என் மலர்
உள்ளூர் செய்திகள்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த எஸ்.ஐ. சாவு
- ஓய்வு பெற்ற எஸ்.ஐ. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்
- அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானைந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
திருச்சி,
அரியமங்கலம் மலையப்ப நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 70). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். கடந்த 2011 ம் ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 26-ந் தேதி வரலட்சுமி பூஜை இவரது வீட்டில் நடத்தியுள்ளனர். அப்போது பழனிச்சாமி எதிர்பாராத விதமாக வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு காதில் இரத்தம் வந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானைந்தம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.






