கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு

திருச்சி மணிகண்டம் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர்.
கம்பி  வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு
Published on

ராம்ஜி நகர் 

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்திம் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர். அளுந்தூர் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை இருப்பதால் அதனை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வழி தவறி இந்த புள்ளிமான் வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பது பார்த்தா அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com