search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complind"

    • மணப்பத்தூர் ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
    • அரியலூர் கலெக்டரிடம் புகார் மனு

    அரியலூர்,

    தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளரும், ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகரியுமான கு.முடிமன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நலிவுற்ற ஏழை, எளிய குடும்பங்கள் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது.

    ஆனால் மணப்பத்தூர் ஊராட்சியில் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த திட்ட நிதிகள் நலிவுற்றவர்களுக்கு பயன்படுத்தப்படாமல், வேறு வழியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.எனவே ஊராட்சியை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ரூ.17.50 லட்சம் மோசடியில் இருந்து தப்பிக்க பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவதாக புகார்
    • பணத்தை இழந்த கரூர் வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் புகார்

    திருச்சி,

    கரூர் சரவணா நகர் நத்தமேடு சோழியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல்(வயது 57) இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-நானும் சில பங்குதாரர்களும் சேர்ந்து கரூரில் பழைய பேப்பர் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி அவரது உறவினர் மூலமாக எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு திருச்சியில் பழைய பேப்பர் வாங்கி விற்கும் தொழிலை நடத்தலாம் என கூறினார்கள்.

    பின்னர் எனது பங்காக ரூ. 5 லட்சம் ரொக்கமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் அவர் தனது மகள் கணவர் மற்றும் இன்னொருவருடன் கரூர் வந்தார். வாங்கிய பணத்தை திரும்ப தந்து விடுகிறோம்.

    இப்போது மருமகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை காப்பாற்ற பணம் வேண்டும் என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து நான் கம்பெனி பணம்ரூ.12 லட்சம் 50 ஆயிரம் தொகையை சிறிது சிறிதாக கொடுத்தேன். ஆனால் பணத்தை திரும்பத் தரவில்லை.அதைத்தொடர்ந்து நான் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி அவர்கள் மீது உறையூர் போலீசில் புகார் செய்தேன். இந்த நிலையில் தற்போது அந்த அந்த பெண்மணியின் மகளை கர்ப்பமாக்கி கருவை கலைத்ததாக ஒரு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தப் பெண்ணை நான் தனியாக சந்திக்கவில்லை. எனது கம்பெனி பணம் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பத் தராமல் என் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்துள்ள 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபன் சாம்ராஜ் என்பவரது சார்பில், அவரது ஆதரவாளர்கள், வக்கீல்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, தற்போது அதே மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் ஒருவர், நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு மன உளைச்சல் தரும் வகையில், சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தி, போலீஸ் உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டி, செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதி வாங்க முயற்சித்து வருகிறார். மேலும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டும். மேலும் அந்த டாக்டரிடம் உரிய விசாரணை நடத்தி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. புகார் மனுவினை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • பெரம்பலூர் தி.மு.க. மகளிர் அணியினர், எடப்பாடி பழனிச்சரி மீது புகார் மனு அளித்துள்ளனர்
    • முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து பாடல் பாடியது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் மனு

     பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான மகாதேவி தலைமையில், மகளிர் அணியினர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், கடந்த 20-ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் நவரசம் கலைக்குழு சார்பாக பாடல்களை பாடிய பன்னீர் என்பவர் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினையும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யையும், தி.மு.க. துணை பொது ச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யையும் தவறாக சித்தரித்து அவதூறான பாடல் ஒன்றை பாடினார். எனவே நவரசம் கலைக்குழு பாடகர் பன்னீர் மீதும், மதுரை அ.தி.மு.க. மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீதும், இந்த சட்ட விரோத செயலுக்கு துணையாக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவினை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்

    • மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு பாடலை ரசித்த எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
    • திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மகளிர் அணி புகார் மனு

    திருச்சி,

    திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கவிதா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமானமு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் அநாகரிகமான முறையில் பாட்டு பாடி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் கனிமொழி எம்.பி. ஒரு பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி பாடல் பாடினர். அதனை முன் வரிசையில் அமர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ரசித்து கைதட்டி சிரித்தார்கள். அதனை பார்த்து நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன்.இவ்வாறான செயல்களை ஊக்குவித்த கட்சியின் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீதும், அந்த பாடலை பாடியவர்கள் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவரை மாற்ற கோரி கவுன்சிலர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
    • 20 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி 27 வார்டுகள் கொண்டது. இதில் நகர்மன்ற பெண் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த முனவர் ஜான் பதவி வகித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல், கழிவுநீர் வடிகால், மின்விளக்கு, சின்டெக்ஸ் தொட்டி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனையின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து நகர் மன்ற பெண் தலைவரை மாற்ற கோரி, தி.மு.க.வைச் சேர்ந்த துணைத் தலைவர் தோட்டம் பஷீர் உள்ளிட்ட 18 தி.மு.க. கவுன்சிலர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர், சுயேச்சை கவுன்சிலர் என 20 கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். இது குறித்து புகார் மனு அறித்த கவுன்சிலர்கள் கூறும்போது, நகர் மன்ற தலைவரை மாற்றாத பட்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    ஜெயங்கொண்டம் அருகே காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் ராஜவேல்(வயது 31). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் பாண்டியன் மகள் நதியா(21) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக ராஜவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வது பற்றி வீட்டில் பேசியபோது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் நதியாவை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நதியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை சில ஆண்டுகளாக ஏமாற்றி காதலித்து விட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து ராஜவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாய்லர் ஆலை தொழிற்சங்க நிர்வாகி மீது போலீசில் புகார்
    • அண்ணாமலையை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு

