search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டப்பட்டு குளத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி
    X

    கொட்டப்பட்டு குளத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி

    • கொட்டப்பட்டு குளத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
    • விரைவில் படகு சவாரி

    திருச்சி,

    திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகாமையில் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பெரிய குளம் அமைந்துள்ளது.

    சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் ஒரு காலத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் கரை உடைந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    அதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் குளத்தின் நீர் வழித்தட நுழைவுப் பகுதி, மற்றும் வெளியேற்றும் பகுதியில் உள்ள கரையை பலப்படுத்தி பொழுதுபோக்கு இடமாக மேம்படுத்துவதற்கான

    திட்டத்தை செயல்படுத்தியது.

    இந்த திட்டத்தில் இன்பப் படகுச் சேவை, நீர்ப்பறவைகளுக்கான 5 வாழ்விடத் தீவுகள் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் நீரூற்றுகள் கொண்ட பூங்கா போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்

    படுகிறது. அதுமட்டுமில்லாமல்

    15-வது நிதி குழுவில் இருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நீர்நிலையின் ஒரு பகுதியை மாநகராட்சி மீண்டும் சுமார் 500 மீட்டர் நடைபாதை அமைத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளில் இருந்து குளத்தை பாதுகாக்க இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், பறவைகள் வாழ்விட தீவுகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    சுமார் 80% பணிகள் நிறைவடைந்துள்ளன, அடுத்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடையும் என மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்க, நடைபாதைகள், இருக்கை இடங்கள், அழகுபடுத்தும் விளக்குகள் மற்றும் அதன் நீளத்தில் மரங்களை நடுதல் ஆகியவற்றுடன் குடியிருப்பாளர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.

    இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், இன்ப படகு சவாரி செய்ய முடியும் என்றார்.

    மேலும் நீர்நிலையின் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு பல வசதிகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×