நகைகள் மற்றும் சில்வர் பொருட்கள், பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன் கோட்டை குற்றப்பிரிவுபோலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 69 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- இன்று காலை பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட27 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நிரந்தர தூய்மை பணியாளர்கள் உள்ள நிலையில் ஒப்பந்த அடிப்படையில் 69 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்த பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான இவர்கள் இதுகுறித்து தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். தூய்மைப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கிட வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புள்ளம்பாடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அதிக மாணவர்களை சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு பரிசு
- கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்
டால்மியாபுரம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் பயிற்றுநர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி உடன் மாதம் ரூ 750 உதவித்தொகை ,விலையில்லா மிதிவண்டி, சீருடைகள்,காலணிகள், வரைபட கருவிகள்,பாட புத்தகங்கள், புதுமைப்பெண் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் தங்களின் மூத்த அல்லது இளைய சகோதரிகள், உறவினர்கள் மற்றும் மகளின் தோழியர்கள் பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ,தொழிற்பயிற்சி மையத்தில் அதிக பயிற்றுநர்களை சேர்ப்பவர்களுக்கு நானே சிறந்த தன்னார்வலர் விருது மற்றும் ரொக்க தொகை ரூ10 ஆயிரம் பரிசு வழங்கி கௌரவப்படுத்துவேன் என கூறி,தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழாவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் ,தாசில்தார் விக்னேஷ்
முகாமில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பாஸ்கரன் புள்ளம்பாடி சேர்மன் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி செயல் அலுவலர் உள்ளிட்ட தொழிற்பயிற்சி அலுவலர்கள்,மருத்துவ குழுவினர்,தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தொழில் பயிற்சி நிலைய முதல்வர் குப்புராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் தொழிற் பயிற்சி நிலைய பணியமர்த்தும் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.
- ராம்ஜிநகர் அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது இருசக்கர வாகன மோதி படுகாயம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர
ராம்ஜிநகர்,
திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரியநாயகி சத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது32) கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு கள்ளிக்குடியில் உள்ள தனது நண்பரைப் பார்த்துவிட்டு பேருந்து ஏறுவதற்காக திருச்சி திண்டுக்கல் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே இனாம் குளத்துறைச் சார்ந்த அக்பர் பாஷா என்பவரது மகன் சுல்தான் (24) திருச்சியில் இருந்து இனாம்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக நடந்து சென்ற ராஜேஷ் கண்ணா மீது இருசக்கர வாகன மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில்கள், ஊசிகள் பறிமுதல்
திருச்சி,
திருச்சி கோட்டை கீழரண்சாலை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே 2 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 2 பேர் போதை மாத்திரையை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த ரெ. யோகானந்தம் (23), அ. தர்மதுரை (19) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,000 மதிப்புள்ள 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில் ஒன்று, ஊசிகள் ஐந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது
- ரவுடி உள்பட தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டர் . இவர் திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த மதன் குமார் என்பவரின் மனைவியிடம் பணம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் வட்டி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் இரண்டு பேருடன் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் முத்துவீரன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டார் . இது குறித்து முத்துவீரன் கொடுத்த புகாரி அடிப்படையில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். இதில் மதன்குமார் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி,
திருச்சி கே.சாத்தனூர், திருவெறும்பூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தை சார்ந்த கே.கே.நகர், ஆர்.பி.எஸ். நகர், இந்தியன் பேங்க் காலனி, வயர்லெஸ் ரோடு, காஜாமலை காலனி, செம்பட்டு பகுதி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, குடித்தெரு, கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதி நகர், சுந்தர் நகர், காமராஜ் நகர், அய்யப்ப நகர், ஜே.கே.நகர், எல்.ஐ.சி. காலனி, சுந்தோஷ் நகர், பழனி நகர், ஆனந்த் நகர், முல்லை நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, இச்சிகாமாலைப்பட்டி, பாரி நகர், மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள்.இதேபோல் திருவெறும்பூர் துணை மின் நிலையத்தை சார்ந்த திருவெறும்பூர், பத்தாளப்பேட்டை, நவல்பட்டு, டி.நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், கிருஷ்ணசமுத்திரம், புதுத்தெரு, வேங்கூர், மேலகுமரேசபுரம், அண்ணா நகர், சூரியூர், எம்.ஐ.இ.டி., திருவெறும்பூர் தொழிற்பேட்டை, சோழமா நகர், பிரகாஷ் நகர், பர்மா காலனி, நேரு நகர், போலீஸ் காலனி, பாரத்நகர், குண்டூர், மலைக்கோவில், கிளியூர், கக்கன்காலனி, கூத்தைப்பார், பூலாங்குடி, பழங்கனாங்குடி, காவேரி நகர், அண்ணா நகர் 100 அடிரோடு ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
- திருச்சி அரியமங்கலத்தில் கதவில் முட்டியதில் இரண்டு வயது குழந்தைசாவு
- அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சிராஜ்தீன். இவரது மனைவி ஆயிஷா சித்திக்கா (வயது 20). இவர்களது இரண்டு மாத குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு கதவில் தலை மோதியது. இதில் காயமடைந்த குழந்தையை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






