என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் இன்ஸ்பெக்டரின் ரோந்து வாகனம் பறிப்பு
    X

    பெண் இன்ஸ்பெக்டரின் ரோந்து வாகனம் பறிப்பு

    • திருச்சி சிறுகனூரில் ரோந்து செல்லாத பெண் இன்ஸ்பெக்டரின் ஜீப் பறிக்கப்பட்டுள்ளது
    • ஜீப்பை பறிமுதல் செய்து மாவட்ட எஸ்.பி.வருண்குமார் நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்றும், ரோந்து செல்வது இல்லை என்றும் புகார் எழுந்தது. அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அவரை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது சுமதி மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த போலீஸ் சூப்பிரண்டு ரோந்து செல்லாமல் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைப்பதற்கு போலீஸ் ஜீப் இனிமேல் தேவையில்லை உங்களுக்கு தேவையில்லை.உடனே அந்த ஜிப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இந்த நடவடிக்கை கடமையில் மெத்தனமாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×