என் மலர்
திருச்சிராப்பள்ளி
- வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் 2 வாலிபர்கள் தூக்கு போட்டு தற்கொலை
- இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சௌகத் அலி தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அந்தோணிராஜ் (வயது 27)இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.இந்த நிலையில் விட்டில் தனியாக இருந்த அந்தோணி ராஜ் மன உளைச்சலில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் ராஜேஷ் (வயது 22). கூலி வேலை செய்து வந்தார்.இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருமாம்.சம்பதவன்றுவயிற்று வலி அதிகமானத்தை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முணைய கட்டுமான பணிகள் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் சிவராசு நேரில் ஆய்வு
- ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது
திருச்சி
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முணையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முணையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி ஆக மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், நகர பொறியாளர், ஒப்பந்ததாரர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக 9 . 90 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துகட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ளவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கொட்டப்பட்டு குளத்தில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய கலர் மின்விளக்குகள் அமைக்கும் பணி,குளத்தின் கரையை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்கள்
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- அகில இந்திய கபடி இறுதி போட்டி நடைபெற உள்ளது
- மணப்பாறையில் இன்று மாலை நடக்கிறது
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள திடலில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் கடந்த 31-ந் ந தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் அரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மும்பை, த கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இதேபோல் பல்வேறு துறைகளை சேர்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் பங்கேற் த றுள்ளனர். நேற்று காலை பெண்களுக்கான கபடி போட்டி டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஏராளமானவர்கள் போட்டியை கண்டு ரசித்தனர். இன்று காலை தொடங்கிய போட்டியின் தொடர்ச்சியாக காலிறுதிபோட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து இறுதி சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குகின்றனர்.
- அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன
- அப்துல் சமது எம்.எல்.ஏ, வழங்கினார்
திருச்சி.
த.மு.மு.க. 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சுமார் 80,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள் ள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும் கவுன்சிலருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், மமக பொது செயலாளர் அப்துல் சமது, மாநில பொருளாளர் என்ஜினீயர் ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் டாக்டர் நேருவிடம் பொருட்களை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, மமக செயலாளர் இப்ராகிம், பொருளாளர் ஹீமாயூன், அப்துல் சமது, அசாருதீன் , அப்துல் ரஹ்மான் சபீர், நசிர், ரபீக், அணி நிர்வாகிகள் ஜுபைர் ரஜாக், பக்ருதீன். இசாக், மோத்தி, சதாம் , சார்லஸ், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள். மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
- பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம்.
திருச்சி:
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்...
இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள்.
வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால் மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொண்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும். நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்தால் உடனடியாக குபேரன் ஆகிவிடலாம் என்றெல்லாம் தூண்டில் போடுகிறார்கள்.
இந்த மோசடி பேர்வழிகள் நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ இருப்பவர்களை தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் மூலம் அப்பாவிகளுக்கு வலைவிரிக்கிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் சிக்கி தங்கள் கையில் இருக்கும் பொருளாதாரத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்கி சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நாளும் பணத்தை இழந்து காவல் நிலையங்களில் காத்து நிற்கிறார்கள்.
திருச்சியில் நடப்பு ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 49 லட்சம் தொகையை இழந்து சைபர் கிரைம் போலீசிடம் சரணடைந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
திருச்சி தில்லை நகரில் சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் தாய் வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை வைத்து சம்பந்தப்பட்ட மோசடி பேர் வழியை தொ டர்பு கொண்டார். அதன் விளைவாக அந்த பெண்மணியின் கணவர் அயல்நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய ரூ.12 லட்சம் பணத்தை மோசடி பேர்வழி கூறிய வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக செலுத்தி ஏமாந்து நிற்கிறார்.
இந்த மோசடி ஆசாமி முதலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுக் கார் பரிசு விழுந்ததாக கூறி ஜிஎஸ்டி, ரிசர்வ் பேங்க் அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல யுக்திகளை கையில் எடுத்து சில லட்சங்களை கறந்திருக்கிறான்.
கேட்க... கேட்க பணம் வரவும் சுதாகரித்துக்கொண்ட அந்த ஆசாமி நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதால் மேலும் ரூ. 8 லட்சம் பரிசு விழுந்ததாக புரூடா விட்டு மொத்தமாக ரூ. 12 லட்சம் வரை விழுங்கி விட்டான்.
நேற்றைய தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரவீன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கூடுதல் வட்டித்தொகைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் கும்பலிடம் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தை இழந்துவிட்டார்.
இது போன்ற மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மோசடி பேர்வழிகள் யுக்திகளை மாற்றி மிரட்டும் வேலைகளையும் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அதற்கு இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில் இவ்வாறான கடன் செயலிகள் நிரம்ப இருக்கிறது.
இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால் வாடிக்கையாளரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை பதிவிட சொல்கிறார்கள்.
பின்னர் நம்முடன் நட்பாக பழகி நமது காண்டாக்ட் லிஸ்ட் அத்தனையும் எடுத்து விடுகிறார்கள்.
பின்னர் நாம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு அப்ளை செய்தால் அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 ரூ.4000 நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறார்கள்.
அதன்பின்னர் அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ. 5500, 6000 செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள்.
இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தால் அந்த மோசடி பேர்வழிகள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் இப்போது பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலைய செய்து வருகிறது.
அது என்னவென்றால், கடன் கேட்டு அந்த மோசடி பேர்வழிகளின் செயலில் நாம் பதிவிடும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் இருக்கும் போட்டோக்களை எடுத்து மார்பிங் செய்து பெண்ணாக இருந்தால் ஆணுடனும், ஆணாக இருந்தால் வேறு பெண்ணுடனும் தவறாக சித்தரித்து நமது காண்டாக்ட் லிஸ்டில் அந்த ஆபாச பதிவை வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள். முதலில் மிரட்டுகிறார்கள். அதற்கு அடிபணியவில்லை என்றால் வீடியோக்களை அனுப்பி விடுகிறார்கள்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீசாரிடம் தினமும் நான்கு முதல் ஐந்து புகார்கள் வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் இளம்பெண்கள், குடும்ப பெண்கள், ஆண்கள் ஆத்திர அவசரத்திற்கு கடன் பெற்று மோசடி கும்பலிடம் சிக்கி கண்ணீர் வடிக்கின்றனர்.
பொதுவாக இந்த மாதிரியான செயலியை தேடும் போது ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே கடனுக்கு அப்ளை செய்ய வேண்டும். மோசடி பேர்வழிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நமது நெருக்கடிகளை சாதகமாக்கி நெருங்குவார்கள். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
இது போன்ற மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து இயங்குகிறது. ஆகவே குற்றவாளிகளை பிடிப்பது கடினமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம். இல்லை என்றால் அதுவும் இயலாமல் போய்விடுகிறது. இவ்வாறு மோசடி கும்பலிடம் சிக்குபவர்கள் உடனடியாக புகார் அளித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றார்.
- ஜீப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
- சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்றும், ரோந்து செல்வது இல்லை என்றும் புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அவரை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது சுமதி மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த போலீஸ் சூப்பிரண்டு ரோந்து செல்லாமல் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைப்பதற்கு போலீஸ் ஜீப் இனிமேல் தேவையில்லை உங்களுக்கு தேவையில்லை.
உடனே அந்த ஜீப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நடவடிக்கை கடமையில் மெத்தனமாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
- துறையூர் அருகே தனியார் பேருந்து மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி
- தனியார் பேருந்து ஓட்டுனர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் உப்புலியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அன்பு நகரை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 57). இவர் சிறுநாவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரான இவர், உப்புலியபுரத்திலிருந்து சொந்த வேலை காரணமாக தனது இரு சக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சிறு நத்தம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது துறையூரில் இருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக சௌந்தர பாண்டியன் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சௌந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தரபாண்டியன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுனர் மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மணப்பாறை அருகே மூதாட்டி உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய தந்தை - மகன்
- தென்னை மட்டை விழுந்த தகராறில் மோதல்
திருச்சி,
திருச்சி மாவட்டம் மண ப்பாறை வளநாடு கொடும்ப பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).இவரது மகன்கள் ராம சாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டை கள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழு ந்தது. இதனால் ஆத்திர மடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்கு மாரிடம் தகராறு செய்தனர்பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார்,தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்கு மார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.இதில் பலத்த காயம டைந்த 4 பேரையும் அக்கம்ப க்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்த னர்.தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் பெற்று விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது
- மண்ணச்சநல்லூர் அருகே 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்
திருச்சி,
