என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
- எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் சோகம்
திருச்சி,:
திருச்சி துறையூர் பெருமாள் பாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 50).இவரது மகன் பாலாஜி (15 )இவர் துறையூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
தினமும் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த பாலாஜி கடந்த ஒரு மாதமாக சரியாக பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார்.
இதனால் பெற்றோர் மகனின் எதிர்காலத்தை நினைத்து மனம் வருந்தினர். பின்னர் அவரைக் கண்டித்தனர்.
இதனால் பாலாஜி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். அதைத்தொடர்ந்து சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டார்.
பின்னர் பெற்றோர் மகனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாபு துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் எஸ்.எஸ். எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது






