வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள்

வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
வாலிபரிடம் பணம் பறித்த ரவுடிகள்
Published on

திருச்சி ,

திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 33) இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகாமையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பணம் ேகட்டனர். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே அந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து சென்று பணம் பறித்துச் சென்ற குழுமணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆட்டோ சக்திவேல் (35), சிந்தாமணி புது தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ்குமார் (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

ரவுடி பட்டியலில் இருக்கும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியைச் சேர்ந்த முகில் குமார் (27) ஆகிய இரண்டு ரவுடிகளையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com