என் மலர்
நீங்கள் தேடியது "The teenager was arrested"
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
புதுச்சேரியை சேர்ந்தவர் அனந்தபாஸ்கர் (வயது 22). இவரது நண்பர் ஒருவர் ஜமுனாமரத்தூரில் உள்ளார்.
இந்த நிலையில் ஜமுனாமரத்தூருக்கு வந்த அனந்த பாஸ்கர், நண்பருடன் இணைந்து கஞ்சா வாங்கிக்கொண்டு பைக்கில் புதுச்சேரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஜமுனாமரத்தூர் கோவிலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் இருவ ரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் அனந்த பாஸ்கர் போலீசில் சிக்கினார். அவருடன் வந்த அவரது நண்பர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அனந்த பாஸ்கரை கைது செய்து அவரிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது. தொடர்ந்து இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
- அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு ராயபுரம் பகுதியை சேர்ந்த சேல்ஸ்மேன் கார்த்திகேயன் மற்றும் ஒரு ஊழியர் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரிவாளுடன் கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் கொடுக்கும்படி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். அப்போது ஊழியர்களை பார்த்து அவர் அரிவாளால் வெட்ட பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாரில் பணியாற்றிய ஊழியர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பதும் குடிக்க பணம் இல்லாததால் அரிவாளை காட்டி மிரட்டி மது கேட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 8 பவுன் தங்க நகை, 240 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் குற்ற பிரிவு போலீசார் நேற்று ஆம்பூர் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளில் திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 19) என்பது தெரியவந்தது. எஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த மாதம் 30-ந்தேதி ஆம்பூர் அய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கி ஊழியர் சவுந்தரராஜன் என்பவரின் வீட்டில் நகை பணம் திருடி சென்றவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசில் அவரை ஒப்படை த்தனர்.
வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிட மிருந்து 8 பவுன் தங்க நகைகளும் 240 கிராம் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்ய ப்பட்டது.
- ஆன்மிக சுற்றுலா வந்த பெண்களை கேலி, கிண்டல் செய்ததால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வெளிநாட்டினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி மன அமைதிக்கான தியானங்கள் மற்றும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மும்பையை சேர்ந்த மித்தேஷ் தக்கர் என்பவரின் மனைவி ரேபக்கா தக்கர் (வயது 40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளிநாட்டை (சுவிட்சர்லாந்து) சேர்ந்த 2 இளம்பெண்களுடன் ஆன்மிக சுற்றுலாவிற்காக திருவண்ணாமலைக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் அறக்கட்டளை விடுதியில் தங்கினர். இதையடுத்து அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் பல்வேறு ஆசிரமங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி திருவண்ணாமலை செங்கம் சாலையில் சேஷாத்திரி ஆசிரமத்தின் அருகில் அவர்கள் செல்லும் போது அந்த பகுதியில் பல்வேறு வெளி மாநில பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீர் பட்கம் பகுதியை சேர்ந்த அப்துல்ரஷித் என்பவரின் மகன் முபாஷிர் ரஷீத் (22) என்பவர் அவர்களை கேலி, கிண்டல் செய்து உள்ளார்.
இது குறித்து ரேபக்கா தக்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாஷிர் ரஷீத்தை கைது செய்தனர்.
- போலீசாரின் சோதனையில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மண்டலவாடி அடுத்த ஆட்டுக்கார பொன்னுசாமி வட்டம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
- ஜெயிலில் அடைப்பு
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயி. இவருக்கும் இவரது சகோ தரி மகன் அஜித் (22) என் பவருக்கும் நிலம் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோதியை, அஜித் வெட்டி கொலைசெய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரெட்டை குளம் பகுதியில் பதுங்கி இருந்த அஜித்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
- தொடர்ந்து சாராயம் விற்று வந்ததல் நடவடிக்கை
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மாரியம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 28). தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சின்னராஜை பிடித்து கைது செய்தனர். சின்னராஜை நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்னராஜ் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததாலும் அவர் மீது பல வழக்குகள் இருந்ததாலும் சின்னராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று சின்னராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
- துப்பாக்கி பறிமுதல்
- வனத்துறையினர் ரோந்து சென்ற போது சிக்கினார்
வேலூர்:
அமிர்தி அருகே உள்ள சஞ்சிபுதூர் பகுதியில் வேலூர் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 24) என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.
அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் வைத்திருந்தது கள்ளத் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், உதயசூ ரியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று ஆற்காட்டில் உள்ள செய்யார் சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாகமோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பதும், ஆற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சூர்யாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கு
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி எம் பி டி ரோடு பகுயை சேர்ந்தவர் சீனு என்கிற சீனிவாசன் (வயது 26) இவர் தனியார் கம்பெனி நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நேற்று சீனு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு குந்தகம் விளைக்கும் வகையில் கற்களை எடுத்து வாகனத்தில் செல்பவர்கள் மீது எறிந்து இடையூறு செய்தார்.
அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தது கைது செய்தனர்.
- தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு
- சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா பள்ளிகொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 35). இவர் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை தீபம் நகர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து போலீசார் துரத்தி சென்றனர்.
இதனால் தங்கவேல் தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து கைது செய்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.