என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • மத்திய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போலீசாருடன் மோதல்- தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

    திருச்சி,

    பெட்ரோல் விலை, டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகி யவற்றை குறைக்க வேண் டும்.இந்தியை திணித்து தமிழு க்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். வேலை யில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும்.சாதி, மத கலவரங்களை தூண்டி, மக்கள் ஒருமைப்பா ட்டை குலைத்து, நாட்டை நாசமாக்கும் பாஜக அரசு, ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இன்று தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக முதல் நாள் போராட்டமான நேற்று, திருச்சி இரயில்வே சந்திப்பில் சட்டமன்ற முன் ளாள் உறுப்பினர் பத்மாவதி தலைமையில் போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்ப ட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.இரண்டாவது நாளான இன்று, திருச்சி திருவரங்கம் ரெயில் நிலையத்தில் மறி யல் போராட்டம்சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பார் வதி மாவட்ட பொருளாளர் சண்முகம் தேசிய கட்டுப்பா ட்டு குழு செல்வராஜ் மாணவர் மாவட்ட செயலா ளர் எஸ் சிவா பகுதி செயலாளர்கள் சுரேஷ் முத்துசாமிஅஞ்சுகம் செம்பட்டு ராஜா அபுதாகிர் மாதர் சந்திரன மாநகர தலைவர் ஆயிஷா மாணவர் பெருமன்ற செயலாளர்கள் மற்றும் 100 -க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். அப்போது போலீசாருக்கும், போராட்ட க்காரர்களுக்கும் இடையே மோதல்- தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • திருமணமான 20 நாளில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
    • திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செ ல்வம் (வயது 29 ). கொத்த னார்.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கட ந்த 20 நாட்களுக்கு முன்பு அத்தை மகளான கீர்த்தனா (20) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் இரவு கண வன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் கீர்த்தனா எழுந்து குளிக்க சென்றார். அப்போது பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று மின்விசி றியில் சேலையால் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வயிற்று வலியால் ஏற்ப ட்ட மன உளைச்சலில் தற் கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோத னைக்கு பின்னர் பன்னீர் செல்வத்தின் உடல் உறவி னர்களிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளது.திருமணமான 20 நாளி லேயே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது
    • திருச்சி மாவட்டத்தில் பணிகள் பாதிக்கப்பட்டது

    திருச்சி,

    தமிழகம் முழுவதும் தமி ழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 26 ஆயிரம் பணி யாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள பல ஆயிரம் காலிப் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும், அரசு ஊழிய ர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவி யாளர்களை பணி வரன் முறை படுத்த வேண்டும்.மக்கள் தொகை அடிப்ப டையில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கை களை வலியுறுத்திதமிழ்நாடு ஊரக வள ர்ச்சித் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 780 -க்கும் மேற்பட்டோர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் பணிகள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளது.

    • திருச்சியில் வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் உள்பட 5 பேர் மாயமாகி உள்ளனர்
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி செப் 13 -

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி யை சேர்ந்தவர் செல்ல க்குட்டி ( வயது 79). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவி ல்லை. இதுகுறித்து அவரது மகன் சத்திய செல்வன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் எடமலைப் பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த காளிதாஸ் (வயது 75) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறி த்து அவரது மகன் முத்து ச்செல்வம் கொடுத்த புகா ரின் அடிப்படையில் எடம லை ப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (5), ஜஸ்வின் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து குமார் பொன் மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடு த்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துறையூரில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்
    • தடுக்க முயன்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் சாமிநாதன் மார்க்கெட் பகுதியில் வசிப்பவர் ராஜா (62). மனைவி செல்வி (வயது57).இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அவரவர் ஊர்களில் வசித்து வருகின்றனர். ராஜாவும், செல்வியும் தனியாக உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.நள்ளிரவில் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டின் அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் பணம், நகை ஏதேனும் உள்ளதா? என்பதை ஆராய்ந்துள்ளார்.அப்போது சத்தம் கேட்டு விழித்துப் பார்த்த செல்வி, மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதில் பதற்றம் அடைந்த மர்ம நபர் செல்வியின் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் உதவியுடன், செல்வி துறையூர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துறையூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி மேலபுதூரில் காருக்குள் டிரைவர் பிணமாக கிடந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது காருக்கு திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் என்பவர் ஆக்டிங் டிரைவர் ஆக இருந்து வந்தார் .சம்பவத்தன்று இவரது காரை எடுத்துக்கொண்டு திருச்சி மேலப்புதூர் பகுதி யில் உள்ள பள்ளி அருகில் நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் காருக்குள் இருந்த ராஜா என்கிற எட்வ ர்டு ஆரோக்கியராஜ் மயங்கி ய நிலையில் பிணமானார்.இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுகனூர் அருகே கார் மோதி முதியவர் பலியானார்
    • நிற்காமல் சென்ற காரைச் செக் போஸ்டில் வைத்து போலீசார் மடக்கினார்கள்

