என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்திரம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
- கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருச்சி,
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடு த்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






