என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் திடீர் அகற்றப்பட்டது
- போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திருச்சி,
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில் திருச்சி மத்திய நிலைய சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகார்கள் கூறப்ப ட்டது. இதையடுத்து கலெ க்டர் ஆக்கிரப்புகளை அகற்றுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வா ளர் பிரின்ஸ் சகாயராஜ் ஆகியோர் கொண்ட அதிகா ரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையி லான போலீசார் உதவியுடன் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர் .திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் உள்பகுதி, வில்லியம்ஸ் ரோடு, பாரதி தாசன் ரோடு, ராக்கின்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து உள்ள 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜேசிபி எந்திரம், இரண்டு லாரிகள் உதவியுடன் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சாலை மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உட னடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தனர்.
- திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன், பணி இடை நீக்கத்தினை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது
கே.கே. நகர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் திருச்சி கிளையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் தலையீட்டினை கண்டித்தும், கள்ளக்குறிச்சி வட்டாட்சியர்மனோஜ் முனியன், பணி இடை நீக்கத்தினை ரத்து செய்ய கோரியும், இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
- திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்
கே.கே. நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது33) என்பவர் தான் ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- லால்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரி, பெண் உதவியாளர் மீது தாக்குதல் நடைபெற்றது
- தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்கு டி அருகே டி.கல்வி க்குடி வருவாய் கிராம கிராம நிர்வாக அதிகாரி சரவணன் (48). கடந்த 2 வருடங்களாக பணிபுரியும் இவர், நத்தமா ங்குடி பகுதியையும் பார்த்து வருகிறார்.இந்நிலையில், நத்தமா ங்குடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் எழில்நி லவன் (வயது33). இவர் தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெற, சில ஆவ ணங்கள் தேவைப்படு வதால், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு சரவணனை அணுகியுள்ளார்.அப்போது, கலைஞர் உரிமை தொகை திட்டத்தி ற்கு விண்ணப்பித்த பெண்க ளின் விவரங்கள் சரிபா ர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் வருமாறு சரவணன் கூறினார்.இதையடுத்து, 2 நாட்கள் கழித்து சரவணனிடம், இன்றைக்காவது மின் இணைப்பு பெற ஆவணங் களை தருமாறு கேட்டுள் ளார். அதற்கு விஏஓ சரவ ணன் இன்றும் பணிகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.இதனால், கோபமடைந்த எழில் நிலவன் அந்த வேலை தான் முக்கியமா? என் வேலை முக்கியம் இல்லையா? என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, சரவ ணணை தாக்கியுள்ளார். இதை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் கோகிலாவை யும் தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த சரவணன், கிராம உதவியா ளர் கோகிலா ஆகியோர் லால்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் லால் குடி போலீசார் வழக்கு செய்து விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா ஆகியோரை தாக்கிய வாலிபரை தேடிவருகின்றனர்.
- திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழுகூட்டம் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது
- வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திருச்சி,
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில், உதவி ஆணையர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கே. எஸ். நாகராஜன், கமால் முஸ்தபா, வெ. ராமதாஸ், க. சுரேஷ் குமார், பைஸ் அஹமது, சோபியா விமலா ராணி, விஜயா ஜெயராஜ் , விஜயலட்சுமி சரவணன், நாகலட்சுமி நம்பி ,பங்கஜம் மதிவாணன் ,முத்துக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் ரமேஷ், ரவிக்குமார், சந்திரசேகர், நிர்வாக அலுவலர் வசந்தி, சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், பிரசாத், பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வார்டுகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மணப்பாறை அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் கடத்தப்பட்டார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி மருங்காபுரி மாளிகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 21).பள்ளிப்படிப்பை முடி த்துள்ள இவர் பெற்றோ ருக்கு உறுதுணையாக இரு ந்து வந்தார். நேற்று வழக்க ம்போல் வீட்டின் அருகாமை யில் ஆடு மேய்க்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சடைந்த அவரது தாயார் சரோஜா வளநாடு போலீசில் புகார் செய்தார். அப்போது சிவர ஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந் தது தெரிய வந்தது.இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த மணி வேல் என்பவரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர் சிவரஞ்சினியை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அந்த அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
- தகவல் தர ரெயில்வே போலீசார் அறிவிப்பு
திருச்சி,
திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே காஜாபேட்டை பகுதிடியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்கைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபர் மஞ்சள் நிற சட்டையும், சிமெண்ட் கலர் கையிலியும் அணிந்துள்ளார். அவர் வலது கையில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற சீட்டு, பிங்க் கலரில் உள்ளது. இடது கை நெருப்பில் பட்டு சற்று எரிந்த நிலையில் சுருங்கியுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் 9498139826, 9498101978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- திருச்சியில் அரசு பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்று உள்ளது
