என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு கொடும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).

    இவரது மகன்கள் ராமசாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).

    இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர்.

    பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.

    இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார், தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்குமார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
    • ரகு, முத்துச்சாமி ஆகிய இருவர் மீதும் 420 உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் எஸ். அய்யம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.ஏ. பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ரகு (44), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலரல் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி (39) ஆகிய இருவரின் அறிமுகம் கிடைத்தது.

    அப்போது அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம் என கூறினர்.

    இதனை ரமேஷ் நம்பினார். பின்னர் வேலை தேடி கொண்டிருந்த தனது நண்பர்களான பட்டதாரி இளைஞர்கள் சுப்பையன், செல்வராஜ், மனோகரன் ஆகியோருக்கும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    உடனே அவர்களும் வேலைக்காக பணத்தைப் புரட்டினர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ரமேஷ் வீட்டில் வைத்து கடந்த 2018 நவம்பர் 3-ந் தேதி ரூ. 30 லட்சத்து 86 ஆயிரம் ரொக்க பணத்தை ரகு, முத்துச்சாமி ஆகியோரிடம் கொடுத்தனர்.

    பின்னர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் கொடுத்த பணத்தை திரும்ப தருவதாக கால அவகாசம் கேட்டு அந்த நபர்கள் தப்பித்து வந்தனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆன பின்னரும் வேலையும் கிடைக்கவில்லை கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட சூப்பிரண்டு வருண்குமார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி ரகு, முத்துச்சாமி ஆகிய இருவர் மீதும் 420 உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மணிகண்டம் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு
    • வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர்.

    ராம்ஜி நகர் 

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்திம் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர். அளுந்தூர் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை இருப்பதால் அதனை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வழி தவறி இந்த புள்ளிமான் வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பது பார்த்தா அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றனர். 

    • திருச்சி சிந்தாமணி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய காவிரி கரையில் இறந்து கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    திருச்சி  

    திருச்சி,மேல சிந்தாமணி, மகாத்மா காந்தி படித்துறையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குளித்து வருகின்றனர்.

    கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்தது.

    இதற்கிடையே இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு மற்றும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்றின் கரையோரம் சுமார் ஒன்றரை நீளமுள்ள முதலைக்குட்டி ஒன்று கிழிந்த ஒரு வலையில் சிக்கிய நிலையில் இறந்து கிடந்தது.

    அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் முதலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே அப்பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளதாக

    அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆற்றின் மையத்தில் உள்ள நாணல் புதரில் மறைந்த வசிக்கும் முதலைகள் குட்டிகளை ஈன்றிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுவரை அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் முதலைகள் நடமாட்டம் இருக்கும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே உடனடியாக முதலைகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும்
    • 5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    திருச்சி

    திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கேட்பார் என்று சுற்றி தெரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் அந்த கால்நடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்கிறது.

    இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது மாடுகளை வாகனங்களில் ஏற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே கால்நடைகளை சிறை பிடித்து கொண்டு செல்ல வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட 2 சிறப்பு வாகனங்களை திருச்சி மாநகராட்சி வாங்கியுள்ளது.

    இதுவரை பயன்படுத்திய வாகனத்தில் மடிக்கக்கூடிய பாதையில் கால்நடைகளை நகர்த்துவது சவாலாக இருந்ததால், 15வது நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட சிறப்பு வாகனம் தொழிலாளர்களுக்கு சிரமமின்றி கால்நடைகளைப் பிடிக்க உதவும். கால்நடைகளை கையாள்வது குறித்த விமர்சனங்களை தடுக்கும். மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் கால்நடைகளை சிறைபிடிக்க இது பயன்படுத்தப்படும்

    என்று மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் ஒரே நேரத்தில் 6 மாடுகள் வரை பறிமுதல் செய்து கோணக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான காப்பகத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் சாலைகளில் கால்நடைகள் சுற்றி தெரியும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும். அதில்

    மாநகராட்சி பணியாளர்களுடன் கால்நடைகளை

    கையாள்வதில் முன் அனுபவம் பெற்ற 10 பேர் கொண்ட ஒரு குழு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதம் செலுத்தி வாங்கி செல்லாததால்

    5 கன்றுகள் உட்பட 10 கால்நடைகளை ரூ. 74,000 தொகைக்கு ஏலம் விடப்பட்டன.

    புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் நடவடிக்கை வேகம் எடுக்கும் என்றனர்.

    • குடிபோதையில் வாய்க்காலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி சாவு தங்கை வீட்டு விசேஷத்துக்கு வந்த இடத்தில் சோகம்
    • ரவி மது அருந்தியுள்ளார். இதனால் அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.

