என் மலர்
திருச்சிராப்பள்ளி
- அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
- பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் நேற்று மக்கள் குறைகேட்க வந்தார். அப்போது, அப்பகுதி எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் அக்கட்சியினர் திருநாவுக்கரசரை முற்றுகையிட்டு, ''4 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் இங்கு வர்றீங்க. நன்றி சொல்லக்கூட வரல. அடுத்து தேர்தலை எதிர்பார்த்து வர்றீங்களா? என சரமாரி கேள்வி எழுப்பினர்.
மேலும் பீமநகர்-ஆழ்வார்தோப்பு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வருகிறார்கள். மிகவும் சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காஸ் சிலிண்டர் குடோனை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களையும் பார்க்க முடியவில்லை'' என சரமாரியாக குற்றம்சாட்டினர்.
அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ''இந்தப் பாலத்தை கட்டுவதற்கு குறைந்தது ரூ.50லட்சம் ஆகும். இதை நான் செய்ய முடியாது. இங்கு அமைச்சருங்க இருக்காங்க, எம்எல்ஏ இருக்காங்க. அவங்களப் போய் பாருங்கள். என்னோட ஆபீஸ்ல 24 மணி நேரமும் ஆட்கள் இருங்காங்க. அவங்ககிட்ட மனு கொடுங்க. நான் 4 நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்'' என்றார்.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் திருநாவுக்கரசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒரு வழியாக மனு அளித்து விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அங்கிருந்து திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி அருகே உள்ள சீராதோப்பு ஏகிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரஜினி (வயது 43). இவர் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் இயங்கி வந்த ஒரு சீட்டு கம்பெனியில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
இதை தொடர்ந்து தனது உரிமையாளர் மீதான நம்பிக்கையில் வீட்டின் அருகாமையில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சீட்டு பிடித்து பணம் வசூலித்து கொடுத்து வந்தார். அந்த வகையில் ரூ. 5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு உரிமையாளர் கொடுக்க வேண்டி இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் உரிமையாளர் ஆறுமுகம் சீட்டு பணத்துடன் மாயமானார். இதைத்தொடர்ந்து ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த ரஜினி கூடலூரில் உள்ள சுடுகாடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் ரஜினி சிகிச்சை பலகைக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் தமிழரசி ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த ரஜினிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஆடி மாதம் பிறந்ததால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தாமதமாக திருமணம் செய்த நிலையில் சீட்டு கம்பெனி உரிமையாளரின் நம்பிக்கை துரோகத்தால் ரஜினி மன வேதனையில் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.
கணவர் இறந்ததால் புதுபெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். சீட்டு கம்பெனி உரிமையாளர் ஓட்டம் பிடித்ததால் கலெக்சன் ஏஜென்ட் திருமணம் ஆன 4 மாதத்தில் தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி உறையூர் காசி விழுங்கி மீன் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடப்பட்டது
- மீன் வாங்குவதற்காக நிறுத்தி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்
திருச்சி,
திருச்சி உறையூர் காசி விழுங்கி மீன் மார்க்கெட் வாசலில் நேற்று காலை 6 மணி அளவில் உறையூர் வாத்துக்காரர் தெரு பகுதியை சேர்ந்த சிதம்பரம் (வயது 53) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மீன் வாங்குவதற்காக உறையூர்மார்க்கெட் உள்ளே சென்றார். மீண்டும் திரும்பி வந்த பார்த்தபோது நிறுத்திய இடத்தில் தனது வாகனத்தை காணவில்லை. இது குறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரைப் பெற்றுக் கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இரு சக்கர வாகனத்தையும், திருடிய நபரை தேடி வருகின்றனர்.
