search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    • சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு

    திருச்சி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து பா.ஜ.க., இந்து முன்னணி போன்ற அமைப்பினர் விநாயகர் சதுர்த்திக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு ள்ளனர்.

    இந்த பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், விநாயகர் சிலை களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொண்டயம்பேட்டை மற்றும் திருவானை கோயி லில் பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    மூலப் பொருள்கள் விலை ஏற்றம்

    தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான விநாய கர் சிலைகள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள களிமண்ணை கொண்டு வந்து செய்து வருகின்றனர். இதில் வீடுகளில் பூஜை செய்வதற்கு ஏற்ப ஒன்று முதல் இரண்டு அடி வரையிலான சிறிய சிலை கள் செய்யப்படுகி ன்றன.

    மேலும் ஊர்வலத்துக்கு தேவையாக 3 முதல் 15 அடி வரையிலான ராட்சத சிலைகளும் மோல்டிங் டைஸ் மூலம் தயாரிக்கி றார்கள்.

    தயாரிக்கும் முறை

    இந்த விநாயகர் சிலை தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருட்களாக காகி தக் கூழ் மற்றும் மரவள்ளி க்கிழங்கு மாவு பயன்படுத்த ப்படுகிறது, பாரம்பரியமாக சிலைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள கொண்டயம்-பேட்டையைச் சேர்ந்த சிற்பி சாந்தி கூறும்போது,

    4 கிலோ மரவள்ளிக்கி ழங்கு மாவு 10 கிலோ காகித கூழுடன் அரைக்கும் இயந்திரத்தில் கலக்கப்படுகி றது. அது சிலை விரும்பிய நிலைத்தன்மையை அடையவும்,சரியான வலி மையை உறுதி செய்யவும் உதவுகிறது.

    சிலையின் ஒவ்வொரு பகுதியான தலை, கைகள், கால்கள் ஆகியவை தனித்த னியாக மோல்ட் டைஸைப் பயன்படுத்தி பின்னர் உடற்பகுதியில் இணைத்து வருகிறோம். தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு ள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வெல்ஸ் மற்றும் வண்ணமயமான நீர் சார்ந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டு மே பயன்படுத்துகி றோம்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தொட ங்கப்பட்டது. சேலம் மாவ ட்டத்தில் இருந்து மூலப்பொ ருட்களை கொள்முதல் செய்தோம்.

    மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது

    கடந்த ஆண்டை விட தற்போது மூலப்பொருட்க ளின் விலை அதிகரித்து ள்ளது. மேலும் தொழிலா ளர்க ளுக்கான கூலியும் உயர்ந்து விட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி செய்யும் பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார். மற்றொரு கைவி னைஞர் பி.மணிகண்டன் பேசும்போது,

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது எங்கள் தொழில் முடங்கி யது. திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதற்கு காரணமாக இருந்தது.

    ஆனால் தற்போது இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தேவைகள் குறைந்துள்ளது என்றார். பல கைவினைஞர்கள், வெளிச்சந்தையில் சிலைகளை அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து ரூ.12,000 முதல் 25,000 வரை விற்கின்றனர். திருச்சியில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தனி மவுசு உள்ளது. அதனால் திருச்சி மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து சிலைகள் அனுப்பப்படுகிறது.

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, சிலைகள் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

    அதனை பின்பற்றியே கொண்டையம் பேட்டை மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் கலைஞர்கள் சிலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இதனை அவ்வப்போது அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் சிற்பிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×