என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்க நிர்வாகி மீது போலீசில் புகார்
- பாய்லர் ஆலை தொழிற்சங்க நிர்வாகி மீது போலீசில் புகார்
- அண்ணாமலையை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு
திருச்சி,
திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் பொது த்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் பாய்லர் ஆலை உள்ளது. இங்கு கடந்த 14 ம் தேதி வாயிற் கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாநில பாஜக தலைவர் அண்ணா மலையை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பாய்லர் போலீஸில் இன்ஸ்பெக்டர் கமலவேணி யிடம் பாஜக மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






