காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்

காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போனில் தொடர்பு கொண்டு
காந்தி மார்க்கெட் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்
Published on

திருச்சி:

ஸ்ரீரங்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 65) இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு

மர்ம ஆசாமி ஒருவர் தொடர்பு கொண்டு சின்னதுரையிடம் பேசி ரூ.1 லட்சம் பணம் கடன் கேட்டுள்ளார் அதற்கு சின்னதுரை மறுப்பு தெரிவிக்கவே அவரை அசிங்கமாக திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சின்னதுரை

ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து

சின்ன துரையை செல்போனில் மிரட்டிய மர்ம ஆசாமி யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com