என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முடிவெடுக்கப்பட்டு உள்ளது
- செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு
திருச்சி,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் மயில் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.முன்னதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் கூறும்போது,தி.மு.க. தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம்.கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டது.மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலியிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.






