என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை இடித்து தள்ளவேண்டும் என பதிவிட்டவர் கைது
    X

    ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை இடித்து தள்ளவேண்டும் என பதிவிட்டவர் கைது

    • ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை இடித்து தள்ளவேண்டும் என பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்
    • சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் அருகா மையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு இந்து அமைப்புகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன.

    இந்த நிலையில் அந்த பெரியார் சிலையை இடித்து தள்ள வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இத னால் மீண்டும் பிரச்சனை எழுந்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிலைக்கு கூடுதல் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் பெரியார் சிலையை தக ர்க்கப் போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருச்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×