    திருச்சி, 

    திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பொது த்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் பாய்லர் ஆலை உள்ளது. இங்கு கடந்த 14 ம் தேதி வாயிற் கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாநில பாஜக தலைவர் அண்ணா மலையை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பாய்லர் போலீஸில் இன்ஸ்பெக்டர் கமலவேணி யிடம் பாஜக மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஆபாசமாக நடைபெற்றது
    • நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேடையில் ஆடிய கலைக்குழுவினர்மிகவும் மோசமாக அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனம் ஆடியதாகவும், நடனத்தை பார்க்க வந்த 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பு நடனம் என்ற பெயரில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நடன நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த தமிழ் நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதனை நேரில் சந்தித்து இது குறித்து புகார் செய்தனர். அந்த புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடனம் ஆடியவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆபாச நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சமூக நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம்
    • போலீசார் குவிக்கப்பட்டனர்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேவர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 24). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு அடுத்த வாரத்தில் மீண்டும் சிங்கபூருக்கு செல்வதற்காக ஆயத்த நிலையில் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வைரிவயல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவீன் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.இதனை கேட்ட உறவினர்கள் நவீனை அழைத்துக்கொண்டு, அக்கினி பஜாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனை அறிந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்து நவீன் இறந்து விட்டதாகக்கூறி மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தினை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாடை எலும்பு முறிவிற்கு அறுவை சிகிச்சை செய்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தியதாக புகார்
    • மாமியார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் அருகே மனைவியை மூன்று நாட்கள் தனிமையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது செய்து உடந்தையாக இருந்த மாமியார் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி விசாரித்து வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் சத்யா. (26) (டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார்.) இவரது கணவர் விஜயபாண்டியன். (30) டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 7 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் மிருதேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கணவர் விஜயபாண்டியன் மாமியார் மனோரஞ்சிதமும் சத்யாவை கொடுமைப்படுத்தியது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 10 ஆம் தேதி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் கணவர் விஜயபாண்டியன் அவரது தாயார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை கடந்த மூன்று நாட்களாக தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இது குறித்து சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் 3 நாட்கள் என்னை தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர் சாப்பாட்டிற்கு பதிலாக சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தினர். வேறு ஒருவரோடு தொடர்பில் இருப்பதாக கூறினாள் உன்னை விட்டு விடுவதாக அடித்து சித்திரவதை செய்ததால் தானும் அதற்கு ஒத்துக் கொள்வதை செல்போனில் பதிவு செய்துள்ளனர்.இதனை அடுத்து எனது கணவர் விஜயபாண்டியன் அவரது தாய்மாமன் பரமசிவம், தாயார் மனோரஞ்சிதம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் நீ வாழ வேண்டும் என்றால் 12 லட்சம் பணம் சிதம்பரத்தில் இருக்கும் வீடு மற்றும் 10 பவுன் நகையுடன் வந்தால் வாழலாம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தால் உனது வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.மேலும் எனக்கு சொந்தமான 20 சவரன் நகையை கொடுக்காமல் என்னை சித்திரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. வழக்கு பதிவு செய்து சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் மனோரஞ்சிதம் தாய்மாமன் பரமசிவம், தர்மலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.


    • சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் வலியறுத்தி உள்ளனர்.
    • அரசு பஸ் புதிய தொடக்க விழாவிற்கு வந்த கலெக்டரிடம் வலியுறுத்தல்


    பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தில், அரசு பஸ் புதிய வழித்தடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் அங்கு சென்றார். அப்போது திம்மூர் கிராம பெண்கள், ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் திம்மூர் கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களை வாங்கியும் அதனை கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் முறையிட்டனர். மேலும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறைகள் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் திம்மூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பள்ளி வளாகத்தை சுற்றி புல், பூண்டுகள், கற்கள் கிடப்பதை பார்த்து உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.பள்ளி வளாகம் தூய்மையாக இல்லாவிட்டால், அடுத்த முறை வரும் போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பள்ளி வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.

    ×