என் மலர்
நீங்கள் தேடியது "SUSIDE"
- குடும்பதகராறில் விபரீதம்
- கட்டிட தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்
கரூர்:
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரவிச்சந்திரன் (வயது 30). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் ரவிச்சந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது மது அருந்திவிட்டு வருவாராம். இதனால் கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற ரவிச்சந்திரன் ஊர் கிணற்றில் குதித்துள்ளார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ரவிச்சந்திரனை அரவக்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயிற்றுவலியால் நடந்த சம்பவம்
- கார்பெண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர்:
குளித்தலை அருகே நெய்தலுார் பெரியபனையூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32), கார் பெண்டர். இவர் தொடர் வயிற்று வலியுடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால், இதனால் விரக்தியடைந்த காணிமுத்து, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார். இவருக்கு வல்லி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்
- விமான பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தற்கொலை
திருச்சி,
திருச்சி பஞ்சப்பூர் விநாயகா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நவீன் குமார் (வயது 17). இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் விமான பைலட் ஆக ஆசைப்பட்டு அதற்கு ஏற்றவாறு படித்து வந்துள்ளார் .ஆனால் தற்போது பிளஸ் டூ தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட முன்பருவ தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் நேற்று வீட்டு மின்விசிறியில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப் பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அலுவலக உதவியாளர் பணி மீண்டும் வழங்காததால் விரக்தியில் முயற்சி
- மங்களமேடு போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜெனுதீன். இவரது மகன் சம்சுதீன் (வயது 30). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாலிகண்டபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். மேலும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக பணிக்கு செல்லவில்லையாம். இதனால் சம்சுதீன் பதிலாக வேறோருவர் கடந்த ஒரு வருடமாக வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தார். அவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டதால், தற்போது வங்கியில் வாலிகண்டபுரத்தை சேர்ந்த மற்றொருவரை பணியில் சேர்த்துள்ளனர். சம்சுதீன் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாகவும், தற்பொழுது தனக்கு மீண்டும் பணி வழங்குமாறு வங்கி மேலாளரிடம் கேட்டு வந்தும், அவரும் மீண்டும் பணி வழங்கப்படவில்லையாம். இதனால் சம்சுதீன் நேற்று இரவு வங்கிக்கு சென்று மீண்டும் பணி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணி வழங்கப்படாததால் மனமுடைந்த சம்சுதீன் பிளேடால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/
- அண்ணன் முறை என்பதால் காதலை முறித்துகொண்ட காதலி மீது ஆத்திரம்
- மயிலாடிகாடு கிராமத்தில் போலீஸ் குவிப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்குடி ஊராட்சி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் கருப்பையா மகன் துரைக்கண்ணு(வயது 36). பன்னீர்செல்வமும் கருப்பையாவும் உறவு முறையில் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் மகள் பவித்ரா(வயது 21). புதுக்கோட்டையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் பி.ஏ., இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிக்கும் துரைக்கண்ணுவும், பவித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.பின்னர் இந்த காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை இல்லை என்று தெரிவித்து இவர்களது காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர். துரைக்கண்ணு தனக்கு உறவு முறை சகோதரர் என்று தெரிந்து கொண்ட பவித்ரா, துரைக்கண்ணுவுடன் பழகுவதையும் பேசு வதையும் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். பவித்ரா வின் குடும்பத்தினர் கூலி வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்ட துரைக்கண்ணு, பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் துரைக்கண்ணு அவரது வீட்டிற்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மாலையில் வீடு திரும்பிய பவித்ராவின் தாயார் அஞ்சலை, பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு ஆலங்குடி போலீசாருக்கு தவல் அளித்துள்ளனர்.ஆலங்குடி போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், பவித்ரா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதும், துரைக்கண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டத்திற்காக அனுப்பி வைத்தனர்.மயிலாடி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில், ஆலங்குடி (பொறுப்பு )போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாராணி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பா ஸ்கரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர்.
- வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி காலனி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார்(42)விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.அதை பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வலி தீரவில்லை. இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தீராத உடல் உபாதை காரணமாக தற்கொலை என தகவல்
- பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், செட்டிக்குளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு எதிர்புறம் மலைமேல் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவில்களில் எழுத்த ராக தண்டாயுதபாணி(வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரகதாம்பாள்(42), என்ற மனைவியும் ஹரிஹரன்(15) என்ற மகனும் உள்ளனர். இவருக்கு தீராத உடல் உபாதை இருந்ததாக கூறப்ப டுகிறது. பல இடங்களில் சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோயில் எழுத்தர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை இல்லாத கவலையில் தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி குண்டூர் திரு–வளர்ச்சிபட்டி கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 48), தொழிலாளி. இவருக் கும் திலகவதி (35) என்ப–வருக்கும் கடந்த 3 ஆண்டு–களுக்கு முன்பு திருமணம் நடந்தது.தாமதமாக திருமணம் செய்து கொண்ட அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக் கவில்லை. இதனால் பால–சுப்ரமணி மிகுந்த மனசுக்கு ஆளானார்.இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்து எடுத்துக் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே மனைவி அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து–வமனையில் சேர்த்தார். அங்கு சற்று நேரத்தில் சிகிச்சை பலனளிக்காமல் பாலசுப்பிரமணி பரிதாப–மாக இறந்தார்.இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேட்டரி ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- பல் வலியால் அவதிபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானாவர்
திருச்சி
முசிறி அருகே உள்ள நீலியம்பட்டி அஞ்சலம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதாஸ் (வயது 55). இவர் கடந்த சில மாதங்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் அவ்வப்போது பல் வலி அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பேட்டரிக்கு ஊற்றும் ஆசிட் கலந்த நீரை குடித்து மயங்கி சரிந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இறந்தபோதிலும் சாமி தாஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து அவரது மகன் செல்வகுமார் தாப்பேட்டை போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்குமாட்டி தற்கொலை கொண்டார்
- பெரம்பலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
பெரம்பலூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரியங்கா நேற்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்று பணி முடித்து விட்டு மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.மதியம் 2மணிக்கு மேல் பிரியங்காவின் தொலைபேசிக்கு அவரது சகோதார் அழைத்த போது, அழைப்பை ஏற்காத காரணத்தால் சந்தேகமடைந்து தனது பெற்றோருக்கு தகவல் சொல்லி நேரில் சென்று பார்க்கச் சொல்ல, பெற்றேர்கள் நேரில் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் இடப்பட்டு பூட்டப்பட்டு இருந்ததால் பிரியங்காவின் தந்தை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து டாக்டர் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்திற்குள் கர்ப்பிணி தற்கொலை
- ஆர்டிஓ விசாரணை
தொட்டியம்,
தர்மபுரி மாவட்டம் நல்லப்பட்டியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரின் மகள் மோனிகா (வயது 20). கடந்த ஓராண்டுக்கு முன்பாக தனியார் கல்லூரியில் படித்து வந்த மோனிகா, தனது தோழி வீட்டுக்கு சென்று வரும் போது, தொட்டியம் வட்டம் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன்(வயது 25) என்பவருடன் செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது காலப்போக்கில், செல்போன் வழியாகவே காதலாக மாறி உள்ளது. கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை மோனிகா தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரின் வீட்டில் இருந்த தந்தை மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மோனிகா, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டு, தர்மபுரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோர்களுக்கு எழுதி கொடுத்து விட்டு மணிகண்டனுடன் சென்றுள்ளார். மணிக ண்டன் கரூரில் உள்ள டெக்ஸில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட தால், மோனிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லாமல் போய் விட்டது.மணிகண்டன் மற்றும் மோனிகா காட்டுப்புத்தூர் தவிட்டுப்பாளையம் பார்பர் காலனியில், வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மோனிகா கர்ப்பமாகி உள்ளார். இரண்டு மாத கர்ப்பிணியான அவர் காலை தான் குடியிருந்த வாடகை வீட்டில் மின் விசிறிக்கான கொக்கியில், கணவரின் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து அங்கு வந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின், முசிறி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான காட்டுப்புத்தூர் போலீசார் மோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசார ணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த மோனிகாவின் தந்தை முனிராஜ் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார்.இரண்டு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மோனிகாவிற்கு திருமணம் நடந்து ஓர் ஆண்டு மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது.
- பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் பிரித்திஷா (வயது 15). இவர் அதே ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனி அறையில் பிரித்திஷா இருந்துள்ளார்.பின்னர் அவரது தாய் செந்தாமரை அந்த அறைக்கதவை திறந்து பார்த்தபோது கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் பிரித்திஷா பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரித்திஷா உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