தா.பேட்டை,
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே தேரப்பம்பட்டி வனப் பகுதியில் ஒரு பெண் இறந்து கிடந்தார். கழுத்து பகுதியில் துண்டு ஒன்றும், அருகில் விஷ பாட்டில் மற்றும் அப்பெண்ணின் கைப்பை கிடந்துள்ளது.இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஜம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலின் அருகில் கிடந்த கைப் பையை ஆராய்ந்தனர். அதில் ஆதார்கார்டு, வங்கி புத்தகம் இருந்துள்ளது.அதில் உள்ள முகவரியின்படி தா.பேட்டை அருகே உள்ள ஊரக்கரையை சேர்ந்த அறிவழகன் என்பவரது மகள் பிரியங்கா என்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அறிவழகனை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.பிரியங்கா பிளஸ்-2 படித்து வீட்டில் இருந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாதேவி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். அன்று முதல் எங்கள் வீட்டிற்கு அவர் வருவதில்லை என்று அவர் தெரிவித்ததாக தெரிகிறது.இதற்கிடையே சம்பவம் அறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி.அருண்குமார் ேநரில் சென்று விசாரணை நடத்தினார்.முதற்கட்ட விசாரணையில் துண்டால் கழுத்து நெரிக்கப்பட்டு பிரியங்கா கொலை ெசய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- அவரது சகோதரர் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி வருகின்றார்
திருச்சி,
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சூசைராஜ் (வயது 35). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று 2-வது திருமணம் செய்து விட்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சூசைராஜ் திருப்பூரில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்தார். பின்னர் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரபட்சமாக பணி ஒதுக்கீடு செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து திருவெறும்பூர் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்
- திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அதிரடி நடவடிக்கை
திருச்சி,
திருச்சி மாவட்டம் எஸ்.பி.யாக வருண்குமார் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் மற்றும் போலீசார் தங்கள் குறைகளை தனது செல்போனில் தெரிவிக்கலாம். மேலும் குற்ற நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் தனது தனிப்பட்ட செல்போனுக்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த தகவல் ரகசியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி.அலுவலகத்தில் பணியாற்றும் ஏட்டு பிலால் பல மாதங்களாகவே பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக எஸ்.பி.அருண்குமாருக்கு தகவல் வந்துள்ளது.இதனை தொடர்ந்து இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதனை விசாரித்த தனிப்படை போலீசார் அறிக்கையை அருண்குமாரிடம் கொடுத்தனர்.அறிக்கையின்படி ஏட்டு பிலாலை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி.வருண்குமார் உத்தரவிட்டார். அறிக்கை கிடைத்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை அறிந்து போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திருவளர்ச்சிபட்டியில் நாளை சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது
- கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கு நடைபெறும் என்று திருச்சி கலெக்டர் அறிவிப்பு
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பூத் துறை பால்வளம் மற்றும்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 23-ந்தேதி(நாளை) காலை 8.00 மணி முதல்திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், திருவளர்ச்சிப்பட்டி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதோடு, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவ சோதனை, மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.மேலும் கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கு நடத்தப்படும்.கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்துசிறப்பு சிகிச்சையளிக்கப்படும். மேற்கண்ட பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். எனவே சுற்றுப்பூற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து பயன் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- முதலமைச்சர் வருகையை முன்னிட்டு இரு நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார்.
- முதலமைச்சரின் வருகையால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
திருச்சி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.
முதல் நாள் நிகழ்வாக வருகிற 25-ந்தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்கிறார்.
2-வது நாள் 26-ந்தேதி( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந்தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். பின்னர் 25-ந்தேதி சுற்றுப்பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.
பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் மற்றும் வருகிற 27-ந்தேதி ஆகிய இரு தினங்களிலும் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டு வருகிறது. கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முடிவெடுக்கப்பட்டு உள்ளது
- செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு
திருச்சி,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.முன்னதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கூறும்போது,தி.மு.க. தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம்.கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டது.மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
- தஞ்சையை சேர்ந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகளால் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.இதில் அவர் தனது கைப்பையில் மறைத்து சங்கிலி வடிவில் ரூ.47 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அவர் தஞ்சையை சேர்ந்த ரேணுகா(வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியமங்கலம் அருகே விபத்தில் சிக்கி மீண்டவர் திடீர் என மரணமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
அரியமங்கலம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்த் (வயது 28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி சுந்தரி மீனா திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் நான்காம் தேதி ஜெயந்த் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக திருப்பூர் சென்றார் பின்னர் மோட்டார் சைக்கிளில் திருச்சி திரும்பினார் திருச்சி திம்மராய சமுத்திரம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினர். கடந்த இருபதாம் தேதி மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயந்த் திடீரென இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி மீனா அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் வயிற்று வலி தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர், சிவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது அவரது மகன் முகமது யூசுப் வயது 20 இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைத்து வலியால் அவதிப்பட்டு வந்தார் இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட இயலவில்லை இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து முகமது யூசுப் வெகு நேரமாகியும் தூங்காமல் இருந்தால் அப்போது அவரது தாயார் மும்தாஜ் பேகம் ஏன் இதுவரை தூங்காமல் இருக்கிறாய் என கேட்டார். உடனே அறைக்குள் சென்ற முகமது யூசுப் பெற்றோர் துவங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து மும்தாஜ் பேகம் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