    மண்ணச்சநல்லூர்,

    மணச்சநல்லூர் தாலுக்கா வாழையூர் அரிஜன தெருவை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் மகன் முருகேசன் வயது(65) சிறுகனூரில் உள்ள பாரில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு 9.45 மணி அளவில் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி பிரிவு இரும்பு தடுப்புச் சுவரைத் தாண்டி ரோட்டை கடக்க முயன்ற போது அப்போது சென்னையில் பழனி நோக்கி சென்ற கார் ஒன்று முருகேசன் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டது. முதியவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தடம் மாறி மாறி சென்ற தப்பி சென்ற காரை லால்குடி வட்டம் கல்லகம் பகுதியில் உள்ள செக் போஸ்டில் வைத்து போலீசார் காரை மடக்கினர்கள். பாண்டிச்சேரி வீரபத்திரன் என்பவரது மகன் அய்யனார் என்பது தெரியவந்தது. அவர் மீது சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டு உள்ளது
    • பட்டப் பகலில் வீட்டின் கதவை தட்டி துணிகரம்

    திருச்சி, 

    திருச்சி மேலகல்கண்டார்கோட்டை காருண்ணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). வீரராகவன் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து மார்க்கெட்க்கு வேலைக்கு சென்று விட்டார்.அதைத் தொடர்ந்து சிவகாமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முன்னெச்சரிக்கையாக வீட்டின் முன்பக்க கதவை சாத்தி இருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் அவரது வீட்டின் கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே கணவர் வீடு திரும்பி இருக்கலாம் என கருதி கதவை திறந்து வெளியே வந்தார்.அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். அதைத்தொடர்ந்து சிவகாமி சமையலறைக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அடுத்த நொடி அந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினர்.அதிர்ச்சி அடைந்த சிவகாமி திருடன் திருடன் என கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் அங்குள்ள கருவேல மர காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர்.இதுகுறித்து சிவகாமி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டு பெண்ணின் 7 பவுன் தாலிச் சேனை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொட்டியம் அருகே விபத்தில் சிக்கிய காருக்குள் 15 மூட்டை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • காரை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோட்டம்

    தொட்டியம்,

    தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம்புதூர் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராமஜெயம் (18) என்பவர் தொட்டியம் வந்துவிட்டு காமலாபுரம் புதூருக்கு செல்வதற்காக திருச்சி சேலம் சாலையில் தொட்டியம் தாசில்தார் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ராமஜெயம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்த போது காரின் உள்ளே தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 15- க்கும் மேற்பட்ட மூட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யினர் போராட்டம்
    • போராட்டத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது

    திருச்சி,

    திருச்சி வடக்கு காட்டூர் பகுதி சேர்ந்தவர் டேவிட் ரீகன்,இவர் கட்டிட தொழிலாளி.சம்பவத்தன்று ரீகன் திருச்சி கருமண்டபம் நியூ ஆல்பா நகரில் உள்ள ஒரு விட்டிற்கு வேலை பார்க்க சென்றிருந்தார்.இந்த நிலையில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ரீகன் எதிர்பார விதமாக எலக்ட்ரிக்கல் வயர்ரை மிதித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில மின்சாரம் தாக்கி டேவிட் ரீகன் பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் விரைந்து சென்று டேவிட் ரீகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன ரீகனுக்கு மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி ரீகன் சாவு விகாரத்தில்தமிழக அரசு தலையிட்டு உயர் மின்சார கம்பிகளுக்கு கீழ் வீடு கட்ட முறைகேடாககட்டிட அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரி கள் மற்றும் மின் இனைப்பு வழங்கிய மின்வாரியஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். 4 பெண் குழந்தைகள் வைத்துள்ள இறந்து போன கட்டிட தொழிலாளி ரீகன் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரீகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் உள்ள ரீகன் உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சார்பில் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    • திருச்சி அருகே வயலூர் முருகன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்டவர் கீழே விழுந்து பலி
    • சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ராம்ஜிநகர்,

    திருச்சி ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரியத்தைச் சார்ந்த மாரிமுத்து (70) என்பவர் பிரசித்தி பெற்ற வயலூர் முருகனை தரிசித்து விட்டு மாடியில் உள்ள அன்னதான மண்டபத்தில் உணவு உட்க்கொண்டு கீழே இறங்கும் போது மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துவிட்டார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலூர் கோவிலில் தினமும் 100 நபர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அன்னதானம் நடைபெற்று வருகிறது இந்த அன்னதானம் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் மாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தை பெரும்பாலானோர் முதியோர்கள் மற்றும் கை கால்கள் ஊனமுற்றோர் உணவருந்தி வருவதால் இதனை கீழே உள்ள தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் அவர்களால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கிருபனந்த வாரியார் மண்டபத்தில் நடத்த வேண்டும். அங்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×