என் மலர்
திருச்சிராப்பள்ளி
- வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.9 லட்சம் நூதன மோசடி நடைபெற்று உள்ளது
- மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் இர்பான். சட்ட கல்லூரி மாணவர். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் தனது தாயாரின் செல்போனுக்கு கடந்த ஜூன் 6-ம் தேதி ஒரு அழைப்பு வந்தது.எதிர் முனையில் பேசியவர் நேபாள நாட்டிலிருந்து பேசுகிறேன். நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி. உங்களது செல்போன் நம்பருக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கார் பரிசாக விழுந்துள்ளது.அந்த காரினை பெறுவதற்கு சிறிது தொகை ஜி.எஸ்.டி.யாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தபெண்மணி யாரிடமும் கலந்தாலோசிக்காமல் உடனடியாக அந்த நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் ரிசர்வ் வங்கி அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல காரணங்களை சொல்லி அந்த நபர் பணத்தைக் கறந்தார். கேட்க,கேட்க பணம் அனுப்பியதால் உஷாரான மோசடி பேர்வழி மீண்டும் உங்களுக்கு ரூ. 8 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளது என கூறி மொத்தம் பல்வேறு தவணைகளாக ரூ. 9 லட்சத்து 9 ஆயிரத்து 900 பணத்தை பெற்றார்.பின்னர் ஓரிரு தினங்களில் பரிசுத்தொகை உங்களது வங்கி கணக்குக்கு வந்து சேரும் என கூறியுள்ளார். ஆனால் பல நாட்கள் காத்திருந்த போதும் பரிசு தொகையும் வரவில்லை. காரும் கைக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட அந்தப் பெண்மணி தனது மகனிடம் கூறியுள்ளார். இதை எடுத்து ஷேக் இர்பான் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்து நதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
- திருச்சியில் குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த பன்றி குட்டி
- பன்றிகுட்டி செத்து மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி
திருச்சி,
திருச்சி மாநகராட்சி குமரன் நகர் முதல் தெருவில் பொது குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதில் பொதுமக்கள் இறங்கி தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக படியுடன் தொட்டி அமைத்துள்ளனர்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் ஒரு பன்றி குட்டியை விரட்டி உள்ளது. இதில் அந்தப் பன்றி குட்டி அந்த குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது.இதில் காயமடைந்த அந்த பன்றி குட்டியால் வெளியே வர இயலவில்லை. இதற்கிடையே அந்த குடிநீர் குழாயும் உடைந்து தொட்டியில் தண்ணீர் நிரம்பியது. இதனால் தப்பிக்க இயலாமல் பன்றி குட்டி தண்ணீரில் செத்து மிதந்தது.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் செத்து மிதந்த பன்றியை அப்புறப்படுத்தினர்.மேலும் தொட்டியில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டது.இருப்பினும் தொட்டிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் பன்றி செத்து மிதந்த அசுத்த நீர் வீடுகளுக்கு ரிவர்ஸ் ஆகி சென்றிருக்கும் என பொதுமக்கள் கூறினர். ஆகவே தரை மட்டத்தில் இருக்கும் இது போன்ற குடிநீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பான முறையில் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
- திருச்சி ஜங்ஷன் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்பு
திருச்சி,
திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்துசெய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில கவர்னரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரத போரட்டம் இன்று காலை 9 மணிக்கு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் அருகில் தொடங்கியது. உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடக்கிறது. உண்ணா விரதத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்இதில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன், சேர்மன் துரைராஜ், அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் , மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், இளங்கோ, பி.ஆர்.சிங்காரம், கவுன்சிலர்கள் முத்து செல்வம், கலைச் செல்வி ஜெகநாதன், ராமதாஸ், புஷ்பராஜ் மஞ்சுளாதேவி பி.ஆர்.பால சுப்பிரமணியன், கலைச்செல்வி கருப்பையா, துபேல் அஹமது, மூவேந்திரன், பந்தல் ராமு, கலந்தர் பஷீர், மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் மதனா,தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார், மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் என்.சுரேஷ் பாபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் - மு.ர.முத்து தீபக், மாநகர மாணவரணி அமைப்பாளர் - ஏ.எம். அசாருதீன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செய்தார்
- திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரசார் ஏராளமானவர்கள் பங்கேற்பு