- பஸ் படிகட்டில் நின்ற இளைஞர்களை மேலே ஏறச்சொன்னதால் ஆத்திரம்
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை அண்ணா நகரை சேர்ந்ததிருமுருகன் (வயது 43) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் .திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி அரசு டவுன் பஸ்சை ஓட்டி சென்றார்.பஸ் மெயின் கார்ட்கேட்டு தாண்டி தேவர் ஹால் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத 4 பேர் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது டிரைவர் மற்றும் கண்டக்டர் படிக்கட்டில் பயணம் செய்தவர்களை கண்டித்து பஸ்ஸுக்குள் ஏறுமாறு கூறினர். இதனால் டிரைவருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி டிரைவர் திருமுருகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் திருமுருகன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி மலைக்கோட்டை அருகே மாநகராட்சியின் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டது
- குடிநீர் தொட்டியை உடைத்ததாக தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
திருச்சி,
திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டு அருகே மாநகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது.இந்த குடிநீர் தொட்டி தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து உடைத்ததாக கூறப்படுகிறது . இது குறித்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் ரவி காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வரகனேரியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சரவணன், மலைக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.திருச்சி மாநகராட்சி குடிநீர் தொட்டியை திமுக பிரமுகர் உடைத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருச்சியில் விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கணவரின் நண்பர் மீது புகார்
- கோட்டை பெண் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது
திருச்சி,
திருச்சி பாலக்கரை கான் மியான் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். உடல் நலக்குறைவால் அவர் வீட்டில் இருந்தபோது உறையூர் நாடார் தெருவை சேர்ந்த ரஃபீக் ராஜா (வயது 42) என்ற அவரது நண்பர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றார்.இதில் ரபிக் ராஜாவுக்கும் சையது இப்ராஹீமின் மனைவி பாத்திமா (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத்தொடர்பாக மாறியது.பின்னர் தனது திருமண வயது மகளின் எதிர்காலத்தை நினைத்து ரபீக் ராஜாவுடன் இருந்த தொடர்பை பாத்திமா துண்டித்தார்.ஆனால் இதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த நிலையில் குடிபோதையில் அடிக்கடி பாத்திமா வீட்டுக்கு சென்று இரவு நேரங்களில் அவரது வீட்டின் கதவை தட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பாத்திமா கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்து ரபிக் ராஜாவை கைது செய்தனர்.
- திருச்சி ஓயாமரி சுடுகாடு நாளை முதல் செப். 7ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி,
திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உடல்களை எரியுட்டுவதற்காக நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக 30ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை உடல்களை எரியுட்ட இயலாது என்பதால் திருச்சி ஓயாமரி சுடுகாடு செயல்படாது என்று திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை தொடர்ந்து செயல்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
- தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
- விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணி மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் ஸ்க்ரூ, கம்பி, பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது போன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.
இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 264 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரமாகும்.
கடந்த 2020 முதல் 2023 பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8, 956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப்படுவதில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது.
3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள். நமது பாரத தேசத்தின் தங்க தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது உலக தங்க கவுன்சில்.
தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள், விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. என 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% லிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
திருச்சி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிகம் விமானங்கள் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகிறது.
முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்து தான் நடைபெறுகிறது.
இதற்கென்று பாரம்பரியமான வலை பின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க குருவி (கடத்தல்காரர்) ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.
தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கூலி கொடுப்பதாக சொல்கிறார்கள்.
இதில் தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் இல்லாமல் தப்பி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது.
கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக குருவிகளாக மாறி கடத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்கள் கடத்தல் தங்கத்திற்கான முழு வரியையும் செலுத்தி தங்கத்தையும் மாணவனையும் மீட்டு விடுகிறார்கள்.
இதனை சாதாரணமாக சில மாணவர்கள் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.
விமான நிலையங்களில் பல கட்ட கண்காணிப்பு, சோதனைகள் இருந்த போதிலும் கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபடுவது ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கிறது. விமான நிலையங்களில் பிடிபடும் தங்கத்தை விட கடத்தப்படும் தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகம் என சொல்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் வரிஏய்ப்பு சப்தமில்லாமல் நடக்கிறது. அதிகாரிகள் நேர்மையாக இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






