என் மலர்
உள்ளூர் செய்திகள்

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி உட்பட 2 பேர் கைது
- கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி
திருச்சி பொன்மலை ப்பட்டி ஜீவா தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 21).வெல்டரான இவர் பொன்னேரிபுரம் எல்லை காளியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ. 600-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மாவட்டம் திருவை யாறு அம்மன் பேட்டை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த குணா என்கிற குணசேகரன் (வயது 35) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று பால க்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேர் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்ற கம்ப்ரசம் பேட்டை அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மகேந்திரன் என்பவரை வழிமறித்து கத்தி முனையில் ரூ. 2000-ம் பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணி யார் கோவில் தெரு பகுதி யைச் சேர்ந்த தாமஸ் அந்தோணி (23) என்பவரை கைது செய்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






