என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

    திருச்சி, 

    ஸ்ரீரங்கம் வடக்கு தெரு ரயில்வே பி கிளாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லீலாவதி ( 36). இவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவரது கணவர் சங்கர் ஓய்வு அறைக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் செல்போன் மற்றும் ஹோம் தியேட்டர் பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து லீலாவதி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிவு செய்து ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 19) என்ற வாலிபரை கைது செய்தார். அவரிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருச்சி காப்பகத்தில் இருந்து 2 சிறுமிகள் தப்பி ஓடியுள்ளனர்
    • கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு மாயமான சிறுமிகளை தேடி வருகிறார்.

    திருச்சி,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வி.என்.நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று உள்ளது. காப்பகத்தின் பொறுப்பாளர் ஜூலியட் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் காப்பகத்தில் தங்கி இருந்த திருச்சி இனியானூர் இந்திரா நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ஜனனி (வயது 17).தஞ்சை மாவட்டம் தொண்டைமான் சாலை பர்மா காலணியைச் சேர்ந்த சின்னத்துரை மகள் கீர்த்தனா (வ 16)ஆகிய இரண்டு பேர் தங்கி இருந்தனர். அவர்கள் கடந்த 24-ந்தேதி காப்பகத்தை விட்டு வெளியேறி விட்டனர் .அவர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு மாயமான சிறுமிகளை தேடி வருகிறார்.

    • திருச்சி அருகே இன்று கார் மீது லாரி மோதி டிரைவர் சாவு
    • ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 47) கார் டிரைவர். இவர் கரூர் திருச்சி சாலையில் காரை ஓட்டிச் சென்றார்.இந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி, கார் மீது லாரி மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய கார் டிரைவர் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் எலக்ட்ரீசியன் பிணம் கிடந்தது
    • பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவன் சகாயராஜ் (வயது 40 )எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரதுபூட்டிய வீட்டுக்குள் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சகாயராஜ் தூக்கில் பிணமாக தூங்கி கொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.மனைவி கோபித்துச் சென்ற அன்றைய தினமே அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள்.
    • இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன.

    திருச்சி:

    திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

    தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்கு தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

    இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியாவில் ஊழல் ஒரு பிரச்சனையாக உள்ளது.

    ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள, 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாக, 'டிஜிட்டல் இந்தியா' கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள். இதனால் இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை. சமீபத்தில் நடைபெற நிகழ்வில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதனால், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன்.

    முத்ரா திட்டத்தின் மூலம் பலரும் தொழில் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது.
    • மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை.

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த, கச்சத்தீவை தாரை வார்த்த, என தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இந்த சட்டத்தை தி.மு.க. தடுத்து இருக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகிற கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?. வருகிற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் தி.மு.க. நேரடியாக களம் இறங்குவதாக முடிவு எடுப்பார்களா?.

    மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை. எனக்கு தெரிந்து புரட்சி தமிழர் என்றால் நடிகர் சத்யராஜை தான் அப்படி அழைப்போம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி கொண்டு இருக்கிறோம். எங்கள் கொள்கை முடிவுப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையை ஏற்று யாராவது கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வைப்பது குறித்து பார்க்கலாம்.

    அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் செடல் மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கோ பூஜை
    • அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

    திருச்சி 

    தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை ஒட்டி இன்று 8ம் ஆண்டாக திருச்சி பீமநகர் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடலில் மாபெரும் கோ பூஜை நடந்தது.

    உலக நன்மை வேண்டியும், சகல ஐஸ்வர்யங்களையும் நல்கும் இந்த கோ பூஜைக்கு தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை நிறுவனர் வ.ச. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். இதில் ரிஷிகேஷ் சுவாமி முத்தாநந்த சரஸ்வதி பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்.

