என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்
    X

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மத்திய அரசை கண்டித்து

    திருச்சி

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அது சார்ந்த அமைப்புகள சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தது.

    இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுகந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் தாங்கினார். சிஐடியு ரங்கராஜன் முன்னிலை வகித்தார். பின்னர் போராட்டக்காரர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று தலைமை தபால் நிலையம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், எஸ் எப் ஐ அமைப்பினர் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட குழு சார்பில் நம்பர் 1 டோல்கேட், துறையூர், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரைதிருச்சி மாவட்டத்தில் மாநகர் புறநகர் என போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டத்தில் மாநகர், புறநகர் பகுதிகளில் மொத்தம் ஐந்து இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது ஐந்து இடங்களிலும் நடந்த போராட்டத்தில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×