என் மலர்
திருச்சிராப்பள்ளி
- காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போனில் தொடர்பு கொண்டு
திருச்சி:
ஸ்ரீரங்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 65) இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு
மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி ரூ.1 லட்சம் பணம் கடன் கேட்டுள்ளார் அதற்கு சின்னதுரை மறுப்பு தெரிவிக்கவே அவரை அசிங்கமாக திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சின்னதுரை
ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து
சின்ன துரையை செல்போனில் மிரட்டிய மர்ம ஆசாமி யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணமான 3 மாதத்தில் கணவரை தவிக்க விட்டு புதுப்பெண் மாயமானார்
- பெற்றோருக்கு பரபரப்பு கடிதம்
திருச்சி:
திருச்சி நாகமங்கலம் வி.ஏ டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 24). தனியார் நிறு வனத் தொழிலாளி. இவரு க்கும் புதுக்கோட்டை மாவ ட்டம் விராலிமலை குன்ன த்தூர் கோலாப்பட்டி பகுதி யைச் சேர்ந்த கிறிஸ்டி வின்ஸ்லெட் (21) என்பவரு க்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயி க்கப்பட்டு திருமணம் நட ந்தது.
இந்த திருமணத்தில் கிறி ஸ்டிக்கு விருப்பம் இல்லா மல் இருந்துள்ளது.ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தி அவரை திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திடீர் மாயம் -கடிதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுப்பெண் கிறிஸ்டி வின்ஸ்லெட் தனது கணவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது பற்றி பன்னீர்செல்வம் அவ ரது மாமனாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த சகாய ரத்தினராஜ் தனது மகளை தேடி கண்டுபிடித்து தரு மாறு மணிகண்டம் போலீ சில் புகார் செய்தார்.
பின்னர் கிறிஸ்டி வின்ஸ் லெட் அறையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு ஒரு கடிதம் கண்டெ டுக்கப்பட்டது.
அதில் கிறிஸ்டி வின்ஸ் லெட் தனது பெற்றோர்க ளுக்கு, என்னை கட்டாய ப்படுத்தி திருமணம் செய்து வைத்தீர்கள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் போகிறேன் என எழுதி இருந்தார்.
இதனால் அவர் காதல் வயப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால் அவ்வாறு யாரையும் அவர் காதலிக்க வில்லை பெற்றோர் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து மணிகண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 3 மாதத்தில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு புது ப்பெண் மாயமான சம்பவம் விராலிமலை மற்றும் மணி கண்டன் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியு ள்ளது.
- போதை மாத்திரவை சப்ளை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர்
- பெண் உட்பட 4 பேர் சிக்கினர்
திருச்சி:
திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). ஆட்டோ டிரை வரான இவர் அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதிக்கு ஒரு சவாரி சென்றார்.
பின்னர் அங்குள்ள ஒரு ஹோட்டல் அருகாமையில் நின்றபோது 2 பெண்கள் உட்பட 4 பேர் அவர் அருகே வந்தனர்.
பின்னர் தங்களிடம் போதை மாத்திரை இருக்கி றது. அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என கூறினர்.
அப்போது ஆட்டோ டிரைவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி அங்கி ருந்து நழுவி செல்ல முய ன்றார். இருந்தபோதிலும் அந்த கும்பல் விடா மல் 2 மாத்திரைகளை கொடுத்து விட்டு பின்னர் பணத்தை கொடுங்கள் என கூறினர்.
தன்னை போன்று பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர் சமுதாயத்தையும் இந்த கும்பல் கெடுத்து வருவதால் அதிர்ச்சி அடை ந்த சதீஷ், இது தொடர்பாக அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போதை மாத்திரை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தது.
விசாரணையில், பிடி பட்டவர்கள் திருவெறும்பூர் காவேரி நகர் சேவியர் மார்க்கெட் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), அரியமங்கலம் மலையப்பன் நகர் அண்ணா தெரு பகுதி யைச் சேர்ந்த மதன் என்கிற மதன் (39), திருச்சி பால க்கரை சங்கிலியா ண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதி சேர்ந்த தேவி (38 ), அரியமங்கலம் மலையப்பன் நகர் பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த இந்திரா (32 )என்பது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் அவர்களின் 4 பேரையும் கைது செய்து 43 மாத்திரை கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அரியம ங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுசீலா வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- கொட்டப்பட்டு குளத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
- விரைவில் படகு சவாரி
திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பெரிய குளம் அமைந்துள்ளது.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் ஒரு காலத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் கரை உடைந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
அதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குளத்தின் நீர் வழித்தட நுழைவுப் பகுதி, மற்றும் வெளியேற்றும் பகுதியில் உள்ள கரையை பலப்படுத்தி பொழுதுபோக்கு இடமாக மேம்படுத்துவதற்கான
திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த திட்டத்தில் இன்பப் படகுச் சேவை, நீர்ப்பறவைகளுக்கான 5 வாழ்விடத் தீவுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது.
மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் நீரூற்றுகள் கொண்ட பூங்கா போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்
படுகிறது. அதுமட்டுமில்லாமல்
15-வது நிதி குழுவில் இருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நீர்நிலையின் ஒரு பகுதியை மாநகராட்சி மீண்டும் சுமார் 500 மீட்டர் நடைபாதை அமைத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளில் இருந்து குளத்தை பாதுகாக்க இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், பறவைகள் வாழ்விட தீவுகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
சுமார் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன, அடுத்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும் என மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்க, நடைபாதைகள், இருக்கை இடங்கள், அழகுபடுத்தும் விளக்குகள் மற்றும் அதன் நீளத்தில் மரங்களை நடுதல் ஆகியவற்றுடன் குடியிருப்பாளர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இன்ப படகு சவாரி செய்ய முடியும் என்றார்.