    திருச்சி  

    திருச்சி மணச்சநல்லூர் சிறுகாம்பூர் ஹரிஜன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 37). இறைச்சி கடை தொழிலாளி.

    இவரது தங்கையை காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த நிலையில் தங்கை வீட்டு விசேஷத்திற்கு ரவி குடும்பத்துடன் சென்றார்.

    பரிதாபச் சாவு

    பின்னர் ரவி தனியாக அங்குள்ள வாய்க்காலில் இறங்கி குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பின்னர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த அவரை இளைஞர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்த ரவி மது அருந்தியுள்ளார். இதனால் அவரால் நீச்சல் அடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாறையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி
    • பல்வேறு துறைகளை சார்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள பிரமாண்ட திடலில் மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் ஹரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60 க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதே போல்பல்வேறு துறைகளை சார்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

    ஆண், பெண் என அணிகளுக்கு தனி தனியாக நடைபெறும் கபடி போட்டியின் தொடக்கமாக நேற்று முதல் போட்டியை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆனால் போட்டி தொடங்கியதுமே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இன்றிலிருந்து தொடர்ந்து நடைபெறும் போட்டியின் நிறைவாக இறுதி போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.

    இந்த போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைப்பதோடு பரிசுகள் வழங்குகின்றனர். இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 1.50 லட்சமும்,

    இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ஒரு லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதே

    போல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 1.25 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 75 ஆயிரமும், 3 ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. போ ட்டியை பார்வையாளர்கள்

    கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்க ப்பட்டுள்ளது.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மதுவுக்கு அடிமையான 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
    • திருமணமான 8 மாதத்தில் கணவர் இறந்ததால் இளம் பெண் தவிப்பு

    திருச்சி, 

    திருச்சி மாவட்டத்தில் மதுவின் கொடுமையால் நாளும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மதுவால் உடல்நலம் குன்றி இறப்பது ஒரு பக்கம் இருக்க, மது குடிக்க குடும்பத்தினர் தடை போடுவதால் ஏற்படும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன.இந்த வகையில் திருவெறும்பூர் பகுதியில் தொழிலாளி ஒருவர் மது குடிக்க பணம் கிடைக்காததால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.திருவெறும்பூர் தெற்கு காட்டூர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணி (வயது 43). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சுரேஷ் அந்தோனியை மது பழக்கம் தொற்றிக்கொண்டதுமதுவுக்கு அடிமையான அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரது மனைவி புனிதா குடும்பம் நடத்த இயலாமல் தவித்தார்.இதற்கிடையே நேற்று சுரேஷ் அந்தோணி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கணவரை கண்டித்தார்.இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சுரேஷ் அந்தோணி யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.மனைவி அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.திருமணமான 8 மாதத்தில்மணப்பாறை அருகே உள்ள கே மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கதிர் மாலை கண்டன் (31). மதுவுக்கு அடிமையான இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துஷியாந்தினி என்கிற சிந்து (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்துக்குப் பின் கணவரின் சுயரூபம் கண்டு சிந்து வேதனை அடைந்தார். இருப்பினும் வேறு வழி இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.ஏற்கனவே கதிர் மாலை கண்டன் ஓரிருமுறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென கதிர்மலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.திருமணமான எட்டு மாதத்தில் கணவர் தற்கொலை செய்து விட்டதால் அவரை கரம் பிடித்த மனைவி செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.இது தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி உறையூர் பகுதியில் மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது
    • பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம்

    திருச்சி, 

    திருச்சி உறையூர் பகுதி கல்லறை மேட்டுத் தெரு, சோழராஜபுரம், பாண்டமங்கலம் , நாச்சியார் கோவில், பாளையம் பஜார், பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, வாத்துக் காரத் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்சல் மற்றும் வாந்தியால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை திருமயம் கடியப்பட்டணத்தில் நாட்டு மருத்துவம் பார்த்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்திருந்தார்.மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவேமாநகராட்சி சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி ஏர்போர்ட் காம ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பைரல். இவரது மனைவி மணிமேகலை (வயது 36). இவர் கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த தலையில் சுய உதவி குழு பெண்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கினார். அதனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மணிமேகலை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் கைக்குழந்தையுடன் மாயமாகி உள்ளார்
    • வழக்கு பதிந்து கே.கே.நகர் போலீசார தேடி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி காஜாமலை முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 32). தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி பாத்திமா (23). இந்த தம்பதி யருக்கு 5 மாதத்தில் ஆசாக் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வழக்க ம்போல் வேலைக்கு சென்று விட்டு ரிஸ்வான் வீடு திரும்பிய போது அவரது மனைவி மற்றும் குழந்தை யை காணவில்லை.அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கேகே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×