என் மலர்
உள்ளூர் செய்திகள்
காதலியை அரிவாளால் வெட்டி கொலை செய்த காதலன், தூக்கிட்டு தற்கொலை
- அண்ணன் முறை என்பதால் காதலை முறித்துகொண்ட காதலி மீது ஆத்திரம்
- மயிலாடிகாடு கிராமத்தில் போலீஸ் குவிப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்குடி ஊராட்சி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் கருப்பையா மகன் துரைக்கண்ணு(வயது 36). பன்னீர்செல்வமும் கருப்பையாவும் உறவு முறையில் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் மகள் பவித்ரா(வயது 21). புதுக்கோட்டையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் பி.ஏ., இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிக்கும் துரைக்கண்ணுவும், பவித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.பின்னர் இந்த காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை இல்லை என்று தெரிவித்து இவர்களது காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர். துரைக்கண்ணு தனக்கு உறவு முறை சகோதரர் என்று தெரிந்து கொண்ட பவித்ரா, துரைக்கண்ணுவுடன் பழகுவதையும் பேசு வதையும் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். பவித்ரா வின் குடும்பத்தினர் கூலி வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்ட துரைக்கண்ணு, பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் துரைக்கண்ணு அவரது வீட்டிற்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மாலையில் வீடு திரும்பிய பவித்ராவின் தாயார் அஞ்சலை, பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு ஆலங்குடி போலீசாருக்கு தவல் அளித்துள்ளனர்.ஆலங்குடி போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், பவித்ரா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதும், துரைக்கண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டத்திற்காக அனுப்பி வைத்தனர்.மயிலாடி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில், ஆலங்குடி (பொறுப்பு )போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாராணி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பா ஸ்கரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர்.








