என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சி சோமரசம்பேட்டையில் 30 பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர்
ராம்ஜிநகர்,
திருச்சி சோமரசம்பேட்டையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை அழைத்து வருவதற்காக, பள்ளியில் வேன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேன் பழுதடைந்த காரணத்தால், இன்று பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக தனியார் வேன் ஒன்று வாடகைக்கு பேசப்பட்டு உள்ளது. இந்த வேனை இனம்புலியூரை சேர்ந்த டிரைவர் சங்கர்(வயது 21) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பள்ளக்காடு பகுதியில் உள்ள 30 பள்ளி மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிக்கொண்டு அவர் பள்ளியை நோக்கி வேனை ஓட்டி சென்றுள்ளார். பள்ளக்காடு பகுதியை அடுத்து வேன் வந்து கொண்டிருந்தது. வயல்வெளி பகுதி என்பதால் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடி அளவிற்கு பள்ளம் இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது வேன் மோதி உள்ளது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த பள்ளி குழந்தை அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு வந்து பள்ளி குழந்தைகளை மீட்டனர். லேசான காயம் அடைந்த குழந்தைகளை இருசக்கர வாகனங்கள் மூலம்அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இதில் 2 பள்ளி குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். பள்ளி வேன் மோதியதில் காயடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லால்குடி அருகே செங்கல் சூளையில் குழந்தைகள் உட்பட 6 கொத்தடிமைகள் மீட்பு
- செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்
திருச்சி,
திருச்சி லால்குடி திருமண மேடு ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32).இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை வைத்து நட த்தி வருகிறார். இதில் தொழி லாளர்களை கொத்தடி மையாக நடத்துவதாகவும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தாகவும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தக வல் கிடைத்தது.உடனே அவர் லால்குடி உதவி கலெக்டருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொட ர்ந்து வருவாய்த் துறையினர் அந்த செங்கல் சூளையில் அதிரடி சோதனை நடத்தி னர்.அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை கொத்தடி மையாக நடத்தி வந்ததும், குழந்தை தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி இருந்ததும் உறுதி செய்யப்ப ட்டது.பின்னர் வருவாய்த் துறையினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைமுடி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அய்யனார் (வயது 24), அவரது மனைவி மாரியம்மாள் (21),மற்றும் அந்த தம்பதியரின் குழந்தைகள் மகாலட்சுமி( 3) பரமசிவ(2)அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் மகள் ஆதிலட்சுமி (11) ஏழுமலை (10) ஆகிய 6 பேரையும் அவர்களின் சொந்த ஊரு க்கு அனுப்பி வைக்க நட வடிக்கை எடுத்து வருகி ன்றனர்.இது தொடர்பாக குழ ந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செங்கல் சூளை அதிபர் மீது லால்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.லால்குடி செங்கல் சூளை யில் கொத்தடிமைகள் மற்றும் குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- திருச்சியில் இருந்து பயணிகள் விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
- 98 சதவீதம் ஏற்றுமதி உள்ள நிலையில் இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது
திருச்சி,
உள்நாட்டில் உற்பத்தியா கும் பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலவாணி அதிகரி த்து நாட்டின் பொருளாதா ரம் உயரும். இந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் விமான சரக்கு போக்குவரத்து விரைவான சேவையை வழங்குகிறது.கொரோனா காலகட்ட த்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளா னது. அதன் பின்னர் தற்போது சரக்கு ஏற்றுமதி பல நாடுகளில் சீராகியு ள்ளது.ஆனால் திருச்சிக்கு சரக்குகளை கையாள தனி விமானங்கள் இயக்கப்ப டவில்லை. தற்போது வரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதில் முதலில் பயணிக ளுக்கு முன்னுரிமை அளிக்கி ன்றனர். அவர்களின் உட மைகள் வைக்கும் இடத்தை தவிர்த்து மீதமுள்ள இடத்தி ற்கு தகுந்தார் போல் சரக்கு ஏற்ற அனுமதி அளிக்க ப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோகா, கொழும்பு உள்ளி ட்ட நாடுகளுக்கு அதிகளவு சரக்கு ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.
