என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுவுக்கு அடிமையான 2 தொழிலாளிகள் தற்கொலை
    X

    மதுவுக்கு அடிமையான 2 தொழிலாளிகள் தற்கொலை

    • திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மதுவுக்கு அடிமையான 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
    • திருமணமான 8 மாதத்தில் கணவர் இறந்ததால் இளம் பெண் தவிப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டத்தில் மதுவின் கொடுமையால் நாளும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மதுவால் உடல்நலம் குன்றி இறப்பது ஒரு பக்கம் இருக்க, மது குடிக்க குடும்பத்தினர் தடை போடுவதால் ஏற்படும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன.இந்த வகையில் திருவெறும்பூர் பகுதியில் தொழிலாளி ஒருவர் மது குடிக்க பணம் கிடைக்காததால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.திருவெறும்பூர் தெற்கு காட்டூர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் அந்தோணி (வயது 43). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சுரேஷ் அந்தோனியை மது பழக்கம் தொற்றிக்கொண்டதுமதுவுக்கு அடிமையான அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரது மனைவி புனிதா குடும்பம் நடத்த இயலாமல் தவித்தார்.இதற்கிடையே நேற்று சுரேஷ் அந்தோணி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கணவரை கண்டித்தார்.இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சுரேஷ் அந்தோணி யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.மனைவி அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.திருமணமான 8 மாதத்தில்மணப்பாறை அருகே உள்ள கே மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கதிர் மாலை கண்டன் (31). மதுவுக்கு அடிமையான இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துஷியாந்தினி என்கிற சிந்து (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்துக்குப் பின் கணவரின் சுயரூபம் கண்டு சிந்து வேதனை அடைந்தார். இருப்பினும் வேறு வழி இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.ஏற்கனவே கதிர் மாலை கண்டன் ஓரிருமுறை தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென கதிர்மலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.திருமணமான எட்டு மாதத்தில் கணவர் தற்கொலை செய்து விட்டதால் அவரை கரம் பிடித்த மனைவி செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.இது தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×