என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலி தங்க காசு கொடுத்து ரூ.60 ஆயிரம் மோசடி
- திருச்சி துறையூரில் போலி தங்க காசு கொடுத்து ரூ.60 ஆயிரம் மோசடி நடைபெற்று உள்ளது
- மர்ம பெண்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறை யூர் கீழக்கடை வீதியில் கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருபவர் சாரதா லட்சுமி (வயது43இவரது கடைக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், சுமார் 7 வயது மதிப்புள்ள ஒரு பெண் குழந்தையுடன் வந்தனர்.அவர்கள் தங்களை நெடு ஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருவதாகவும், வரும் வழியில் கயிற்றில் கோர்க்க ப்பட்ட காசுகளுடன் கூடிய சுமார் 8 பவுன் எடையுள்ள தாலிக்கொடி கீழே கிடந்த தாகவும்,இதை தங்களால் வெளி யில் பணமாக மாற்ற முடியாது, உறவினர் ஒருவ ரின் மருத்துவ தேவை க்கு பணம் தேவைப்படுவதால், இந்த நகையை வைத்துக் கொண்டு தங்களால் முடிந்த தொகையை தருமாறு பரிதாபமாக கேட்டுள்ளனர்.இதில் சபலமடைந்த சாரதா லட்சுமி, அருகில் இருந்த நகை அடகு கடை சென்று ஒரு காசை பரிசோதித்து பார்த்தார் உள் ளார். அது தங்கம் என தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம பெண்கள் இருவரும் கடையை விட்டு வேகமாக வெளியேறி உள்ளனர்.இதனால் சாரதா லட்சுமிக்கு சந்தேகம் வரவே, நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு செல்போன் வாயிலாக தகவல் சொல்லி வரவழைத்து, நகையை பரிசோதித்ததில் நகைகள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைவீதி முழுவதும் அலைந்து திரிந்து மர்மப் பெண்களை தேடி உள்ளார். ஆனாலும் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.இச்சம்பவம் பற்றி சாரதா லட்சுமி துறையூர் போலீசில் புகார் செய்தார். துறையூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுக ளைக் கொண்டு, நூதன முறையில் பணம் பறித்துச் சென்ற மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.






