என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- திருச்சியில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
- திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கி வைத்தார்
திருச்சி,
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் இன்று திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் மாபெரும் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல். ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, கலைப்பிரிவு பெஞ்சமின் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமினை திருநாவுக்கரசர் எம்பி. தொடங்கி வைத்து பணி நியமன ஆணை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் 20 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்தது. இங்குஅரசியல் பேச விரும்பவில்லை.மாநில அரசும் வேலை வாய்ப்புகள் வழங்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு செல்லுமாறு உங்களை வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.