    ஜெய் மாருதி ஆர். ரமேஷ், கமல் ராஜ், சித்தார்த்தன், விவேகானந்தர் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் சதீஷ் ,பொருளாளர் தனபால், இணைச் செயலாளர் நாகராஜ், ராம்க ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை தினேஷ் கண்ணன் தொகுத்து வழங்கினார்.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருச்சி அருகே லாரி மோதி மூதாட்டி-வாலிபர் பலி லிப்ட் கேட்டு சென்ற போது நேர்ந்த சோகம்
    • இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்துள்ளார்

    திருச்சி 

    திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட அளுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (வயது 65) நாகமங்கலத்திற்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் லிபட் கேட்டு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற செல்வம் என்பவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின் சீட்டில் அமர்ந்து பாலாமணி பயணித்துள்ளார்.

    அப்போது அளுந்தூர் அரசு ஐடிஐ எதிரே சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்து சம்பவத்தில் மூதாட்டி, வாலிபர் இருவரும் தூக்கி விசப்பட்டனர்.

    இதில் பாலாமணி சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்து ஏற்படுத்திய லாரி விற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் இருசக்கர வாகனத்தை ஒட்டிய செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை ஒரு மணி நேரத்தில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    • டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவிக்கிறார்கள்.
    • மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்னரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ள

    திருச்சி 

    திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து அந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே என் நேரு கூறும் போது,

    புதிய பேருந்து நிலைய பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால் மழை காலம் வர உள்ளதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்கிற முனைப்பில் பணிகள் நடைபெறுகிறது.

    ஜீயபுரம் வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு இன்னும் ஒன்னறை மாதத்தில் ஒப்பந்தம் கோரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா என்பது தெரியாது. ஆனால் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். அந்த பேருந்து நிலையங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் படாது.

    அங்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம்.

    பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கரும், 10 ஏக்கர் ஐ.டி பார்க் அமைக்கவும், 30 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும், காவல் நிலையத்திற்கு ஒன்னரை ஏக்கரும், மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்னரை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ளது. வருங்காலத்தில் தேவைப்படும் போது அதை பயன்படுத்துவோம்.

    திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டது. விரைவில் அது கொண்டு வரப்படும்.

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும் போது அந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய போது ஒரு லட்சம் மாணவர்களுக்கு அது வழங்கப்பட்டது. அது தற்போது விரிவுப்படுத்தப்பட்டு இன்று 11 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டு முதலமைச்சர் அதை தொடங்கி உள்ளார். நிதி நிலைமைக்கு ஏற்ப அது மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
    • இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்சி 

    பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் எடை குறைவு இல்லாமல் தரமான பொருட்களை வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்க கூடாது,நுகர் பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு கூடுதல் பயன் கொண்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் கொள்முதல் நிலையங்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார்.சங்கத்தின் பெயர் பலகையினை மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் திறந்து வைத்தார்.கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன்,மாநிலச் செயலாளர் ராசப்பன்,மண்டல செயலாளர் தீனதயாளன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன்,சி.ஐ.டி.யு மாவட்ட குழு ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருச்சி உறையூரில் பரபரப்பு பா.ம.க.நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்புபோலீசில் புகார்
    • சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

     திருச்சி 

    திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் கதிர் ராஜா. முன்னாள் பாமக மாவட்ட செயலாளரான இவர் திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். இவரது வண்டியை வீட்டில் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர் .அது மட்டுமின்றி அருகில் உள்ள மற்றொருவரின் வாகனமும் எரிக்கப்பட்டது.இதுகுறித்து கதிர் ராஜா உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார்

    விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுலூர் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இது லால்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் வயது 43 என்பவர் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    திருச்சி ஈவெரா கல்லூரியில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குமிழலூர் இந்த கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இவர் குமலூர் கல்லூரியில் படித்து வரும் சில மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் வாட்சப் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் மனக்குமுறலை கொட்டி தீர்த்தனர். இதனால் மாணவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

    பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் அந்தக் கல்லூரியின் வணிகவியல் துறை அறைக்குள் திடீரென புகுந்தனர். பின்னர் அங்கிருந்த விரிவுரையாளர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் அவரால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

    இதில் அவர் மயங்கி சரிந்தார். மேலும் ஆத்திரமடங்காத மாணவர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பெஞ்சுகளை அடித்து நொறுக்கினர்.

    அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு வினோத்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த லால்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் துணைபோலிட்டு பிரண்டு அஜய் தங்கம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் கார்த்திகேயினி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வினோத்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×