என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

    முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

    2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

    அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • திருச்சி அருகே காதல் திருமணம் செய்த மகள் அவமானப்படுத்தியதால் கழுத்து நெரித்து கொன்ற தந்தை
    • கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

    தா.பேட்டை,

    திருச்சி தா.பேட்டை அருகே உள்ள ஊரகரையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பிரியங்கா (வயது 21).இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தா.பேட்டை அருகே தேரப்ப ம்பட்டி வனப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அருகில் விஷ பாட்டில் மற்றும் அவரது கைப்பை கிடந்தது.இது பற்றி தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து பிரியங்கா உடலை மீட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் விசாரணை நடத்தினார்.பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்ப ட்ட பிரியங்கா பிளஸ் 2 வரை படித்திருந்தார்.கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாதேவி பகுதியைச் சேர்ந்த சீனு பிரசாத் என்ற வாலிபரை காதலித்து திரும ணம் செய்தார். ஆனால் அவருடன் சரியாக குடும்பம் நடத்தாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.கைதுஇந்த நிலையில் கொலை நடந்திருப்பதால் அது ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற சந்தே கத்தின் அடிப்ப டையில் அவரது தந்தை அறிவழகனை பிடித்து கிடுக்கு பிடி விசார ணை நடத்தினர்.இதில் மகளை கொலை செய்ததை அறிவழகன் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.கைதான அறிவழகன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில்,எனது மகள் பிரியங்கா திருமணமான பின்னரும் கணவருடன் சேர்ந்து வசிக்காமல் எங்கள் வீட்டுக்கு வந்தார். அது மட்டுமல்லாமல் எனது உறவினர்களிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். இது எனக்கு அவமானமாக இருந்தது.இந்த நிலையில் சம்பவ த்தன்று பிரியங்கா என்னி டம் ரூ.5000 பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து உறவினர் ஒருவரிடம் பணம் வாங்கித் தருவதாக ஏமாற்றி பைக்கில் அழைத்து சென்றேன்.பின்னர் காட்டுப்பகுதி யில் மகளை இழுத்துச் சென்று துப்ப ட்டாவில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.வழக்கை திசை திருப்பு வதற்காக விஷ பாட்டில் ஒன்றை அவரது உடல் அரு காமையில் போட்டுவிட்டு வந்தேன் என கூறியுள்ளார். புதுப்பெண் கொலையில் தந்தை கைது செய்யப்ப ட்டுள்ள சம்பவம் தாப்பே ட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி தென்னூரில் போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தப்பி ஓடி உயிரிழந்தார்

    திருச்சி,

    திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ் (வயது 47). குடிபோதையில் தனது உறவினர் ஒருவரை தாக்கியதாக தெரிகிறது.இந்த தகராறில் அவர் செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் சுரேஸ் மீது புகார் அளித்தார். புகாரை திரும்ப பெறுமாறு அந்த நபரிடம் வலியுறுத்தி உள்ளார். புகாரை திரும்ப பெறவிட்டால் விஷம் குடித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் குடிபோதையில் சுரேஷ் விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பிஓடிய சுரேஷ் தென்னூர் தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். மீண்டும் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி உறையூர் சோழராஜபுரத்தில் மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்
    • பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி உறையூர் சோழராஜபுரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் மேயர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார். மாமன்ற உறுப்பினர் விஜயா ஜெயராஜ், மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதாள சாக்கடை பணி நடைபெற்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கலங்கலாக வருவதை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் அப்பகுதிக்கு நல்ல முறையில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து , மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் , ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சோழராஜபுரம் , சாலைரோடு , பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிகளில் வரும் குடிநீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . அப்பகுதி பொதுமக்கள் மேயரிடம் குடிநீர் கலங்களாக வருவதாக தெரிவித்து இதனால் எங்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார்கள். உடனடியாக மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில் சோழராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு , மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட முகாம் , ஆய்வுகளில் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இல்லை . பின்னர் மருத்துவக் குழுக்கள் வீடு வீடாக சென்று வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா இல்லை வேறு ஏதும் தொந்தரவுகள் இருக்கிறதா என்று கேட்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்தார்கள். இளநிலை பொறியாளர் கொண்ட குழு தினந்தோறும் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து குடிநீரை நல்ல முறையில் வழங்க அவர்களுக்கு மேயர் அன்பழகனால் அறிவுரை வழங்கப்பட்டது.

    • திருச்சி சோமரசம்பேட்டையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடைகாரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

    ராம்ஜிநகர்,

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமரசம்பேட்டை, அல்லித்துறை, அதவத்தூர், நாச்சி குறிச்சி, தாயனூர் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டி கடைகளில் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை ஈடுபட்டனர். அப்போது அல்லித்துறை அருகே உள்ள சரவணபுரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் சுமார் 6 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து. அல்லித்துறை, சரவணபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் பாபு (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருச்சி மாநகர் தள்ளுவண்டி தரைக்கடை மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • திருச்சி மாநகராட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திருச்சி,

    சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்த, புகைப்படம் எடுத்த வியாபாரிகளுக்கு விற்பனை நடைபெறும் இடத்தின் முகவரியுடன் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். நகர விற்பனை குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கிடு செய்ய கோரியும்,சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகள் காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளித்திட வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லா கடனாக ரூ.15,000-த்தை கூட்டுறவு வங்கி மூலம் உண்மையான தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வி மற்றும் திருச்சி மாநகர் தள்ளுவண்டி தரைக்கடை மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
    • திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கோவத்த குடியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி அன்னபூரணி (வயது 75).

    இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மணச்சநல்லூரில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்றார்.

    சமயபுரம் சந்தை பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் அவர் கீழே இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் உடனடியாக பஸ் நிறுத்த த்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேர்முக தொடர்பு எண்ணுக்கு சம்பவம் குறித்து தெரிவித்தார்.

    அப்போது, தான் வந்த பஸ்ஸின் அருகில் சந்தேகப்ப டும்படி இரு பெண்கள் நின்றதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

    பின்னர் சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரு பெண்களை தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்களின் போட்டோக்களை நவீன அப்ளிகேஷன் மூலமாக சோதனை செய்தபோது திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (43 ), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) என்பது தெரியவந்தது.

    பின்னர் காளியம்மாளின் செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அன்ன பூரணியின் செயினை திருடியவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

    இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கோவை, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், பெங்களூர், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, சித்தூர், காலகஸ்தி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ரேகா மற்றும் காளியம்மாளிடம் போலீசார் அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரை பவுன் செயின் மற்றும் வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைதான இந்த பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பது அறிந்து போலீசாருக்கு தலை சுத்தியது.

    பின்னர் அவர்களிடமி ருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 செல்போன்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காளியம்மாள் மற்றும் ரேகா ஆகியோரை திருச்சி ஜூடிசியல் மாஜி ஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறும்போது,

    வழக்கமாக திருடும் நகைகளை அந்த பெண்கள் உடனடியாக விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இவ்வாறு ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ள தகவலும் கிடைத்துள்ளது.

    காளியம்மாள் மற்றும் ரேகாவுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சரத்குமார் மற்றும் சரவணன் இடம் விசாரணை நடத்த உள்ளோம்.

    அதில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    • திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்து ஏர்போர்ட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
    • 1,250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

    திருச்சி,

    திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28) இவரது மனைவி புவனேஸ்வரி ( 25) இருவரும் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மணிகண்டன், புவனேஸ்வரி ஆகிய 2 பேரையும் பிடிக்க முயன்ற போது மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.பிறகு போலீசார் புவனேஸ்வரியை கைது செய்து அவர்களிடமிருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • கே.கே. நகரில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி கே. சாத்தனூர்பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தை உள்ளது. இதில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு ஆண் குழந்தை திடீரென்று இறந்து விட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது உடல் நலனும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி சிவகுமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு பாடலை ரசித்த எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மகளிர் அணி புகார் மனு

    திருச்சி,

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கவிதா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமானமு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் அநாகரிகமான முறையில் பாட்டு பாடி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் கனிமொழி எம்.பி. ஒரு பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி பாடல் பாடினர். அதனை முன் வரிசையில் அமர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ரசித்து கைதட்டி சிரித்தார்கள். அதனை பார்த்து நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன்.இவ்வாறான செயல்களை ஊக்குவித்த கட்சியின் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீதும், அந்த பாடலை பாடியவர்கள் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி அருகே டாக்டரை தாக்கி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது
    • டாக்டரை தாக்கிய தாய்-மகனுக்கு போலீஸ் வலைவீச்ச

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர்பாபு (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.வழக்கம் போல் பணி முடிந்த உடன் தனது காரில் திருச்சி- தஞ்சை தேசிய ெ நடுஞ்சாலையில் அரியமங்கலம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னால் இருசக்கர வாகனத்தில் த னது தாயுடன் வந்த வாலிபர் கார் மீது மோதியுள்ளார். இதனால் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி கீழே இறங்கினார் ஜவகர்பாபு,அப்போது அந்த வாலிபரும், அவரது தாயும் சேர்ந்து ஜவகர்பாபுவை தாக்கி கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.இதில் காயம் அடைந்த ஜவகர்பாபும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வாலிபரையும் அவரது தாயையும் தேடி வருகின்றனர்.

    • சீட்டு கம்பெனி உரிமையாளர் ஓட்டம் பிடித்ததால் கலெக்சன் ஏஜெண்ட் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • திருமணமான 4 மாதத்தில் பரிதாப முடிவு

    திருச்சி,

    திருச்சி அருகே உள்ள சீராதோப்பு ஏகிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரஜினி (வயது 43). இவர் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் இயங்கி வந்த ஒரு சீட்டு கம்பெனியில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.இதை தொடர்ந்து தனது உரிமையாளர் மீதான நம்பிக்கையில் வீட்டின் அருகாமையில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சீட்டு பிடித்து பணம் வசூலித்து கொடுத்து வந்தார். அந்த வகையில் ரூ. 5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு உரிமையாளர் கொடுக்க வேண்டி இருந்தது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் உரிமையாளர் ஆறுமுகம் சீட்டு பணத்துடன் மாயமானார். இதைத்தொடர்ந்து ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.இதனால் செய்வதறியாமல் திகைத்த ரஜினி கூடலூரில் உள்ள சுடுகாடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் ரஜினி சிகிச்சை பலகைக்காமல் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது தாயார் தமிழரசி ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்கொலை செய்த ரஜினிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஆடி மாதம் பிறந்ததால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.தாமதமாக திருமணம் செய்த நிலையில் சீட்டு கம்பெனி உரிமையாளரின் நம்பிக்கை துரோகத்தால் ரஜினி மன வேதனையில் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.கணவர் இறந்ததால் புது பெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். சீட்டு கம்பெனி உரிமையாளர் ஓட்டம் பிடித்ததால் கலெக்சன் ஏஜென்ட் திருமணம் ஆன 4 மாதத்தில் தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×