மேலும் நீர்நிலையின் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு பல வசதிகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- விவசாயிகள் மீது 7 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- வெண்டைக்காயை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்
திருச்சி:
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நேற்று 39 வது நாள் போராட்டத்தில் , விளை பொருக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று கூறி, வெண்டைக்காயை மாலையாக அணிந்தும், சாலையில் கொட்டியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்நிலையில்காவல்துறையினரின் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று
அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாடைகட்டி, உடலில் மருத்துவ சிகிச்சைக்கான துணியை சுற்றிக்கொண்டு, ஒப்பாரிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி:
திருச்சி அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சா லைகள், திருமண மண்ட பங்கள், அரிசி ஆலைகள் ஏற்றுமதி இறக்கு மதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளதால் இங்கு ள்ள சாலைகள் எந்நேரமும் வானங்கள் வந்து செல்லும் வண்ணமாக உள்ளது.
இதற்காக அரியமங்கலம் ெரயில்வே மேம்பாலம் கீழ் அமைந்துள்ள அணுகு சாலையில் வாகனங்கள் செல்வதற்காக சுரங்க ப்பாதை உள்ளது.
இதன் வழியாக நாளொ ன்றுக்கு இருசக்கர வாகன ங்கள், சரக்கு வேன்கள், பள்ளி வாகனங்கள், பேரு ந்துகள், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கி ன்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப் பாதை யில் மழை நீர் நிரம்பி வெளி யேறுவதற்கு வழியில்லாமல் தேங்கி நின்றது.
இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ங்களின் போக்குவரத்தால் சுரங்கப்பாதையில் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக மாறி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியே வரக்கூடிய வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறும் போது வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்ற னர். மேலும் தங்களது வாகனங்களை பள்ளத்தில் விடாமல் செல்வதற்காக சாலையில் இடது மற்றும் வலது புறமாக வாகனங்கள் ஒட்டி செல்வதால் போக்குவ ரத்து நெரிசலும் அவ்வ ப்போது ஏற்படுகின்றன.
இந்நிலையில் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதுடன், சாலை கள் மேலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதால், துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடி க்கை எடுத்து தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும், அதே போல் சுரங்கபாதையில் மழை நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரி க்கையாக உள்ளது.
- வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
- 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி ,
திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 33) இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பணம் ேகட்டனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து சென்று பணம் பறித்துச் சென்ற குழுமணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆட்டோ சக்திவேல் (35), சிந்தாமணி புது தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
ரவுடி பட்டியலில் இருக்கும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியைச் சேர்ந்த முகில் குமார் (27) ஆகிய இரண்டு ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.
- வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
- தந்தை இறந்த தூக்கம் தாங்காமல்
திருச்சி:
திருச்சி அருகே உள்ள என்.சாத்தனூர் சீரா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள செப்பல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது தந்தை பொன்னை யன் திடீர் உடல் நலக்கு றைவால் இறந்துவிட்டார்.
தந்தை திடீரென இறந்த தால் ஹரிஹரசுதன் மனம் உடைந்தார். அவரின் பிரி வால் மிகுந்த மன அழுத்த த்திற்கு ஆளாகி கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாருடனும் சரிவர பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஹரசுதன் பூச்சிக்கொ ல்லி மருந்து எடுத்து குடி த்தார். பின்னர் மயங்கி விழுந்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை தாய் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் தீவிர சிகிச்சை அளி த்தனர். இருந்தபோதிலும் ஹரிஹரசுதன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாப மாக இறந்தார்.
இதுகுறித்து சோமரச ம்பேட்டை போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அதிரடி வேட்டை
- கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்
திருச்சி:
திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில்
- போலீஸ்காரரை இலங்கை அகதி இரும்பு கம்பியால் தாக்கினார்
திருச்சி:
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராசா என்கிற லோகேஷ் (வயது 42 ). திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டுனருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் சென்று எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இலங்கை அகதி அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து போலீஸ்காரர் துரை கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இலங்கை அகதி லோகேஷ் மீது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீரெங்கம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது
- கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது ெசய்யப்பட்டனர்
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் புது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). இவர் அங்காளம்மன் கோவிலில் பூசாரி ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வத்திடம் வாலிபர் ஒருவர் வந்து வாய் புண் நோய் இருப்பதாக கூறி, விபூதி தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய கோவில் பூசாரி, விபூதியை கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.
அப்போது அந்த வாலிபர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் குடத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து சத்தம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இளைஞரை பிடித்து வைத்துக்கொண்டு துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (21) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் என்பவர் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரப் பகுதியில் பட்டப்பகலில் கோயிலில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சியில் சிறுமி உட்பட இரண்டு பேர் மாயம் போலீசார் விசாரணை
- காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு
திருச்சி
திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி தமிழரசி (வயது 65.) சம்பதவன்று வீட்டில் இருந்த தமிழரசி திடீரென்று காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரது மகன் தினேஷ் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று திருச்சி பாலக்கரை அமர் ஷா மசூதி தெருவை சேர்ந்தவர் முகமது தவ்ஹீத்.இவரது மகள் ஜன்னத்துல் பிரேதாஸ் (வயது 16) சம்பவத்தன்றுஉறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற அவர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜன்னத்துல் பிரதோஷ்யை தேடி வருகின்றனர்.






