என் மலர்
திருச்சிராப்பள்ளி
- மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்
- மகளை விடுவதற்காக வந்த போது சம்பவம்
திருச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பூதநல்லூர் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்.
இவரது மனைவி ப்ளோரா மேரி (வயது 40) இவரது மகள் அக்ஷயா( 21 ) இவர் திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியா ற்றி வருகிறார். இந்த நிலை யில் ப்ளோரா மேரி மற்றும் குடும்பத்தினர் வேளாங்கண்ணி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மகளை திருச்சி யில் உள்ள மருத்துவமனை யில் விட்டு செல்வதற்காக ஃப்ளோரா மேரி வந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்ப ட்டது. உடனடியாக அந்த மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இன் னொரு தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மீண்டும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ப்ளோரா மேரி இறந்து விட்டதாக தெரிவி த்தனர். இது குறித்து அக்ஷயா கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி
திருச்சி பொன்மலை ப்பட்டி ஜீவா தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 21).வெல்டரான இவர் பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ. 600-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்டம் திருவை யாறு அம்மன் பேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் (வயது 35) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று பால க்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேர் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்ற கம்ப்ரசம் பேட்டை அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மகேந்திரன் என்பவரை வழிமறித்து கத்தி முனையில் ரூ. 2000-ம் பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணி யார் கோவில் தெரு பகுதி யைச் சேர்ந்த தாமஸ் அந்தோணி (23) என்பவரை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்
- விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்வட்டம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ரமேஷ் குமார் (வயது 51). இவர் திருவானைக்காவல் பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் கடை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இவருக்கு கல்பாளையம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. ரமேஷ் குமார் தனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான வீட்டின் பேரில் வங்கியில் கடன் கோரியுள்ளார்.
தான் கடன் பெறுவதற்கு தனது வீட்டுமனையை உட்பிரிவு செய்து பட்டா பெற்று வருமாறு வங்கியில் கேட்டதன் பேரில் ரமேஷ் குமார் தனது வீட்டினை உட்பிரிவு செய்து தனிப்ப ட்டா வேண்டி கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி அன்று வி ண்ணப்பித்துள்ளார்.
தான் விண்ணப்பித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் ரமேஷ் குமார் மணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வே பிரிவுக்கு கடந்த கடந்த மாதம் 28-ந் தேதி அன்று கல்பாளையம் பிர்கா சர்வேயர் கருப்பையா (வயது 48) என்பவரை சந்தித்து, தனது விண்ணப்பத்தின் பேரில் உட்பிரிவு செய்து வழங்க வேண்டுமாறு கேட்டுள்ளார். அதற்கு பிர்கா சர்வேயர் கருப்பையா ஒரு வாரம் கழித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் ரமேஷ் குமார் பிர்கா சர்வேயர் கருப்பையாவை சந்தித்து தனது வேலையை முடித்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு சர்வேயர் கருப்பையா தனக்கு 6000 ரூபாய் லஞ்சமாக கொடு த்தால் சப் டிவிஷன் வேலை யை முடித்து தருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் கருப்பையாவை சமயபுரம் பைபாஸ் சாலையில் சந்தித்து ரமேஷ்குமார் ரூ.5 ஆயிரத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கருப்பையாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து மணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை இடித்து தள்ளவேண்டும் என பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்
- சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் அருகா மையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன.
இந்த நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இத னால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.
அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தக ர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 7 பவுன் நகை திருடி கொண்டு வீட்டை பூட்டி சென்ற கொள்ளையனால் பரபரப்பு
- சாவியை வீட்டின் சுவிட்ச் பாக்ஸ் மீது வைத்தார்.
திருச்சி
திருச்சி முசிறி அருகே உள்ள காவேரி பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45) விவசாயி. இவர் வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டி அதன் சாவியை வீட்டின் சுவிட்ச் பாக்ஸ் மீது வைத்தார். பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு அங்குள்ள தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
மதியம் தோட்ட வேலைகளை முடித்து கொண்டு இருவரும் வீடு திரும்பினர். அப்போது ஸ்விட்ச் பாக்ஸ் மீது வைத்திருந்த சாவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் ஸ்விட்ச் பாக்ஸ் மீது சாவி வைப்பதை நோட்டமிட்டு கதவைத் திறந்து நகையை திருடிக் கொண்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மணி வாத்தலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடன் தொல்லையால்பில் கலெக்டர் விஷம் குடித்து தற்கொலை
- மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி
திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெரு சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் கணேஷ் (வயது 34) இவர் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இதனால் கடன் பணத்தை திருப்பி கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற கணேசன் திடீரென்று வாந்தி எடுத்து உள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி மணிமேகலை அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்த போது மன உளைச்சலில் எலி மருந்தை தின்று விட்டதாக கணேஷ் கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சிடைந்த மணிமேகலை கணேசனை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற கணேசன் சில மணி நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விஷம் குடித்து இறந்த சம்பவம் திருச்சி மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
- ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.
அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தகர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியலில் ஈடுபட்டனர்
- மத்திய அரசை கண்டித்து
திருச்சி
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அது சார்ந்த அமைப்புகள சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் தாங்கினார். சிஐடியு ரங்கராஜன் முன்னிலை வகித்தார். பின்னர் போராட்டக்காரர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், எஸ் எப் ஐ அமைப்பினர் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட குழு சார்பில் நம்பர் 1 டோல்கேட், துறையூர், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரைதிருச்சி மாவட்டத்தில் மாநகர் புறநகர் என போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டத்தில் மாநகர், புறநகர் பகுதிகளில் மொத்தம் ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது ஐந்து இடங்களிலும் நடந்த போராட்டத்தில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 3 நாய் குட்டிகளை அடித்து கொன்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்
- குடிபோதையில் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்
திருச்சி:
திருச்சி முனிசிபல் காலனி பூசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி லதா (வயது 32). இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். அதில் சமீபத்தில் ஒரு நாய் 6 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் குட்டிகள் அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் வீரா என்கிற வீரையன் (22) என்பவர் குடிபோதையில் மரக்கட்டையால் 3 நாய்க்குட்டிகளை கொடூரமாக அடித்து கொன்றார். இதுகுறித்து லதா கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.அவர் மீது கோட்டை ,பாலக்கரை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல சோதனை ஓட்டம் நடைபெறுகிறது
- 16-ந் தேதி நடைபெறுகிறது
திருச்சி:
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை- மதுரை இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் வாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல உள்ளது.
இதனை அமல் படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற 16-ந் தேதி நடக்கிறது.
அதன் பின் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும்.
இந்த ெரயில் தினமும் சென்னை எழும்புரில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 06.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும். மதுரையில் இருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு காலை 09.36 ஸ்ரீரங்கம் ெரயில் நிலையம் வந்தடையும்.
ஸ்ரீரங்கம் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீநிவாசன் கூறும்போது,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் சென்னை மற்றும் மதுரை பக்தர்கள் திருச்சி ஜங்ஷன் ெரயில் நிலையம் வந்து அதன் பின்னர் ஆட்டோ அல்லது பஸ்களில் ஸ்ரீரங்கத்துக்கு வர வேண்டி இருந்தது.
இனிமேல் வைகை எக்ஸ்பிரஸ் வரும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் ெரயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து அங்கிருந்து கோவிலுக்கு எளிதில் செல்வார்கள்.
பண்டிகை காலங்களிலும் இந்த ெரயில் வசதி மக்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும். ஆகவே ஒரு தெற்கு ெரயில்வே நிர்வாகம் உடனடியாக இதனை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
- சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
திருச்சி:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்பினர் விநாயகர் சதுர்த்திக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு ள்ளனர்.
இந்த பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விநாயகர் சிலை களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொண்டயம்பேட்டை மற்றும் திருவானை கோயி லில் பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மூலப் பொருள்கள் விலை ஏற்றம்
தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான விநாய கர் சிலைகள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள களிமண்ணை கொண்டு வந்து செய்து வருகின்றனர். இதில் வீடுகளில் பூஜை செய்வதற்கு ஏற்ப ஒன்று முதல் இரண்டு அடி வரையிலான சிறிய சிலை கள் செய்யப்படுகி ன்றன.
மேலும் ஊர்வலத்துக்கு தேவையாக 3 முதல் 15 அடி வரையிலான ராட்சத சிலைகளும் மோல்டிங் டைஸ் மூலம் தயாரிக்கி றார்கள்.
தயாரிக்கும் முறை
இந்த விநாயகர் சிலை தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருட்களாக காகி தக் கூழ் மற்றும் மரவள்ளி க்கிழங்கு மாவு பயன்படுத்த ப்படுகிறது, பாரம்பரியமாக சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள கொண்டயம்-பேட்டையைச் சேர்ந்த சிற்பி சாந்தி கூறும்போது,
4 கிலோ மரவள்ளிக்கி ழங்கு மாவு 10 கிலோ காகித கூழுடன் அரைக்கும் இயந்திரத்தில் கலக்கப்படுகி றது. அது சிலை விரும்பிய நிலைத்தன்மையை அடையவும்,சரியான வலி மையை உறுதி செய்யவும் உதவுகிறது.
சிலையின் ஒவ்வொரு பகுதியான தலை, கைகள், கால்கள் ஆகியவை தனித்த னியாக மோல்ட் டைஸைப் பயன்படுத்தி பின்னர் உடற்பகுதியில் இணைத்து வருகிறோம். தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு ள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வெல்ஸ் மற்றும் வண்ணமயமான நீர் சார்ந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டு மே பயன்படுத்துகி றோம்.
விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொட ங்கப்பட்டது. சேலம் மாவ ட்டத்தில் இருந்து மூலப்பொ ருட்களை கொள்முதல் செய்தோம்.
மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டை விட தற்போது மூலப்பொருட்க ளின் விலை அதிகரித்து ள்ளது. மேலும் தொழிலா ளர்க ளுக்கான கூலியும் உயர்ந்து விட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி செய்யும் பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார். மற்றொரு கைவி னைஞர் பி.மணிகண்டன் பேசும்போது,
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எங்கள் தொழில் முடங்கி யது. திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதற்கு காரணமாக இருந்தது.
ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தேவைகள் குறைந்துள்ளது என்றார். பல கைவினைஞர்கள், வெளிச்சந்தையில் சிலைகளை அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ரூ.12,000 முதல் 25,000 வரை விற்கின்றனர். திருச்சியில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதனால் திருச்சி மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சிலைகள் அனுப்பப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, சிலைகள் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதனை பின்பற்றியே கொண்டையம் பேட்டை மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் கலைஞர்கள் சிலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதனை அவ்வப்போது அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் சிற்பிகள் தெரிவித்தனர்.
- சாக்கடையில் விழுந்து பெயிண்டர் உயிரிழந்தார்
- தனியாக வசித்து வந்தார்
திருச்சி:
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ் (வயது 57).பெயிண்டர்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டு தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