திருச்சி மணச்சநல்லூர் எஸ். அய்யம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.ஏ. பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.இந்த நிலையில் விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூர் மம்சாபுரம் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ரகு (44), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலரல் பகுதி யைச் சேர்ந்த முத்துச்சாமி (39) ஆகிய இருவரின் அறிமுகம் கிடைத்தது.அப்போது அவர்கள் சென்னை தலைமை செயல க த்தில் தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம் என கூறினர்.இதனை ரமேஷ் நம்பி னார். பின்னர் வேலை தேடி கொண்டிருந்த தனது நண்ப ர்களான பட்டதாரி இளை ஞர்கள் சுப்பையன், செல்வ ராஜ், மனோகரன் ஆகியோ ருக்கும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.உடனே அவர்களும் வேலைக்காக பணத்தைப் புரட்டினர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ரமேஷ் வீட்டில் வைத்து கடந்த 2018 நவம்பர் 3-ந் தேதி ரூ. 30 லட்சத்து 86 ஆயிரம் ரொக்க பணத்தை ரகு, முத்துச்சாமி ஆகியோரிடம் கொடுத்தனர்.பின்னர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழ ங்கி ஏமாற்றியதாக கூறப்ப டுகிறது.அதன் பின்னர் கொடுத்த பணத்தை திரும்ப தருவதாக கால அவகாசம் கேட்டு அந்த நபர்கள் தப்பித்து வந்தனர். ஆனால் 5 ஆண்டு கள் ஆன பின்னரும் வேலை யும் கிடைக்கவில்லை கொடு த்த பணமும் திரும்ப வரவி ல்லை.இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட சூப்பி ரண்டு வருண்குமார் உட னடியாக சம்பந்தப்ப ட்டவ ர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன்படி ரகு, முத்துச்சா மி ஆகிய இருவர் மீதும் 420 உள்பட பல்வேறு பிரிவுகளி ல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- திருச்சி துறையூரில் போலி தங்க காசு கொடுத்து ரூ.60 ஆயிரம் மோசடி நடைபெற்று உள்ளது
- மர்ம பெண்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறை யூர் கீழக்கடை வீதியில் கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருபவர் சாரதா லட்சுமி (வயது43இவரது கடைக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், சுமார் 7 வயது மதிப்புள்ள ஒரு பெண் குழந்தையுடன் வந்தனர்.அவர்கள் தங்களை நெடு ஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருவதாகவும், வரும் வழியில் கயிற்றில் கோர்க்க ப்பட்ட காசுகளுடன் கூடிய சுமார் 8 பவுன் எடையுள்ள தாலிக்கொடி கீழே கிடந்த தாகவும்,இதை தங்களால் வெளி யில் பணமாக மாற்ற முடியாது, உறவினர் ஒருவ ரின் மருத்துவ தேவை க்கு பணம் தேவைப்படுவதால், இந்த நகையை வைத்துக் கொண்டு தங்களால் முடிந்த தொகையை தருமாறு பரிதாபமாக கேட்டுள்ளனர்.இதில் சபலமடைந்த சாரதா லட்சுமி, அருகில் இருந்த நகை அடகு கடை சென்று ஒரு காசை பரிசோதித்து பார்த்தார் உள் ளார். அது தங்கம் என தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம பெண்கள் இருவரும் கடையை விட்டு வேகமாக வெளியேறி உள்ளனர்.இதனால் சாரதா லட்சுமிக்கு சந்தேகம் வரவே, நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு செல்போன் வாயிலாக தகவல் சொல்லி வரவழைத்து, நகையை பரிசோதித்ததில் நகைகள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைவீதி முழுவதும் அலைந்து திரிந்து மர்மப் பெண்களை தேடி உள்ளார். ஆனாலும் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் பற்றி சாரதா லட்சுமி துறையூர் போலீசில் புகார் செய்தார். துறையூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுக ளைக் கொண்டு, நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.
- திருச்சி சிறுகனூரில் ரோந்து செல்லாத பெண் இன்ஸ்பெக்டரின் ஜீப் பறிக்கப்பட்டுள்ளது
- ஜீப்பை பறிமுதல் செய்து மாவட்ட எஸ்.பி.வருண்குமார் நடவடிக்கை
திருச்சி,
திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்றும், ரோந்து செல்வது இல்லை என்றும் புகார் எழுந்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அவரை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது சுமதி மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த போலீஸ் சூப்பிரண்டு ரோந்து செல்லாமல் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைப்பதற்கு போலீஸ் ஜீப் இனிமேல் தேவையில்லை உங்களுக்கு தேவையில்லை.உடனே அந்த ஜிப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்த நடவடிக்கை கடமையில் மெத்தனமாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும்.
- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
திருச்சி:
பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பாஜகவின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.
இதில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர்.
இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து இந்த திட்டத்தின் பயன்களை அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்து கூற இருக்கிறோம்.
மேலும் பயனடைந்த பயனாளிகளுடன் செல்பி எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறோம். பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கி உள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதை பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்துள்ளார். 200 ரூபாய் கேஸ் விலையை குறைத்து இருப்பது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைப்பேன் என்றுகூறிவிட்டு இதுவரை குறைக்கவில்லை.
அவர்கள் மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று கூறுவதற்கு தகுதி கிடையாது. ஐ.என்.டி.ஏ. கூட்டணியை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் வெற்றி பெறவும் முடியாது. எத்தனை பேர் சேர்ந்தாலும் ஒன்றும் சாதிக்கவும் முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைவரிடமும் கருத்து கேட்டு மத்திய அரசு முடிவு செய்யும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






