என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது
- திருச்சி மாவட்டத்தில் பணிகள் பாதிக்கப்பட்டது
திருச்சி,
தமிழகம் முழுவதும் தமி ழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 26 ஆயிரம் பணி யாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள பல ஆயிரம் காலிப் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும், அரசு ஊழிய ர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவி யாளர்களை பணி வரன் முறை படுத்த வேண்டும்.மக்கள் தொகை அடிப்ப டையில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்க வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கை களை வலியுறுத்திதமிழ்நாடு ஊரக வள ர்ச்சித் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 780 -க்கும் மேற்பட்டோர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் பணிகள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளது.