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்,மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, பொருளாளர்கள் ராஜா நசீர், இளையராஜா,மாவட்டத் துணைத் தலைவர் பண்ணை கோபாலகிருஷ்ணன், கோட்டத் தலைவர்கள் ரவி, ஜோசப் ஜெரால்ட், பிரியங்கா பட்டேல், ஜ.என்.டி.யு.சி.மாவட்ட தலைவர் சரவணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பூக்கடை பன்னீர்செல்வம், பட்டேல் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணாசிலை விக்டர், செந்தமிழ் செல்வன், மலைக்கோட்டை சேகர், மணிவேல், உறந்தை செல்வம் மாவட்ட செயலாளர்கள் செவந்திலிங்கம், அனந்தபத்மநாதன், புத்தூர் அன்பழகன், பொன்னன், வக்கீல் விக்னேஷ்,முன்னாள் கோட்டத் தலைவர் ராஜ்மோகன், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், சேவாதள பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜுபேர், பர்கத், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ்,மகளிர் அணி மாநகர மாவட்ட தலைவி ஷீலா செலஸ், சம்சுதீன், அமைப்பு சாரா தலைவர் முஸ்தபா, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பழனியாண்டி, எஸ்சி பிரிவு தலைவர் பாக்யராஜ், சேகர்வார்டு தலைவர்கள் கண்ணன். பெல்ட் சரவணன், பாபு , சலீம்பாய், மணிவண்ணன், குங்கிங் செல்வம், லெட்சுமி அம்மாள் விஜய்பட்டேல், அல்லூர் பிரேம், தமிழ்மணி. ரவி, அய்யாகண்ணு, பொன்மலை பாலு, புத்தூர் மூர்த்தி, வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அல்லூர் எழிலரசன், சுப. கோவிந்தன்,அன்பில் ராஜேந்திரன், அர்ஜுன், பரணி, துவாக்குடி நகர தலைவர் ஆனந்தன், அந்தநல்லூர் வட்டார தலைவர் கனகராஜ், மணிகண்டம் வட்டார தலைவர் கருணாகரன், மணப்பாறை வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம் மற்றும் ஆனந்த். குறத்தெரு விஸ்வநாதன், தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் உள்ள தங்க முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம்
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கிரிக்கல் மேடு கிராமத்தில் இருக்கும் சித்தி விநாயகர், தங்க முத்து மாரியம்மன், சங்கிலி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குதிரையில் இருக்கும் சங்கிலி ஆண்டவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது . விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் தங்கராஜ், போசன், ஜெயராஜ் மற்றும் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
- சமயபுரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது
- உடைப்பின் காரணமாக ஏராளமான குடிநீர் வீணாகியது
மண்ணச்சநல்லூர்,
திருச்சி நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பிச்சாண்டார்கோயில், பளூர், பணமங்கலம், கூத்தூர், ச.கண்ணனூர் பேரூராட்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பளூர் பகுதியில் கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இந்த குழாயில் இருந்து பல்லாயிரம் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து வீணாகும் குடிநீரை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
- மது ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துவதால்தான் மதுக்கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 33 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன
நெல்லை:
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை நேற்று நெல்லை மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் பகுதியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு கட்சியினர், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சமாதானபுரம் ரவுண்டானா, மார்க்கெட், லங்கர்கானா சாலை வழியாக தொண்டர்களுடன் பாத யாத்திரையாக வந்த அவர், அங்குள்ள வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெற்கு பஜார் வழியாக ராஜகோபாலசாமி கோவில் திடலை வந்தடைந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி நதியை அசுத்தமாக்கி விட்டனர். கங்கை நதியை போன்று தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் இ்ல்லாத அளவாக தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முன்பு 4 விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்த நிலையில், தற்போது 24 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொண்டு வரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,310 வழங்கிய நிலையில், தற்போது ரூ.2,183 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. தமிழகத்தில் விவசாய நலன் திட்டங்களுக்கு ரூ.1,772 கோடியும், வேளாண்மை வளர்ச்சிக்கு ரூ.3,588 கோடியும், பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,239 கோடியும் மத்திய அரசு வழங்கி உள்ளது.
மது ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துவதால்தான் மதுக்கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்போது, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஏன் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை?
நீட் தேர்வை தி.மு.க.வினர் எதிர்ப்பதற்கு காரணம், மாணவர்கள் மீதுள்ள அக்கறையில் இல்லை. மாறாக அவர்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்துவதால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 33 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 22 மருத்துவக் கல்லூரிகள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். நீட் தேர்வு இருந்தால் இந்த கல்லூரிகளுக்கு மேலாண்மை இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க முடியாது என்பதால் அவர்கள் சொல்லித்தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான். இதை ஆதாரத்துடன் கூறுகிறேன்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலும் வட்டி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தி.மு.க.வில் இருந்து விலகி நேற்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாலையில் கல்லிடைக்குறிச்சியில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டார்.
முன்னதாக பாளையங்கோட்டையில் பாதயாத்திரை மேற்கொண்டபோது அண்ணாமலை, ராமசாமி கோவில் திடல் அருகில் உள்ள கடையில் அல்வா வாங்கி தொண்டர்களுடன் ருசித்தார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்
- ஓடும் பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்
திருச்சி,
திருச்சி ராம்ஜி நகர் நவலூர் கொட்டப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 27).இவர் சென்னை செல்வதற்காக ராம்ஜி நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு டவுன் பஸ்ஸில் திருச்சி மத்திய பஸ் நிலையம் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் ஒரு சிறுவன் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 300 பணத்தை பிக் பாக்கெட் அடித்தான்.இதனை கவனித்து விட்ட கனகராஜ் அந்த சிறுவனை சக பயணிகள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து கன்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில் பிடிபட்டவர், துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியார் நகர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.கைதான சிறுவனின் தாய் தந்தை இருவரும் வேறு வேறு நபரை திருமணம் செய்து சென்று விட்டதால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டான். பின்னர் பாட்டி பராமரிப்பில் இருந்து கொண்டு சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.முதல் முறையாக போலீஸ் வசம் சிக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- கணவருடன் சமரசம் செய்து சேர்த்து வைக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
தஞ்சை மாவட்டம் திருவையாறு நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் .இவரது மனைவி (வயது 54). இவர்களது மகள் புவனேஸ்வரி( வயது 27). இவருக்கும் திருவானைக்காவல் நடுக்கொ ண்டயம்பேட்டையைச் சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் புவனேஸ்வரி திருவையாறில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் .உடனே பெற்றோர் சமரசம் செய்து புவனேஸ்வரியை திருவானைக்காவல் நடு கொண்டயம்பேட்டையில் உள்ள கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் .இந்நிலையில் புவனேஸ்வரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொள்ளிடம் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம் திருட்டு
- பீரோவில் வைத்திருந்த ரூ. 30,000 பணம் திருட்டு
திருச்சி,
திருச்சி கொள்ளிடம் அருகே உள்ள திருமலை நகர் என் டி ஆர் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 33) இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல டயர் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த சபரிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போதுபீரோவில் வைத்திருந்த ரூ. 30,000 பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இது பற்றி சபரிநாதன் கொள்ளிடம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணப்பாறை பஸ் நிலையத்தில் மயக்க மருந்து தடவி கரூர் பயணியிடம் நகை பணம் அபேஸ் செயயப்பட்டு உள்ளது
- 3 மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி,
கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் மம் பதையூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார்.அப்போது 3 மர்ம நபர்கள் அருகாமையில் வந்து மயக்க மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த நொடி கன்னியப்பன் மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.உடனே அந்த ஆசாமிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அதன் பின்னர் இதுகுறித்து கன்னியப்பன் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை 2 கி.மீ. தூரம் துரத்தி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்
- பிடிபட்டவரின் பார்சலில் இருந்து ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்
கே.கே.நகர்,
துபாயிலிருந்து நேற்று திருச்சி வந்த விமான பயணிகளை வான் நுண்ணறி பிரிவு சுங்கத்துறையினர் சோதனைக்கு பின்னர் வெளியேற அனுமதித்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பி வைத்துவிட்டு திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள சென்ற போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களது பொருட்களை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனை கண்ட வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தலுக்கு பின்னர் அவர் சுங்கத்துறையினரிடம் பிடிபட்டார். அவரை விமான நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த பயணிகள் இருவரும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55 .20 லட்சம் என தெரிய வருகிறது