தினமும் இங்கிருந்து 18 மெட்ரிக் டன் சரக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரி யாக மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும் ஆண்டு க்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாள ப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் 98 சதவீதம் காய்கறிகள்,பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் ஆகியவையாகும்.மீதி இரண்டு சதவீதம் மட்டுமே துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் செல்கிறது.திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,திருச்சி விமான நிலைய த்தை பொருத்தவரை ஏற்று மதியை ஒப்பிடும்போது இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்குப் பல்வேறு நடைமுறை சிக்க ல்கள் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.ஆகவே இறக்கும தியாளர்கள் விமான சரக்கு இறக்குமதிக்கு முக்கிய த்துவம் தர வேண்டும்.அவர்களுக்கு தேவையான எல்லா ஆவணம் சார்ந்த பணிகளையும் சரக்கு முனையம் பார்த்துக் கொள்ளும் என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.
- தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.
திருச்சி:
சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று பாஜகவினர் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் அங்கு திரண்டனர்.
ஏற்கனவே பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்திற்கு முயன்ற எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது,
சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசு போன்று ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது 80 சதவீத இந்திய மக்களை இனப்படுகொலை செய்வோம் என சொல்வதற்கு ஒப்பானது.
சனாதனத்தில் இருக்கும் 4 வர்ணங்களையும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் ஒரு சனாதனி.
ஆனால் வைரமுத்து தவறான தகவலை சொல்கிறார். இன்றைக்கு சனாதனம் என்பது இல்லை. அதனை அளவீடு செய்வது யார்?
புராண காலத்தில் இருந்து வர்ணங்கள் மாறி திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் ஆணவ கொலைகளும் திருமாவளவன், சுப வீர பாண்டியன் போன்றவர்கள் பிறந்த பின்னரே நடந்துள்ளது.
திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஆகவே இனப்படுகொலை செய்வதாக கூறிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முசிறியில் வட்டி பணம் கேட்டு டிரைவரை கடத்தி இரண்டு தினங்களாக சித்திரவதை செய்யப்பட்டு உள்ளது
- போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் சகோதரர்கள் தலை மறைவு
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி சுண்ணாம்புக்கார தெருவில் வசிக்கும் ராஜசேகர் மகன் கண்ணன்(வயது 36). ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளத்தெருவில் வசிக்கும் நாராயணன் மகன்கள் ராஜபாண்டி (44), ஸ்ரீராம் (35) ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.30 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். அதற்கான வட்டி தொகை என தொடர்ந்து கட்டி வந்த நபர் தற்போது மூன்று மாதமாக வட்டி பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் மீது உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியில் வரும் பொழுது ஸ்ரீராம் என்பவர் கண்ணனை அழைத்து சென்று தனது வீட்டில் அடைத்து வைத்து, ராஜபாண்டியுடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ராஜபாண்டி அவரது நண்பர்களை ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் அட்மிஷன் காக செல்லும்போது கண்ணனையும் காரில் அழைத்துச் சென்று துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். கண்ணன் மனைவி தங்கவல்லி மற்றும் இவர்களது குழந்தை லிகிஸ்(8), தர்ஷன்(7) ஆகிய மூவரையும் ஸ்ரீராம் வீட்டிற்குள் அடைத்து பூட்டி சென்றுள்ளார். குழந்தைகள் கூச்சல் இட்டு கத்திய பொழுது அருகில் குடியிருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெளியே அழைத்து வந்துள்ளனர். இதுகுறித்து தங்கவள்ளி முசிறி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். தங்கள் மீது புகார் செய்யப்பட்டதை அறிந்து கண்ணனை, ராஜபாண்டியும், ஸ்ரீராமும் விடுவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட கண்ணன், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித் து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், ஆள்கடத்தல், அடித்து துன்புறுத்துதல் போன்ற பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜபாண்டி, ஸ்ரீராம் ஆகிய இருவரையும்தேடி வருகிறார்.
- திருச்சியில் நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி.
திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் விக்னேஸ்வரி (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த விக்னேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்கு சென்று மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- திருச்சி பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை
திருச்சி,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 56). இவருடைய உறவினர் மீனாம்மாள் என்பவர் திருச்சியில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளார். திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மீனாம்மாள் வீட்டிலிருந்து உடலை அருகிலுள்ள மணல் வாரித்துறை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது 5 பேர் சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சென்றனர். இதனை பார்த்த கருணாகரன் ரோட்டில் யாராவது மேல் பட்டாசு மேலே விழுந்து விடப் போகிறது. ஜாக்கிரதையாக வெடியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த 5 பேரும் ஆத்திரமடைந்து கருணாகரனை ஆத்திரத்தில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கருணாகரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட திருச்சி பாலக்கரை பசும் மடம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 29) கார்த்திகேயன் ( 29) சாந்தகுமார் 27) அன்சாரி ( 29) மதுகுமார் (33 )ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
- திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
- மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை
திருச்சி,
ராம்ஜி நகர் மில் காலனி காந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன்.இவரது மனைவி சுமதி.வீட்டில் இருந்த அவர் திடீரென்று வழுக்கி விழுந்தார் இதனால் தலையில் பலத்த காயத்துடன் சுமதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
- திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கி வைத்தார்
திருச்சி,
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் இன்று திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல். ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, கலைப்பிரிவு பெஞ்சமின் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமினை திருநாவுக்கரசர் எம்பி. தொடங்கி வைத்து பணி நியமன ஆணை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் 20 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்தது. இங்குஅரசியல் பேச விரும்பவில்லை.மாநில அரசும் வேலை வாய்ப்புகள் வழங்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லுமாறு உங்களை வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.
- வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.
- கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்'குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி, திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன.
வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 7 அணிகளும் பங்கேற்க உள்ளன.
இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இறுதி போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும். இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்து ரூ. 19 லட்சம் மோசடி செய்துள்ளனர்
- 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி:
திருச்சி காட்டூர் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 70). இவர் தனது வீட்டு தேவைகளுக்காக திருச்சி நந்தி கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வங்கி கிளையில் லோன் கேட்டார். அப்போது வயது முதிர்வு காரணமாக லோன் வழங்க நிர்வாகம் மறுத்தது.
இந்த நிலையில் திருச்சி அண்ணா சிலை பூசாரி தெரு புதுவை நகரை சேர்ந்த அவரது உறவினர் ராஜேந்திரன் என்பவர் அந்த மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து திருச்சி சிந்தாமணி காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர ராஜ் (38) என்பவரை அறிமுகம் செய்தார்.
பின்னர் மகேந்திர ராஜ் அந்த மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்து ரூ.38 லட்சம் கடன் வாங்கி ரூ. 19 லட்சத்தை மூதாட்டி இடம் வழங்கிவிட்டு, ரூ. 19 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் லோன் தவணை கட்டுவதாக கூறினார்.
பின்னர் மகேந்திர ராஜ், அமிர்தராஜன் ஆகியோர் அந்த தொகையை பங்கு போட்டு எடுத்துக்கொண்டு வங்கி கடன் தவணையை கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி திருச்சி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டின் கோட்டில் புகார் கொடுத்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன், மகேந்திரராஜ், அமிர்தராஜன், ராஜேந்திரன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் சோகம்
திருச்சி,:
திருச்சி துறையூர் பெருமாள் பாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 50).இவரது மகன் பாலாஜி (15 )இவர் துறையூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
தினமும் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த பாலாஜி கடந்த ஒரு மாதமாக சரியாக பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார்.
இதனால் பெற்றோர் மகனின் எதிர்காலத்தை நினைத்து மனம் வருந்தினர். பின்னர் அவரைக் கண்டித்தனர்.
இதனால் பாலாஜி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். அதைத்தொடர்ந்து சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டார்.
பின்னர் பெற்றோர் மகனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாபு துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் எஸ்.எஸ். எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது






