என் மலர்
திருச்சிராப்பள்ளி
- உடற்பயிற்சி கூடத்தில் ஸ்டீம் பாத் எடுத்த பெண்ணின் 10 பவுன் நகைகள் மாயமானது
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
உறையூர் மருதாண்டகுறிச்சி குழுமணி மெயின் ரோடு மங்கள நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ரமா ரேவதி (வயது 35). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள பெண்கள் பிட்னஸ் மையத்தில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது நகைகள் செயின் வளையல் மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தார். ஸ்டீம் பாத் எடுத்து முடித்து விட்டு வந்து பார்த்தபோது கைப்பையில் இருந்த நகைகளையும், பணத்தையும் காணவில்லை. உடனே இதுகுறித்து தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது
- பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்
திருச்சி,
திருச்சி காவேரி ரோடு கீழதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக கீழ தேவதானத்தை சேர்ந்த குணா என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி திருவெறும்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் அசோக் (வயது 35). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அசோக்கிடம் பணத்தை பறித்து தப்ப முயன்றனர். அதற்குள் அசோக் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் மணப்பாறையை சேர்ந்த கந்தசாமி, சிவகங்கை திருப்பத்தூர் சேர்ந்த நாகராஜ்,திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிய வந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஓய்வு பெற்ற எஸ்.ஐ. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்
- அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானைந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
திருச்சி,
அரியமங்கலம் மலையப்ப நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 70). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். கடந்த 2011 ம் ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 26-ந் தேதி வரலட்சுமி பூஜை இவரது வீட்டில் நடத்தியுள்ளனர். அப்போது பழனிச்சாமி எதிர்பாராத விதமாக வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு காதில் இரத்தம் வந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானைந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி போலீசாரின் அதிரடி வேட்டையில் கஞ்சா, லாட்டரி, சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- ஒரே நாளில் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி,
திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்தந்த போலீஸ் சரகங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட் ,பாலக்கரை. உறையூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூரைச் சேர்ந்த ஜெகதீசன் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஏர்போர்ட், எடமலைப்பட்டி புதூர், கோட்டை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடந்ததாக போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர் .இந்த வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் திருச்சி மாநகரில் நடந்த அதிரடி வேட்டையில் ஒரே நாளில் கஞ்சா, சூதாட்ட வழக்கில் மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருச்சி சிறுகனூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது
- சிறுகனூர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்
மண்ணச்சநல்லூர்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த குமரேசன் (24). திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி(23). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து சிறுகனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரை, சிறுகனூர் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை தீர்வு கிடைக்காததால் போலீசாரிடம் ஹர்ஷவர்த்தினி கணவருடன் தான் இருபேன் என்று தெரிவித்தார். மேலும் இரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுகனூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.
திருச்சி:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார்.
பின்னர் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுத்தார். அதைத்தொடர்ந்து இன்று அரியலூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சத்திரம் பஸ் நிலையம் வழியாக புறப்பட்டுச் சென்றார்.
அப்போது கடந்த 30 நாட்களாக சத்திரம் அண்ணா சிலை அருகாமையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் திடீரென அவரது காரை வழிமறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், மோடி அரசு வாக்குறுதி அளித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் கடனுக்காக வங்கிகள் கொடுக்கும் நெருக்கடியை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. மேலும் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.
தினமும் விதவிதமான போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணு இன்றைய தினம் மனித எலும்பை கடித்து போராட்டம் நடத்தினார்.
- திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு ஏழு மையகளில் நடைபெற்றது
- மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர்
திருச்சி,
சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கான எழுத்துத்ேதர்வு திருச்சி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 7,402 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்த முதல் கட்ட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 402 பேரில் ஆண்கள் 4,555 பேரும், பெண்கள் 1,540 பேர் என மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர். இதில் 961 ஆண்கள், 346 பெண்கள் என மொத்தம் 1,307 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தேர்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
- திருச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கினார்
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன் சந்திப்பு
கும்பகோணம், நாகை, திருவாரூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவர், கடந்த மாதம் 30-ந் தேதி அரிஸ்டோ மேம்பாலத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளித்த மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
- அவரை தேடும் பணி தீவிரம்
திருச்சி,
திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆதி ஹரிஹரசுதன் (வயது15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர் களுடன் நேற்று செக் போஸ்ட் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் இறங்கி அனைவரும் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆதித்ஹ ரிஹரசுதன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலை யத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் ஆதித் ஹரிஹரசுதன் உடலை தேடினர்.உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- ஏர்போர்ட் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராகுல்( வயது 21) என்பவரையும்,திருவரங்கம் குஜிலியம் தோப்பு பகுதியில் கஞ்சா விற்ற மதன் குமார் (22),ராமச்சந்திரன் (19) என்பவரையும், தி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற வரகனேரி ராவுத்தர் சந்து பகுதியை சேர்ந்த கண்ணன் (32)என்பவரையும். திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கூனி பஜாரை சேர்ந்த குருமூர்த்தி (வயது 23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஸ்ரீரங்கம் உத்தர வீதிகளில் புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது
- மாநகராட்சி ஆணையரிடம் ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தினர் மனு அளித்தனர்
திருச்சி,
ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தி நாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது;-ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 3 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்த நிலையில் கீழ் உத்தர வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் வேதாந்த தேசிகர் சன்னதி அருகில் புதிதாக ஒரு கழிப்பறையும், வடக்கு உத்தர வீதியில் ஸ்ரீ ராமானுஜ ஐயர் மடத்திற்கு எதிரில் மற்றொரு பொது கழிப்பறையும் மாநகராட்சி நிர்வாகத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது.இதனால் 4 உத்தர வீதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்த வீதிகளில் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.பழமையான மடங்கள் ஆச்சாரியார்களின் சன்னதிகள், பாடசாலைகள் உள்ளன.உத்தரவீதிகளில் கழிவுநீர் வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை.இதனால் மழைக்காலங்களில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் புதிதாக 2 கழிப்பறைகளை உத்தர வீதிகளில் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கும் தை தேரோட்டத்திற்கும் திருவிழாக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும். ஏற்கனவே உத்தர வீதிகளில் கழிப்பறைகள் அமைக்க நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளோம்ஆகவே கோவிலுக்கு சொந்தமான மாற்று இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டினால் நல்லது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்தனர்
- மாவட்டச் செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையில் நடந்தது
திருச்சி,
திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் பிறந்த நாளை கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமை தாங்கினார்.மலைக்கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மன்னார்புரம் விழிஇழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.அதன் பின்னர் மாலையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி கே. பாண்டியன், ராமு, பொதுக்குழு உறுப்பினர் விஜய் சுரேஷ், ஜெயராமன்,பகுதி செயலாளர் என் எஸ் எம் மணிகண்டன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், மகாமுனி, பிரீத்தா விஜய் ஆனந்த், பெருமாள், சங்கர்உறையூர் பகுதி செயலாளர் மோகன், அவைத்தலைவர் நவ்ஷாத் ,பொருளாளர் பெரிய மருது, துணை செயலாளர் பரதன் குமார் வட்டச் செயலாளர் வல்லரசு பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






