என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரெயில் மறியல்
    X

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரெயில் மறியல்

    • மத்திய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போலீசாருடன் மோதல்- தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

    திருச்சி,

    பெட்ரோல் விலை, டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகி யவற்றை குறைக்க வேண் டும்.இந்தியை திணித்து தமிழு க்கு எதிராக செயல்படுவதை கைவிட வேண்டும். வேலை யில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும்.சாதி, மத கலவரங்களை தூண்டி, மக்கள் ஒருமைப்பா ட்டை குலைத்து, நாட்டை நாசமாக்கும் பாஜக அரசு, ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இன்று தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக முதல் நாள் போராட்டமான நேற்று, திருச்சி இரயில்வே சந்திப்பில் சட்டமன்ற முன் ளாள் உறுப்பினர் பத்மாவதி தலைமையில் போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்ப ட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.இரண்டாவது நாளான இன்று, திருச்சி திருவரங்கம் ரெயில் நிலையத்தில் மறி யல் போராட்டம்சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச் செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பார் வதி மாவட்ட பொருளாளர் சண்முகம் தேசிய கட்டுப்பா ட்டு குழு செல்வராஜ் மாணவர் மாவட்ட செயலா ளர் எஸ் சிவா பகுதி செயலாளர்கள் சுரேஷ் முத்துசாமிஅஞ்சுகம் செம்பட்டு ராஜா அபுதாகிர் மாதர் சந்திரன மாநகர தலைவர் ஆயிஷா மாணவர் பெருமன்ற செயலாளர்கள் மற்றும் 100 -க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். அப்போது போலீசாருக்கும், போராட்ட க்காரர்களுக்கும் இடையே மோதல்- தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×