என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது
- இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- திருச்சி பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை
திருச்சி,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 56). இவருடைய உறவினர் மீனாம்மாள் என்பவர் திருச்சியில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளார். திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மீனாம்மாள் வீட்டிலிருந்து உடலை அருகிலுள்ள மணல் வாரித்துறை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது 5 பேர் சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து சென்றனர். இதனை பார்த்த கருணாகரன் ரோட்டில் யாராவது மேல் பட்டாசு மேலே விழுந்து விடப் போகிறது. ஜாக்கிரதையாக வெடியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த 5 பேரும் ஆத்திரமடைந்து கருணாகரனை ஆத்திரத்தில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கருணாகரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சவ ஊர்வலத்தில் தகராறில் ஈடுபட்ட திருச்சி பாலக்கரை பசும் மடம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 29) கார்த்திகேயன் ( 29) சாந்தகுமார் 27) அன்சாரி ( 29) மதுகுமார் (33 )ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.






